‘பாஜக தலைவர்கள் திருமணம் செய்ய மாட்டர்கள்; ஆனால் கற்பழிப்பார்கள்’ – ஹேமந்த் சோரன் பரபரப்பு பேச்சு

பெண்களின் பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக பாஜகவுக்கு எதிராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன் இன்று (டிச.18) கூறுகையில், “ஆளும் கட்சியின் தலைவர்கள் பெரும்பாலும் திருமணம் செய்து கொள்வதில்லை. ஆனால், அவர்கள் காவி ஆடைகளை அணிந்துகொண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்” என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜார்க்கண்டின் பக்கூரில் நடந்த தேர்தல் பேரணியில் சோரன் தனது இந்த கருத்தை தெரிவித்தார். Hemant Soren, JMM in Pakur: Aaj desh mein bahut-betiyon ko […]

BJP’s saffron-clad leaders don’t marry, but rape women said Hemant Soren - 'பாஜக தலைவர்கள் திருமணம் செய்ய மாட்டர்கள்; ஆனால் கற்பழிப்பார்கள்' - ஹேமந்த் சோரன் பரபரப்பு பேச்சு
BJP’s saffron-clad leaders don’t marry, but rape women said Hemant Soren – 'பாஜக தலைவர்கள் திருமணம் செய்ய மாட்டர்கள்; ஆனால் கற்பழிப்பார்கள்' – ஹேமந்த் சோரன் பரபரப்பு பேச்சு

பெண்களின் பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக பாஜகவுக்கு எதிராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன் இன்று (டிச.18) கூறுகையில், “ஆளும் கட்சியின் தலைவர்கள் பெரும்பாலும் திருமணம் செய்து கொள்வதில்லை. ஆனால், அவர்கள் காவி ஆடைகளை அணிந்துகொண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்” என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஜார்க்கண்டின் பக்கூரில் நடந்த தேர்தல் பேரணியில் சோரன் தனது இந்த கருத்தை தெரிவித்தார்.


நாட்டில் பெண்கள் தீக்குளிக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் திருமணம் செய்து கொள்ளாத பாஜக தலைவர்கள், காவி உடை அணிந்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்… பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் அத்தகையவர்களுக்கு நாம் வாக்களிக்கலாமா?”, என்று அவர் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவும் பெண்களின் பாதுகாப்பு பிரச்சனையில் பாஜகவை குறிவைத்தார். பக்கூரில் நடந்த பேரணியில் உரையாற்றிய பிரியங்கா, “உ.பி.யில் ஒரு பாஜக எம்.எல்.ஏ பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். பாஜக அரசு எதுவும் சொல்லவில்லை, ஆனால் அந்த எம்.எல்.ஏவை பாதுகாத்தது. ஜார்க்கண்டிலும், ஒரு பாஜக வேட்பாளர் இதேபோன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார், மோடி ஜி அவருடன் மேடையை பகிர்ந்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bjps saffron clad leaders dont marry but rape women said hemant soren

Next Story
இந்தியா கேட்டில் தனக்குத் தானே தீ வைத்த 25 வயது வாலிபர்25-year-old man immolates self at India Gate - இந்தியா கேட்டில் தனக்குத் தானே தீ வைத்த 25 வயது வாலிபர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com