mi-17 chopper crash : இந்திய விமானப் படை விமானம் விபத்துக்குள்ளானது

Budgam mi-17 chopper crash : பட்கம் கிராமத்தில் உள்ள கிரேண்ட் கலன் என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் இரண்டு விமானிகள் பலியாகி இருக்க...

Budgam mi-17 chopper crash : இந்திய விமானப் படையின் எம்.ஐ – 17 சாப்பர் விமானம், ஜம்மு காஷ்மீரில் உள்ள பட்கம் என்ற இடத்தின் இன்று காலை விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்திற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. காலை 10.40 மணியளவில் கேரண்ட் கலன் கிராமத்தில் உள்ள பட்கா என்ற இடத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் இரண்டு பேர் பலியாகி இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதில் ஒருவர் பொதுமக்களாக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.

முழு விவரங்களுக்கு காத்திருக்கவும்…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close