Advertisment

பீகார் அரசுக்கு சாதகமான உச்ச நீதிமன்ற தீர்ப்பு; நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நிதிஷ் அழைப்பு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால், சமூகத்தின் எந்தப் பிரிவினருக்கு கூடுதல் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை எப்படி தெரிந்துகொள்ள முடியும்- துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

author-image
WebDesk
New Update
Nitish kumar

Bihar CM Nitish kumar

பீகார் அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வெள்ளிக்கிழமை வரவேற்றனர்.

Advertisment

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மாநில அரசின் முடிவை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நிரூபித்துள்ளது என்று முதல்வர் கூறினார். பீகார் அரசைப் போன்று நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தேஜஸ்வி கோரினார்.

மக்களின் சமூக-பொருளாதார நிலையை ஆய்வு செய்வதற்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது, இதனால் அரசாங்கம் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் மேலும் செயல்பட முடியும். அனைத்து பீகார் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்று நிதிஷ் கூறினார்.

மேலும் துணை முதல்வர் தேஜஸ்வி கூறுகையில்; ஜாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களில் உச்ச நீதிமன்றம் எந்தத் தகுதியையும் காணாததால், மத்திய அரசு எங்களின் முன்மாதிரியைப் பின்பற்றி நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.  சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டால், சமூகத்தின் எந்தப் பிரிவினருக்கு கூடுதல் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை எப்படி தெரிந்துகொள்ள முடியும். கணக்கெடுப்பு பாரபட்சமானது என்று கூறிய பல மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது எங்களுக்கு கிடைத்த வெற்றி என்றார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் சந்தோஷ் பதக், இதற்கு கட்சி ஏற்கனவே ஆதரவளித்துள்ளது என்றார். சட்டசபையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் நாங்கள் அதை ஆதரித்து வருகிறோம். சிறுபான்மையினரிடமும் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் இருக்கிறோம்; அதனால் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்ட 'பஸ்மந்தாக்கள்’ இந்த உறுதியான செயல்பாட்டின் மூலம் நன்மை அடையலாம், என்று பதக் கூறினார்.

தற்போது, ​​முதற்கட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் கீழ், வீடுகள் மற்றும் ஆட்களை எண்ணும் பணி நடந்து வருகிறது. இரண்டாம் கட்டம், ஏப்ரல் மாதம் தொடங்கும். இதில் மக்களின் சாதி, பாலினம் மற்றும் மதம் கணக்கிடப்படும். இந்த நடவடிக்கையால் மாநில கருவூலத்துக்கு ரூ.500 கோடி செலவாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment