Advertisment

இஸ்லாமிய பேராசிரியருக்கு ஆதரவாக போராடும் இந்து பல்கலைக்கழக மாணவர்கள்!

இந்த கல்லூரியில் முதலில் அரபி, உருது, பெர்சிய மொழிப் பாடங்கள் கொண்ட வந்த பின்பு தான் இந்தி கொண்டு வரப்பட்டது. பேராசிரியருக்கு எதிரான போராட்டம் அவமானத்துக்குரியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BHU Sanskrit professor Firoze khan leaves

BHU Sanskrit professor Firoze khan leaves

Avaneesh Mishra

Advertisment

BHU Sanskrit professor Firoze khan leaves for home : வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராக பணியில் சேர்ந்தார் ஃபிரோஸ் கான். ஆனால் அவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் அவரின் நியமனத்துக்கு எதிராக மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பேராசிரியர் ஃபிரோஸ் கான் தன்னுடைய போன் நம்பரை ஸ்விட்ச் ஆஃப் செய்ததோடு மட்டுமின்றி பல்கலைக்கழகத்திற்கும் வருவதை தவிர்த்துவிட்டார்.

இந்நிலையில் சமஸ்கிருத துறைத்தலைவர் விந்தேஸ்வரி மிஸ்ரா ”டாக்டர் ஃபிரோஸ்கான் தற்போது தன்னுடைய சொந்த ஊரான ஜெய்ப்பூருக்கு சென்றுள்ளார்” என்று கூறினார். அவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அது உண்மையில்லை என்றும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் தன்னுடைய கருத்துகளை கூறும் போது , என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் சமஸ்கிருதம் கற்றேன். ஆனால் இஸ்லாமியர் என்பதால் அதற்கு தடையேதும் இல்லை. நான் தற்போது மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க வந்துள்ளேன். ஆனால் என்னுடைய பெயர் தற்போது பிரச்சனையாகியுள்ளது என்று அவர் அறிவித்தார்.

மேலும் படிக்க : ”என் வாழ்நாள் முழுவதும் நான் சமஸ்கிருதம் படித்தேன்… ஆனால்” – வருந்தும் பேராசிரியர் ஃபிரோஸ் கான்!

இந்நிலையில் ஃபிரேஸ்கானுக்கு ஆதரவாக அந்த பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று லங்கா நுழைவில் இருந்து ரவிதாஸ் நுழைவு வரை அமைதிப்பேரணி நடத்தினர். யூத் ஆஃப் ஸ்வராஜ், ஏ.ஐ.எஸ்.ஏ, என்.எஸ்.யூ.ஐ போன்ற அமைப்புகளில் இருந்து மாணவர்கள் வந்து இந்த போராட்டதை நடத்தினர். இது திட்டமிடாத ஒன்று தான். ஆனால் இந்த பிரச்சனை தீரவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்கள். மேலும் தங்களின் பதாகைகளில் “We are with you Dr Firoze Khan” என்று குறிப்பிட்டு பேராசிரியருக்கு தங்களின் ஆதாரவை தெரிவித்தார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக துணை வேந்தர் ராகேஷ் பாத்நகரிடம் மாணவர்கள் கேள்வி எழுப்பினார்கள். பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது ஃபிரோஸ்கானை துணை பேராசிரியராக நியமித்ததில் எந்த தவறும் இல்லை என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

பொலிட்டிகல் சயின்ஸ் படிப்பில் பி.எச்.டி படிக்கும் மாணவர் விகாஸ் சிங் கூறுகையில் “நாங்கள் ஃபிரோஸ்கானை, பண்டிதர் மதன் மோகன் மல்வியா உருவாக்கிய இந்து பல்கலைகழகத்திற்கு வரவேற்கின்றோம். போராட்டம் நடத்தும் மாணவர்களின் சாதியப்பற்று தான் இதில் தெரிகிறது. அவர்கள் உண்மையை உணர்ந்து விரைவில் போராட்டத்தை கைவிட வேண்டும். வெளியில் இருக்கும் அனைவருக்கும் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது. ஆனால் வெறும் 20 மாணவர்களின் கருத்து இந்த பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த கருத்தாக கொள்ளக்கூடாது” என்று அவர் கூறினார்.

இந்து பல்கலைக்கழத்தில் இதற்கு முன்பும் பல்வேறு முக்கிய தேவைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் ஒடுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத பேராசிரியர் விவகாரத்தில் மட்டும் இந்த போராட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது தெளிவாக தெரிகிறது. இந்த நிர்வாகம் அந்த மாணவர்களின் போராட்டத்திற்கு தலை வணங்கி நிற்கிறது. 2017ம் ஆண்டு 24 மணி நேரமும் நூலகம் செயல்பட வேண்டும் என்று கூறி அமைதி போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் 9 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். தற்போதோ மொத்த சமஸ்கிருத துறையும் 13 நாட்கள் செயல்படவில்லை. ஆனாலும் யாரும் எதுவும் கேட்கவில்லை என்றும் தெரிவித்தார் விகாஸ் சிங்.

துறைத்தலைவர் மிஸ்ராவிடம் பேசிய போது “இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் போராட்டம் முடிவுக்கு வரும். மாணவர்கள் சிலர் தவறுதலான வழிநடத்தலின் படி இது போன்று நடந்து கொள்கின்றனர். நான் அனைவரிடமும் பேசி வருகின்றேன். விரைவாக பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்படும்” என்று அவர் அறிவித்தார். அந்த பல்கலைகழகத்தின் இதர பேராசிரியர்களும் ஃபிரோஸ்கானுக்கு ஆதரவாக தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

சமூக அறிவியல் துறையின் பேராசிரியர் ஆர்.பி. பதக் பேசுகையில் தற்போது பேராசிரியருக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் அவமானத்துக்குரியது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த பல்கலைக்கழகத்தில் மதன் மோகன் மால்வியா முதலில் அரபி, உருது, பெர்சிய மொழிகளில் கல்வி திட்டத்தை கொண்டு வந்த பிறகு தான் இந்தி மொழிக்கான வாய்ப்புகள் இந்த வளாகத்தில் வழங்கப்பட்டது என்று. செலக்சன் கமிட்டியில் இருக்கும் அனைவரும் பிராமணர்கள் (துணை வேந்தரை தவிர). இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட அனைவரும் பிராமணர்கள். ஆனால் அவர்கள் அனைவரைக் காட்டிலும் ஃபிரோஸ்கான் தான் சிறப்பாக தேர்வில் வெற்றி பெற்றார். அவரை நினைத்து நாம் பெருமை தான் கொள்ள வேண்டும். ஆனால் நாம் அவரை அவமதிக்கின்றோம் என்று வருத்தம் தெரிவித்தார் பதக்.

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment