Advertisment

Amit Sha's Wayanad Speech: அமித் ஷாவை எதிர்க்கும் தேர்தல் அதிகாரி

Amit Sha's Wayanad Speech: தேர்தல் ஆணையத்துக்கு எதிராக காங்கிரசை சேர்ந்த பெண் எம்.பி சுஷ்மிதா தேவ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live Updates

Tamil Nadu News Today Live Updates

Amit Sha's Wayanad Speech: இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

Advertisment

இதற்காக தேசிய கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பிரதமர் மோடியும், பா.ஜ.க தலைவர் அமித்ஷாவும் தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறி புல்வாமா தாக்குதலையும், அதில் உயிர் நீத்த வீரர்களையும் பற்றி பேசி பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து தேர்தல் ஆணையத்தில் மூன்று பேரில் ஒரு அதிகாரி மட்டும் இவர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

”ராகுல் அவரது கூட்டணியின் கீழ் கேரளாவில் போட்டியிடுகிறார். அது இந்தியாவுக்குள்ளானதா இல்லை பாகிஸ்தானுக்கா எனத் தெரியவில்லை. அவரை வெளிக் கொண்டு வர முடியாது. உள்ளே சென்று விட்டார்” என்றார் அமித்ஷா.

வயநாட்டில் ராகுல் வேட்பு மனு தாக்கல் செய்த போது பச்சை நிறத்தில், அதிகளவில் முஸ்லீம் கொடிகளைப் பார்க்க முடிந்தது எனவும் குறிப்பிட்டார்.

ஆனால், அது பற்றி விசாரித்த தேர்தல் ஆணையம், 'இதில் தேர்தல் நடத்தை விதி மீறல் இல்லை' என சமீபத்தில் தெரிவித்தது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு எதிராக காங்கிரசை சேர்ந்த பெண் எம்.பி சுஷ்மிதா தேவ், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்திய போது, ஒருவர் மட்டும் எதிராக இருக்கிறார்.

ஏபரல் 1-ம் தேதி பிரதமர் மோடி வர்தாவில் பேசும் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மெஜாரிட்டி மக்களை பார்த்து பயப்படுகிறார். அதனால்தான் அவர் மைனாரிட்டி இருக்கும் வயநாட்டில் சென்று போட்டியிடுகிறார், என்று குறிப்பிட்டார்.

ஏப்ரல் 9-ம் தேதி பாலகோட் தாக்குதலைப் பற்றி பேசினார். லாத்துரில் அவர் பேசும் போது, ”நாம் நமது ராணுவ வீரர்களுக்காக வாக்களிக்க வேண்டும். முதல் தலைமுறை வாக்காளர்கள் ராணுவ வீரர்களை மனதில் வைத்தும், நாம் நடத்திய பாலக்கோடு தாக்குதலை நினைவில் கொண்டும் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதி மீறல் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா, கோவாவின் பஞ்சாயத்து ராஜ் மர்வின் கோடிங்கோ ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

 

 

 

Narendra Modi Amit Shah Election Commission
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment