Advertisment

உ.பி மாடல்; கர்நாடகாவின் சிறிய ஓ.பி.சி சமூகங்கள் மீது கவனம் செலுத்தும் பா.ஜ.க

உத்திரபிரதேச மாடலை கர்நாடகாவிலும் கையில் எடுக்கும் பா.ஜ.க; சிறிய ஓ.பி.சி சமூகங்களிடையே ஆதரவு தளத்தை நீட்டிக்க முயற்சி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
உ.பி மாடல்; கர்நாடகாவின் சிறிய ஓ.பி.சி சமூகங்கள் மீது கவனம் செலுத்தும் பா.ஜ.க

Johnson T A

Advertisment

BJP tries UP model, woos smaller OBC groups in Karnataka: 2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் முயற்சியில், பா.ஜ.க, எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டணி இல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் (OBC) உள்ள துணைக் குழுக்களை அடையாளம் கண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான உத்தியை மேற்கொண்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடகாவில் உள்ள சிறு ஓ.பி.சி பிரிவினரால் போற்றப்படும் தெய்வத்தின் பெயரில் தும்கூர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு இருக்கை உருவாக்குதல், சிறப்பு பிரிவுகள், விடுதிகள் கட்டுதல், சிறிய OBC குழுக்களின் நலனுக்காக நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை அறிவித்தார்.

இதையும் படியுங்கள்: கொடியேரி பாலகிருஷ்ணன் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோவில் அனுமதி

உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் சமீப காலங்களில் பா.ஜ.க கடைப்பிடித்த உத்தியைப் போலவே இதுவும் உள்ளது, அங்கு மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ள யாதவர்கள் போன்ற ஆதிக்கக் குழுக்களுக்குப் பதிலாக சிறிய பிற்படுத்தப்பட்ட வகுப்புக் குழுக்கள் மீது பா.ஜ.க கவனம் செலுத்தியது.

கர்நாடகாவில் ஓ.பி.சி மக்கள் தொகை சுமார் 33% என மதிப்பிடப்பட்டுள்ளது, இவர்கள் பொதுவாக காங்கிரஸுக்கு வாக்களிப்பதாகக் கருதப்படுகிறது. பா.ஜ.க.,வின் பாரம்பரிய லிங்காயத் வாக்கு வங்கி மற்றும் தலித் மற்றும் பழங்குடி சமூகங்களின் ஒரு பகுதி ஆகியவற்றின் ஆதரவைத் தாண்டி, ஓ.பி.சி.,க்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட துணை சமூகங்களிடையே அதன் ஆதரவு தளத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பா.ஜ.க எண்ணுகிறது.

கர்நாடகாவில் உள்ள ஓ.பி.சி குழுக்களில் பெரிய குழு குருபாக்கள். மாநிலம் முழுவதும் பரவியிருக்கும் ஒரு பாரம்பரிய கால்நடை வளர்ப்புச் சமூகமான குருபா, OBC மக்கள்தொகையில் சுமார் 8%. குருபா சமூகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர்களாக குருபாக்கள் காணப்படுகின்றனர். இவர்களை கட்சியில் நீடிக்க வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பா.ஜ.க.,வின் முன்முயற்சிகள் குருபா அல்லாதவர்கள் மற்றும் பாரம்பரியமாக காங்கிரஸுக்கு வாக்களிக்காத பிற குழுக்கள் மீது கவனம் செலுத்துகின்றன.

ஆகஸ்ட் 26 அன்று, கர்நாடக அரசு தும்கூர் பல்கலைக்கழகத்தில் சென்னிகராய சுவாமியை வணங்கும் சமூகங்களின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக ஸ்ரீ சென்னிகராய சுவாமி ஆய்வு இருக்கையை விரைவில் அமைக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார். ஓ.பி.சி திகலா சமூகத்தினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய பசவராஜ் பொம்மை, திகலாக்களின் குலதெய்வமான அக்னி பன்னிராய சுவாமியின் பிறந்தநாள் இனி அரசால் கொண்டாடப்படும் என்று கூறினார்.

விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ள திகலா, மாலி, மாலாகரா, கின்பரா மற்றும் பிற ஓ.பி.சி சமூகத்தினரின் நலனுக்காக ரூ.400 கோடி அரசால் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.

இந்த ஓ.பி.சி சமூகங்களின் மேம்பாடு மற்றும் நலனில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக கர்நாடகா பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் ஒரு சிறப்புப் பிரிவை மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்றும் பசவராஜ் பொம்மை கூறினார். இந்தச் சமூகங்களுக்கான மாணவர் விடுதிகள் தும்கூர், பெங்களூரு ஊரக மற்றும் ராமநகர பகுதிகளில் ரூ.4.45 கோடியில் அமைக்கப்பட உள்ளது.

"நீங்கள் அரசியலில் நுழைய வேண்டிய அவசியமில்லை, ஆனால் உங்கள் சமூகத்தை வலுப்படுத்துபவர்களை ஆதரிக்க வேண்டும். ஜனநாயகத்தில், ஒவ்வொரு சமூகத்திற்கும் சமமான பங்கு உள்ளது மற்றும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அனைத்து சமூகங்களின் வளர்ச்சிக்கும் ஏன் வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்பதை சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது,'' என்று பசவராஜ் பொம்மை கூறினார்.

முன்னதாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, தும்கூர் பகுதியில் திகலா தெய்வமான அக்னி பன்னிராய சுவாமியின் பெயரில் கோயில் மற்றும் கலாச்சார மண்டபம் கட்டுவதற்கு நிலம் வழங்க முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் பேசுவதாகக் கூறினார்.

மாநில பட்ஜெட்டிலும், பல்வேறு சிறிய ஓ.பி.சி குழுக்களுக்கு ரூ.400 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment