Advertisment

Bharat Bandh 2019 : கோயம்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்

Bharat Bandh Today : ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ. உள்பட மொத்தம் 10 அமைப்புகள் வேலை நிறுத்தம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bharat Bandh 2019

Bharat Bandh 2019

Bharat Bandh 2019, General Strike in India : மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளை நடைமுறைப்படுத்துகிறது என்று குற்றம்சாட்டி, மத்திய தொழிற்சங்கங்கள் இன்று மற்றும் நாளை தேசிய அளவிலான வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன.

Advertisment

இந்த போராட்டத்தில் இடதுசாரி அமைப்புகளும், விவசாய அமைப்புகளும் இணைந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரு தினங்களிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்துவதற்கு போராட்ட அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

பிரதமர் மோடியின் அரசு விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பதில் தோல்வி அடைந்து விட்டதாக போராட்ட அமைப்புகளின் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., சி.ஐ.டி.யூ. உள்பட மொத்தம் 10 அமைப்புகள் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

இவற்றுக்கு மத்திய மாநில அரசு ஊழியர்களின் சங்கங்கள், வங்கி ஊழியர்கள் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதனால் இந்த பந்த் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Bharat Bandh 2019 : பாரத் பந்த் முழு விவரங்கள்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளால் விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை கண்டித்து 2 நாட்கள் பாரத் பந்த் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.00 PM : தமிழ்நாட்டில் கோயம்பத்தூரில், சிபிஐ(எம்) கட்சியினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்பத்தூர் சிபிஐ(எம்) செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் இப்போராட்டம் நடந்தது.

3.00 PM : கேரளாவில் வேனாட் எக்ஸ்பிரஸ், ஜன்ஷதாப்தி எக்ஸ்பிரஸ், மலபார் எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை மெயில் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம். போராட்டத்தின் காரணமாக பல ரயில்கள் சரியான நேரத்திற்கு வந்தடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2.00 PM : மும்பையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்

Bharat Bandh 2019

1:00 PM : பிடிஐ தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், மேற்கு வங்காளத்தில், பார்கனாஸ் மாவட்டம், பாரசாத் பகுதியில் பள்ளி பேருந்து மீது கற்கள் வீசப்பட்டது. இந்த சம்பவத்தால், சிபிஐ(எம்) தலைவர் சுஜன் சக்கரவர்த்தி உட்பட போராட்டத்தில் வன்முறையை கையில் எடுத்தவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

12:15 PM : கேரளாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேங்கலூர் - சென்னை எழும்பூர் வரும் ரயிலை மறித்து போராட்டம் செய்தனர். பயனூர் மற்றும் பரப்பனாங்கடி ரயில் நிலையங்களில் பல விரைவு ரயில்களை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

kerala Bharat Bandh January 2019

11:30 AM : தெலுங்கானாவில் மட்டும் சுமார் 20 லட்சம் பேர் இந்த 2 நாட்கள் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மருத்துவமனை போன்ற அவசர தேவை துறை மற்றும் ஊழியர்கள் இதில் அடங்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

11:00 AM : இந்த போராட்டத்தின் காரணமாக, இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் வங்கி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்கள் பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால், இந்த இடையூறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து முன்னதாகவே வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

10:37 AM : மும்பையில், BEST அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான பேருந்துகள் இயக்கமின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

mumbai Bharat Bandh January 2019

10:00 AM : டெல்லியில் பத்பர்கன்ச் பகுதியில் AICCTU அமைப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

9:30 AM : கேரளாவில், பம்பா பகுதியில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பேருந்துகளுக்கு காத்திருக்கின்றனர். CITU மற்றும் INTUC சார்பாக நடைபெறும் போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்றதால் ஓட்டுனர்கள் எண்ணிக்கையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

9:00 AM : கேரளா திருவநந்தபுரம் ரயில்வே நிலையத்தில் போராட்டக்காரர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

8:00 AM :  இந்த போராட்டத்துக்கு தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதில், தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பங்கேற்றால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது.

7:45 AM - ஓடிசாவில் உள்ள பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதேபோன்று, மும்பையின் பேருந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

7:30 AM - மேற்கு வங்கத்தில் பாரத் பந்த் நடைபெறாது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கடந்த 34 ஆண்டுகளாக பந்த் பந்த் என மேற்கு வங்கத்தை நாசம் செய்தது போதும். இங்கே ஒருவர் கூட பந்த்தில் கலந்து கொள்ள போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment