Advertisment

சீன விவகாரம் குறித்து ஜெயசங்கருடன் பலமுறை பேசினேன் - மைக்கேல் பாம்பியோ

”எல்லைகளில் பிரச்சனைகளை உண்டாக்கவே ஒரு யுக்தியை கையாளுகிறது பெய்ஜிங்” அமெரிக்கா குற்றாச்சாட்டு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Called Jaishankar several times, China action incredibly aggressive: Michael R Pompeo

Called Jaishankar several times, China action incredibly aggressive: Michael R Pompeo

Shubhajit Roy

Advertisment

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் ஆர். பாம்பியோவிற்கும் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கருக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெற்றது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. அந்த செய்தி வெளியான மூன்று நாட்களிலேயே மைக்கேல் பாம்பியோ புதன்கிழமை அன்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சருடன் தொலைபேசியில் பேசியதை உறுதி செய்துள்ளார். தொலைபேசியில் பலமுறை பேசியுள்ளேன் என்று குறிப்பிட்ட அவர், சீனப்படையினர் மிகவும் ”மோசமான நடவடிக்கைகளை எல்லை பகுதியில் மேற்கொண்டனர்”, “அதற்கு பதிலடி தரும் வகையில் தக்க முறையில் இந்தியா நடந்து கொண்டது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

தற்போது பூட்டான் நாட்டுனான எல்லை பிரச்சனை குறித்து பேசிய அவர் “சீன தலைநகர் பெய்ஜிங், எல்லை பிரச்சனைகளை உருவாக்கவே ஒரு பேட்டர்னை வைத்துக் கொண்டு செயல்படுகிறது” என்றார். இது போன்று பிரச்சனையை வளர்க்கும் மனப்பான்மையை ஒரு போதும் ஆதரிக்கவோ, தொடர்ந்து வளர, அனுமதிக்கவோ கூடாது என்றும் வாசிங்டனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார் மைக்கேல் பாம்பியோ.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான நிலைமை குறித்து கேட்டதற்கு, “இது குறித்து நான் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் பலமுறை பேசியுள்ளேன். சீன படையினர் நம்பமுடியாத அளவில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்; அதற்கு பதிலளிக்க இந்தியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளனர். ”

லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் சீன மற்றும் இந்திய துருப்புக்களுக்கு இடையிலான ஜூன் 15 மோதலுக்குப் பிறகு, இரு தரப்பினருக்கும் இடையே பதற்றம் உச்சத்தில் இருந்தபோது, பாம்பியோ ஜெய்சங்கரை அழைத்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜூலை 5 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. மார்ச் முதல் குறைந்தது மூன்று முறையாவது பாம்பியோ மற்றும் ஜெய்சங்கர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர், ஆனால் ஜூன் பிற்பகுதியில் கால்வனில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய படையினர் கொல்லப்பட்டனார்.

ஜூன் 22 முதல் 24 வரை இந்தியா மற்றும் சீன தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தது. பாம்பியோ புதன்கிழமை பேசும் போது ”சீனா அதிபர் சி ஜின்பிங் மற்றும் இந்த பிராந்தியத்தில் அவருடைய செயல்பாடுகள் ஆகியவற்றை அறிந்த பிறகு இதனை முன்வைக்கின்றேன். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த ஒரு எல்லை மீறலை மட்டும் தனித்து பார்க்க இயலாது. இதனை பெரிய அளவில் வைத்து பார்க்க வேண்டும். இதற்கு முன்பு நான் அங்கு இருக்கும் போது, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கடல் மற்றும் எல்லை மீறல்களின் எண்ணிக்கை குறித்து பேசினோம்.

உலகின் மற்ற எந்த இடத்திலும் இல்லாத அளவிற்கு இந்த பிரச்சனைகள் இருக்கிறது என்று நினைக்கின்றேன். தங்கள் நாட்டின் இறையான்மை எங்கே முடியும் என்று திருப்திகரமாக சொல்லக் கூடிய அண்டை நாடுகளும், அந்நாடுகளின் இறையாண்மையை மதிக்கும் நிலையில் சீனா இருக்கிறது என்றும் நிச்சயமாக கூற இயலாது. இது தற்போது பூட்டான் விசயத்தில் உண்மையாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இது போன்ற விவகாரத்தில் தான் உலக நாடுகள் மொத்தமாக பதிலளிக்க வேண்டும். தொடர்ந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி எல்லை திருத்தத்தில் செயல்பட்டு வருவதை அமெரிக்க அதிபர் தீவிரமாக கையில் எடுத்துள்ளார் என்றும் அவர் மேற்கோள்காட்டினார். இதற்கு முந்தைய ஆட்சி காலத்தின் போது இப்படி நாங்கள் செய்யவில்லை. ஆனால் தற்போது இந்த நடவடிக்கைகளுக்கு தக்கவாறு நாங்கள் பதில் அளித்துள்ளோம். இது தொடர்பாக நாங்கள் சீனத் தலைமையுடன் பேச முற்பட்டோம்.

மேலும் படிக்க : பிரபல சீரியலுக்கு விரைவில் எண்ட் கார்டு போடுகிறதா சன் டிவி?

சீனாவிற்கும் பூட்டானுக்கும் இடையேயான நில பிரச்சனை குறித்து பேசிய போது கிழக்கு பூட்டானில் உள்ள சாக்டெங் வனவிலங்கு சரணாலயத்தை பெய்ஜிங் தனது சொந்த பிரதேசமாக அறிவித்த சில நாட்களுக்கு பிறகு பூடான் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அடுத்த முறை ஏதாவது எல்லைப் பிரச்சனை வரும் போது அதற்கு பதில் அளிக்க திட்டம் தீட்டி வருகின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.

முந்தைய 24 சுற்று எல்லை பேச்சுவார்த்தைகளில் ஒரு போதும் பூட்டானிய நிலப்பரப்பு குறித்த பேசவில்லை என்பதால் பெய்ஜிங்கின் சமீபத்திய கூற்றுக்கள் டெல்லியில் கணிசமான அளவு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

India China Ladakh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment