Advertisment

குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை - மூவர் பலி

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடியவர்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில், மங்களூரில் குறைந்தது இரண்டு பேர் இன்று கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CAA Protest 3 dead as protests turn violent - குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை - மூவர் பலி

CAA Protest 3 dead as protests turn violent - குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை - மூவர் பலி

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

Advertisment

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. டெல்லி ஜாமியா நகரில் காங்கிரஸின் தேசிய மாணவர் கூட்டமைப்பு, ஜாமியா மிலியா இஸ்லாமிய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து போலீஸார் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்து தடியடி நடத்தினர்.

கிழக்கு டெல்லியில் சீலாம்பூரில் உள்ள ஜாபர்பாத் பகுதியில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்திலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

மேலும் படிக்க - 'போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் சொத்துகளை ஏலத்தில் விடுவோம்; அரசு பழி வாங்கும்' - உ.பி. முதல்வர் எச்சரிக்கை

இந்தநிலையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் இன்று போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால், டெல்லி, அசாம், கர்நாடகா, பிஹார், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. டெல்லியில் பல இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

குர்ஹான், காசியாபாத் உட்பட டெல்லியைச் சுற்றியுள்ள பிற மாநில பகுதிகளில இருந்து வாகனங்கள் உள்ளே வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டை உட்பட சில இடங்களில் கடுமையான தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடியவர்களுக்கும் போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில், மங்களூரில் குறைந்தது இரண்டு பேர் இன்று கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பி.எஸ்.ஹர்ஷா, ஐ.சி.யுவில் இரண்டு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 20 காவல்துறையினர் காயமடைந்ததாகவும் தெரிவித்தார். லக்னோவில், ஆர்ப்பாட்டங்கள் நடந்த போது ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் கொல்லப்பட்டார். இருப்பினும், அவர் யாருடைய துப்பாக்கிச் சூட்டில் இருந்து இறந்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. போலீஸ் தரப்பில் இருந்து துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தப்படவில்லை என்று டிஜிபி மறுத்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment