Advertisment

சிபிஐக்கு மாநில அரசுகள் தடை விதித்தால் என்ன நடக்கும்?

சிபிஐக்கு அளித்த பொது ஒப்புதலை வாபஸ் பெறுவது இது முதல் முறையல்ல !

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBI General Consent, சிபிஐ பொது ஒப்புதல், சிபிஐ அறிக்கை, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம்

CBI General Consent

தீப்திமன் திவாரி

Advertisment

CBI General Consent : சிபிஐயின் அதிகாரத்தினை தங்களின் மாநில எல்லைகளுக்குள் இருந்து நீக்கி உத்தரவிட்டது ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம்.  வெள்ளிக் கிழமையன்று ஆந்திரா மற்றும் மேற்குவங்கம் மாநிலங்களில், இதுவரை மத்திய புலனாய்வுத் துறைக்கு அளித்து வந்த அங்கீகாரத்தினை ரத்து செய்து அறிக்கை சமர்பித்தது.

இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, மத்திய புலனாய்வுத் துறையின் மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். மேலும் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளின் மத்தியில் நிலவி வரும் அதிகாரப் போர் அதற்கு முக்கிய காரணமாகும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றது அம்மாநிலங்கள்.

மேலும் மத்திய புலனாய்வுத் துறையின் அதிகாரங்களை மத்திய அரசு எதிர்க்கட்சிகள் மீது தவறாக பயன்படுத்தி வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து முழுமையான செய்திகளைப் படிக்க

CBI General Consent - மாநில அரசின் ஆதரவு எதற்கு தேவைப்படுகிறது ?

நடுவண் புலனாய்வுச் செயலகம் (CBI) தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency) போல் இந்தியா முழுமையும் அதிகாரம் பெற்ற அமைப்பு இல்லை. நடுவண் புலனாய்வு செயலகம் அல்லது மத்திய புலனாய்வுத் துறையின் கட்டுப்பாடுகள், அதிகாரங்கள் மற்றும் விசாரணைகள் அனைத்தும் டெல்லியின் கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே செல்லுபடியாகும். சிபிஐ - யின் செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களையும் பட்டியலிட்டிருக்கும் சட்டம் தான் டெல்லி சிறப்பு காவல் சட்டம் 1946, பிரிவு 6.

சிபிஐயின் விசாரணை இரண்டு வகைகளாக நடைபெறும். ஒன்று வழக்கின் தன்மையை பொறுத்து, மற்றொன்று பொது வழக்குகள். எது எப்படியாக இருந்தாலும், சிபிஐயின் அதிகாரமானது மத்திய அரசின் கீழ் வரும் துறைகள் மற்றும் அதன் அதிகாரிகளை விசாரிக்க மட்டுமே. ஆனால் மாநில அரசின் அதிகாரிகள் மற்றும் துறை சார் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு மாநில அரசின் பொது ஒப்புதல் தேவை.

பொது ஒப்புதல் என்பது, மாநில வரம்புகளுக்குள் இல்லாத அனைத்து மத்திய அரசின் கீழ் வரும் அனைத்து துறைகளிலும் விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு உரிமை உள்ளது. எடுத்துக்காட்டாக தெற்கு ரயில்வே தொடர்பாக மதுரையில் இருக்கும் ரயில்வே அதிகாரியை விசாரிக்க சிபிஐக்கு எந்த தடையும் இல்லை. பொது ஒப்புதல் வாபஸ் பெறப்பட்டால், ஒவ்வொரு வழக்கிற்கும் தமிழக அரசிடம் சிபிஐ அனுமதி பெற வேண்டும்.

பொது ஒப்புதலை (CBI General Consent) வாபஸ் பெற்றால் என்ன நடக்கும் ?

சிபிஐக்கு அளித்த பொது ஒப்புதலை மாநில அரசுகள் வாபஸ் பெற்றால், மாநில அரசின் அனுமதியின்றி யார் மேலும் சிபிஐ வழக்கு பதிவு செய்யல் இயாலது. மாநில எல்லைகளுக்குள் தங்களின் அதிகாரங்களை முற்றிலும் இழக்க நேரிடும் நிலை தற்போது ஆந்திராவிலும் மேற்கு வங்கத்திலும் சிபிஐக்கு ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவில் கொடுக்கப்பட்ட அறிக்கை

அரசு உத்தரவு எண் 176, ஆந்திர மாநில உள்துறை அமைச்சகத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்டது. பிரின்சிபல் செக்கரட்ரி ஏ.ஆர். அனுராதா, நவம்பர் 8ம் தேதி அளித்த உத்தரவின் படி “மாநில அரசு இதுவரை அளித்த டெல்லி சிறப்பு காவல்ச் சட்டத்திற்கு அளித்து வந்த ஆதரவினை திரும்பப் பெறுவதாக” தகவல் இடம் பெற்றிருந்தது.

CBI General Consent சிபிஐக்குத் தடை : ஆந்திர அரசு வெளியிட்ட அறிக்கை

இரண்டு மாநிலங்களிலும் நிலுவையில் இருக்கும் சிபிஐ வழக்குகள் என்னவாகும் ?

இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எந்த தொய்வுமின்றி சிறப்பாக நடைபெறும். நிலுவையில் இருக்கும் வழக்குகள் தொடர்பாக ரெய்டுகள், சோதனைகள், மற்றும் விசாரணைகள் நடைபெறுவதற்கு எந்த தடையும் இல்லை. சிபிஐ எப்போதும் விசாராணைக்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தான் இப்போதும் மேற்கொள்ளும் நீதிமன்றங்களில் சர்ச் வாரண்ட்கள் வாங்கி, அந்த வழக்கு தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

புதியதாக விசாராணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகளை சிபிஐ ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநில நீதிமன்றங்களில் பதிய இயலாது. ஆனால் டெல்லி நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்து, தங்களின் விசாரணையை இரண்டு மாநிலங்களிலும் மேற்கொள்ள தடையேதும் இல்லை.

மாநில அரசின் வரம்பிற்கு உட்பட்டு இந்த இரண்டு மாநிலங்களில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மீதான விசாரணையை இந்த பொது ஒப்புதல் வாபஸ் மூலம் தடுக்கலாம் என்று நினைப்பது மிகவும் தவறாகும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை கைது செய்து விசாரணை மேற்கொள்ள சிபிஐக்கு அதிகாரம் இருப்பதாக சிபிஐ அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

சிபிஐக்கு அளித்த பொது ஒப்புதலை வாபஸ் பெறுவது இது தான் முதல் முறையா ?

இல்லை. ஏற்கனவே சிக்கிம், சட்டீஸ்கர், நாகலாந்து மற்றும் கர்நாடகா மாநிலங்கள் இதற்கும் முன்பு சிபிஐக்கு அளித்த பொது ஒப்புதலை வாபஸ் பெற்றுள்ளனர். ஜனதா தளம் 1998ம் ஆண்டு ஜனதா தளம் ஆட்சியின் போது ஜே.எச். பாட்டேல் கர்நாடகாவில் பொது ஒப்புதலை வாபஸ் பெற்றனர்.

1999ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போதும் அந்த வாபஸ் அப்படியே தொடர்ந்தது. இது குறித்து மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில் சிபிஐயின் பொது ஒப்புதலானது கடந்த 8 வருடங்களாக மாற்றமின்றி அப்போது தொடர்ந்தது. ஒவ்வொரு வழக்கிற்கும் மாநில அரசின் ஒப்புதலை பெற்று தான் சிபிஐ விசாரணை நடத்தியது என்று கூறினார்.

West Bengal Cbi Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment