Advertisment

முஸ்லிம் சமூகத்தை குறிவைத்த பா.ஜ.க: மோடி பிளான் என்ன?

முஸ்லீம் சமூகம் மீது கவனம் செலுத்த சொன்ன மோடி; பாஸ்மாண்டா முஸ்லீம்களின் ஆதரவை நெருங்கும் பா.ஜ.க; கவலையில் எதிர்க்கட்சிகள்

author-image
WebDesk
New Update
முஸ்லிம் சமூகத்தை குறிவைத்த பா.ஜ.க: மோடி பிளான் என்ன?

Lalmani Verma

Advertisment

BJP’s Pasmanda Muslims outreach plan after PM message a new worry for Oppn: கடந்த வார இறுதியில் ஹைதராபாத்தில் நடைபெற்ற பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில், அனைத்து சமூகங்களிலும் உள்ள "தாழ்த்தப்பட்ட மற்றும் பின் தங்கிய" பிரிவினரை அணுகுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, பா.ஜ.க பாஸ்மாண்டா (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) முஸ்லிம்கள் மீது கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதால், ஒருமுகப்படுத்துதலுக்கு மத்தியில் பா.ஜ.க கட்சிக்கு எதிராக முஸ்லீம் சமூகம் பெருமளவில் வாக்களிக்கும் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் எதிர்க்கட்சிகளுக்கு இந்த திட்டம் ஒரு புதிய கவலையை ஏற்படுத்துகிறது.

உத்திர பிரதேச பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், சமீபத்தில் நடந்த மாநில சட்டமன்றத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி (SP) மற்ற OBC அடிப்படையிலான பிராந்திய கட்சிகளுடன் வலுவான கூட்டணியைக் கொண்டிருந்தாலும், கிட்டத்தட்ட 8 சதவீத வாக்காளர்கள் பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக இருந்ததால், பாஸ்மாண்டா முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்கான நம்பிக்கை அக்கட்சிக்கு அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள்: ‘வளர்ச்சியும் இந்துத்வாவும் எங்கள் நோக்கம்’: ஏக்நாத் ஷிண்டே பிரகடனம்

"சட்டமன்றத் தேர்தலில், பாராபங்கி மாவட்டத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் ஒருவர், பாஸ்மாண்டா முஸ்லிம்களின் வாக்குகள் பா.ஜ.க.,வை நோக்கி மாறுவது குறித்து கவலையை எழுப்பி, அவர்களிடம் பேசச் சொன்னார்" என்று லக்னோவில் உள்ள பாஸ்மாண்டா முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி தலைவர் ஒருவர் கூறினார். மேலும், “நான் அங்குள்ள பாஸ்மாண்டா முஸ்லிம்களின் கிராமத்தை அடைந்தபோது, ​​பா.ஜ.க ஆட்சியில் தங்களுக்கு வீடுகள், இலவச ரேஷன்கள், கழிப்பறைகள், எல்.பி.ஜி சிலிண்டர்கள், குறைந்த கட்டணத்தில் மருத்துவ வசதிகள் கிடைத்ததாகவும், மற்ற கட்சிகள் தங்களுக்கு இதுபோன்ற விஷயங்களை வழங்கவில்லை என்றும் கிராம மக்கள் கூறினர். சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்கும்படி அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தேன் ஆனால் தோல்வியடைந்தேன். அவர்கள் குறைந்த கல்வியறிவு பெற்றவர்கள், எனவே அத்தகைய திட்டங்கள் அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது,” என்றும் அவர் கூறினார்.

பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்றதைக் கண்ட தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான கட்சியின் புதிய அரசாங்கம் டேனிஷ் ஆசாத் அன்சாரியை (பாஸ்மாண்டா முஸ்லிம்) அதன் ஒரே முஸ்லீம் அமைச்சராக ஏற்றுக்கொண்டது. முந்தைய ஆதித்யநாத் அமைச்சரவையில், ஒரே முஸ்லிம் அமைச்சராக இருந்தவர், முஸ்லீம் வகுப்பைச் சேர்ந்த மொஹ்சின் ராசா.

மேலும், உ.பி.யில் உள்ள சிறுபான்மையினர் தொடர்பான பல்வேறு வாரியங்கள் மற்றும் கல்விக்கூடங்களில், பா.ஜ.க அரசு தற்போது பாஸ்மாண்டா முஸ்லிம்களை நியமித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்தில் நடந்த உ.பி., சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 34 முஸ்லிம் எம்.எல்.ஏ.க்களில், 30 பேர் பாஸ்மாண்டா முஸ்லிம்கள்.

பாஸ்மாண்டா முஸ்லீம்கள் என்பது சமூக, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை உள்ளடக்கியது. நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் பாஸ்மாண்டாக்கள். பாஸ்மாண்டா தலைவர் ஒருவரின் கூற்றுப்படி, அன்சாரி, மன்சூரி, கஸ்கர், ரயின், குஜர், கோசி, குரேஷி, இத்ரிசி, நாயக், ஃபக்கீர், சைஃபி, அல்வி மற்றும் சல்மானி உள்ளிட்ட பல சாதிகள் பாஸ்மாண்டா முஸ்லிம் சமூகத்தின் ஒரு பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. பாஸ்மாண்டாக்கள் பொதுவாக நிர்ணயிக்கப்பட்ட தொழில்களை செய்கிறார்கள், சிறிய அளவிலான சாலையோர வணிகங்களை நடத்துகிறார்கள் மற்றும் சிறிய வருமானத்தில் வாழ்கின்றனர், என்று அந்த தலைவர் கூறினார்.

உ.பி.,யின் சிறுபான்மை மோர்ச்சா தலைவர் குன்வர் பாசித் அலி, மாநிலத்தில் நான்கு கோடி பாஸ்மாண்டா முஸ்லிம்கள் உள்ளனர் என்றும், மோடி அரசு மற்றும் ஆதித்யநாத் அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் பலன்களை அவர்கள் பெற்றுள்ளதாகவும், ஆனாலும் பா.ஜ.க.,வால் அவர்களை அணுக முடியவில்லை என்றும், சட்டமன்றத் தேர்தலின் போது அவர்களின் வாக்குகளை விரும்பியபடி பெற முடியவில்லை என்றும் கூறினார். உத்திரபிரதேச பா.ஜ.க.,வின் சிறுபான்மை மோர்ச்சாவில், 70 சதவீதத்துக்கும் அதிகமான நிர்வாகிகள் பாஸ்மாண்டா முஸ்லிம்கள்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் (ஆர்.எஸ்.எஸ்) துணை அமைப்புகளும் கல்வி மற்றும் நிதிப் பிரச்சனைகளால் ஒதுக்கப்பட்ட பாஸ்மாண்டா முஸ்லிம்கள் மீது கவனம் செலுத்த முயன்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன. உதாரணமாக, இத்தகைய அமைப்புகள் குறைந்த அளவிலான விவசாயத்தில் ஈடுபட்டுள்ள வான் குஜர்கள், முஸ்லீம் ராஜ்புட்கள் மற்றும் முஸ்லீம் ஜாட்கள் போன்ற பாஸ்மாண்டாக்களை "முக்கிய நீரோட்டத்திற்கு கொண்டு வர" முயற்சியில் ஈடுபட்டுள்ளன என்று ஆதாரங்கள் கூறுகின்றன.

“பாஸ்மாண்டா முஸ்லீம் இளைஞர்களிடையே மதக் கடும்போக்குவாதிகள் உள்ளனர், அவர்கள் மதகுருமார்களைப் பின்பற்றி அடிக்கடி வகுப்புவாத கலவரங்களில் பலியாகின்றனர். அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள், பின்னர் போலீஸ் நடவடிக்கையை எதிர்கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர் அரசாங்கத் திட்டங்களின் பலன்களைப் பெற்ற பிறகு கடுமையான கருத்துக்களை மாற்றி, இப்போது சமூகத்தின் முக்கிய நீரோட்டத்தில் சேர விரும்புகிறார்கள், ”என்று ஒரு பா.ஜ.க தலைவர் கூறினார்.

உ.பி.யை தளமாகக் கொண்ட சமூக அமைப்பான பாஸ்மாண்டா முஸ்லிம் சமாஜ் தலைவர் அனிஸ் மன்சூரி கூறுகையில், உ.பி.யில் பாஸ்மாண்டா முஸ்லிம்கள் பெரும்பாலும் சமாஜ்வாதி கட்சியை ஆதரிக்கின்றனர். இருப்பினும், பீகாரில், லாலு பிரசாத் தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி.,யையும், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஜே.டி(யு) கட்சியையும் பாஸ்மாண்டா சமூகம் ஆதரிக்கிறது, என்று கூறினார்.

முந்தைய அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், மன்சூரி மாநில அமைச்சர் பதவியை அனுபவித்தார். பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார் ஆனால் பின்னர் மீண்டும் சமாஜ்வாதி கட்சிக்கு திரும்பினார். பாஸ்மாண்டா முஸ்லிம்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், இந்த நோக்கத்திற்காக தனது அமைப்பு அர்ப்பணிப்புடன் உள்ளது என்று மன்சூரி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Muslim
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment