பிகார் மாநிலம் வைஷாலியில் ரயில் தடம் புரண்டு விபத்து... 6 பேர் பலி...

இன்று அதிகாலை 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அவசர உதவி எண்களை அளித்துள்ளது ரயில்வே...

Bihar Seemanchal Express derails : பிகார் மாநிலம் வைஷாலி அருகே அமைந்துள்ள ஷகாதை பஸ்ர்க் என்ற பகுதியில் சீமாஞ்சல் என்ற ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. விபத்தில் இதுவரை ஆறு நபர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயம்பட்டவர்களின் நிலையை அறிந்து கொள்ள ரயில்வே அமைச்சகம் அவசர உதவி எண்களை அளித்துள்ளது. விபத்தில் காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சோன்பூர் மற்றும் பாரௌனி பகுதியில் இருந்து மருத்துவர்கள் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்தனர்.

Bihar Seemanchal Express derails – அவசர உதவி எண்கள்

சோன்பூர் 06158221645,
ஹஜிப்பூர் 06224272230
பாரௌனி 06279232222

பட்னா

06122202290
06122202291
06122202292
06122213234

இந்த ரயிலில் பயணித்தவர்கள் பற்றிய உடனடி தகவல்களை அறிந்து கொள்ள இந்த எண்ணில் அழைத்து விபரங்களை அவர்களின் உறவினர்கள் அறிந்து கொள்ளலாம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close