கொரோனா தொற்று ஏற்பட்டால் மம்தாவை கட்டிபிடிப்பேன்; பாஜக தலைவர் அச்சுறுத்தல்

பாஜக தலைவர் அனுபம் ஹஸ்ரா தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைக் கட்டிப்பிடிப்பேன் என்று அச்சுறுத்தல் விடுத்திருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாஜக தலைவர் அனுபம் ஹஸ்ரா தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைக் கட்டிப்பிடிப்பேன் என்று அச்சுறுத்தல் விடுத்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் பாஜகவின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்ட அனுபம் ஹஸ்ரா, கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்ததையடுத்து அவரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனுபம் ஹஸ்ராவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்குப் பிறகு, பொதுமக்கள் தலைவரான ஒரு பெண்ணை இழிவுபடுத்தியதற்காக திரிணாமுல் காங்கிரஸ் அனுபம் ஹஸ்ரா மீது  போலீஸில் புகார் அளித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bjp leader anupam hazra threatened to hug mamata if he is infected tests positive for covid 19

Next Story
ஹத்ராஸ் வழக்கு : அத்தனை அவசரமாக சிதை மூட்டியது ஏன்? – அலகாபாத் நீதிமன்றம் கேள்வி!Day after police rushed her cremation Allahabad HC steps in asks officials to explain
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com