Advertisment

கேரளாவில் தடுப்பூசி போட்டவர்கள் மத்தியில் அதிகரிக்கும் கொரோனா

பொது சுகாதாரத்துறை நிபுணர் டாக்டர் என்.எம். அருண் இது குறித்து கூறுகையில், சமீபத்திய கொரோனா தொற்று குறித்த தரவுகள் தடுப்பூசிக்கு பிறகும் கொரோனா நெறிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டிய அவசியத்தைக் கூறுகிறது.

author-image
WebDesk
New Update
Kerala news, Coronavirus, Covid19

Shaju Philip

Advertisment

Breakthrough infections form chunk of Kerala Covid cases : திருப்புமுனை நோய்த்தொற்றுகள் அல்லது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று கேரளாவில் ஏற்பட்டுள்ள தினசரி தொற்றில் கணிசமான பகுதியை உருவாக்கியுள்ளது என்று அரசு தரப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் ஒரு சிறிய பகுதியினருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் படுக்கைகள் அல்லது ICU சேர்க்கை தேவைப்படுகிறது, ஏனெனில் தடுப்பூசி அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்டோபர் 19 முதல் நவம்பர் 2 வரை கடந்த 15 நாட்களில் கேரளாவில் 1,19,401 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. இவற்றில், 1,00,593 பேர் தடுப்பூசி போட தகுதி பெற்றுள்ளனர், அதில் 67,980 பேர் (57.9 சதவீதம்) ஒன்று அல்லது இரண்டு டோஸ்களையும் போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 40,584 (மொத்த எண்ணிக்கையில் 34.9 சதவீதம்). ஒரே ஒரு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 27,396 (மொத்த எண்ணிக்கையில் 22.9 சதவீதம்). மற்றவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.

கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் இது போன்ற தொற்று ஏற்படும் என்று எதிர்பார்த்தோம் என்று கூறினார். மேலும் கொரோனா தடுப்பூசி தொற்றின் தீவிரத்தை குறைக்கும் என்பதை நிரூபித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஒரு வாரத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் 77, 516 நபர்களில் 2% பேருக்கு மட்டுமே ஆக்ஸிஜன் படுக்கைகள் தேவைப்பட்டது. 1.5% பேருக்கு மட்டுமே ஐ.சி.யு படுக்கைகள் தேவைப்பட்டது.

மாநிலம் இதுவரை 95 சதவீத தகுதியுள்ள மக்களுக்கு முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் அவர்களில் 52 சதவீதம் பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.

தற்போது, இந்தியாவில் தினசரி வழக்கு எண்ணிக்கையில் 50 சதவீதம் கேரளாவில் இருந்து பதிவாகி வருகிறது, இது நாட்டில் செயலில் உள்ள வழக்குகளில் 45 சதவீதம் ஆகும்.

கேரளா மாநிலத்தின் சமீபத்திய செரோபிரேவலன்ஸ் கணக்கெடுப்பின்படி நோய்த்தொற்றை விட தடுப்பூசி மூலம் முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளது. மற்ற பல மாநிலங்களில், ஆன்டிபாடிகள் அதிகமாக பரவுவது பரவலான நோய்த்தொற்றின் காரணமாக இருந்தது என்று வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மத்தியிலும் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் மரணங்கள் அவர்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே உள்ளது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் இறந்த நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் வயதானவர்கள். மேலும் கடுமையான இணை நோய் பாதிப்புகளை கொண்டிருந்தனர் என்று அவர் கூறினார்.

இந்த நாட்களில் பாதிப்புக்கு ஆளானவர்களில் முதல்முறையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவப் பணியார்களும் இடம் பெற்றுள்ளனர். அது மட்டுமின்றி, தடுப்பூசி அனைத்து பிரிவு மக்களிடையே தவறான நம்பிக்கையை அளித்துள்ளது, பலரை கோவிட் நெறிமுறைகளை கைவிட தூண்டுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாநில நிபுணர் குழுவில் பங்கு பெற்றிருக்கும் டாக்டர் டி.எஸ். அனீஷ் சுகாதாரப் பணியாளர்கள், முன்னணி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்கள் முதன்முறையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்று கூறினார்.

முழு தடுப்பூசி போடப்பட்டவர்களிடையே நோய்த்தொற்று பற்றிய தரவு, முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறதா என்று சந்தேகிக்க ஒரு காரணமாக அமைந்துள்ளது. மற்றொரு காரணம் என்னவென்றால் சுகாதாரப் பணியாளர்களால் எளிமையாக சோதனைகளை அதிக அளவில் அணுக முடிகிறது என்றும் கூறினார்.

கொரோனா தொற்று இயற்கையாக ஏற்படும் மாநிலங்கள் மற்றும் இடங்களில் திருப்புமுனை தொற்றுக்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

இயற்கையான நோய் தொற்றில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதற்கு பதிலாக கேரளாவில் பெரும்பாலானோர் தடுப்பூசி மூலமே பெற்றுள்ளனர். திருப்புமுனை தொற்று சுகாதார அமைப்பின் செயல்திறனைக் காட்டுகிறது. தடுப்பூசிக்குப் பிறகு ஏற்படும் நோய்த்தொற்றுகளில், அறிகுறிகள் மிகவும் லேசானதாக இருக்கும். லேசான அறிகுறிகளுடன் கூடிய இதுபோன்ற வழக்குகளை பயனுள்ள சோதனை உத்திகள் மூலம் மட்டுமே கண்டறிய முடியும் என்று அனீஷ் கூறினார்.

பொது சுகாதாரத்துறை நிபுணர் டாக்டர் என்.எம். அருண் இது குறித்து கூறுகையில், சமீபத்திய கொரோனா தொற்று குறித்த தரவுகள் தடுப்பூசிக்கு பிறகும் கொரோனா நெறிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டிய அவசியத்தைக் கூறுகிறது. தடுப்பூசிகள் நோய்த்தொற்றின் தீவிரத்தை குறைக்கின்றன. தடுப்பூசியின் செயல்திறன் நோய்த்தொற்றில் இருந்து காப்பதை விட நோய்த்தொற்றின் தீவிரத்தை குறைப்பதில் தொடர்புடையது என்றும் அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment