Advertisment

Centre vs CBI விவகாரம் : ராகேஷ் அஸ்தானாவின் மனுவினை அக்டோபர் 29ம் தேதி விசாரிக்க முடிவு

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எஸ்.கே. கவுல், ஏ.எம் ஜோசப் இந்த வழக்கினை விசாரணை செய்து உத்தரவு...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அலோக் வர்மா விவகாரம் உச்ச நீதிமன்றம் விசாரணை, ராகேஷ் அஸ்தானா, CBI Director Alok Verma

CBI Chief Alok Verma leavs the Home Ministry after a meeting in New Delhi on tuesday. The CBI chief works from the North Block every Tuesdays and Thursdays. Express Photo by Tashi Tobgyal 231018

அலோக் வர்மா விவகாரம் உச்ச நீதிமன்றம் விசாரணை : சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர் இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார்களை பதிவு செய்து வந்த நிலையில் இருவரையும் பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது மத்திய அரசு. இதனைத் தொடர்ந்து சிபிஐ இயக்குநர் விசாரணை செய்து வந்த வழக்குகள் அனைத்தையும் சிபிஐ அதிகாரி நாகேஷ்வர ராவ் விசாரிப்பார் என்றும் உத்தரவிட்டது மத்திய அரசு.

Advertisment

மேலும் படிக்க : சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா விசாரணை செய்து வந்த வழக்குகள்

மத்திய அரசின் நடவடிக்கைகளை தொடர்ந்து, கட்டாய விடுப்பினை ஏற்க இயலாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் சிபிஐ அதிகாரி அலோக் வர்மா. அவரின் மனுவினை இன்று விசாரணை செய்கிறது உச்ச நீதிமன்றம். To read this article in English\

அலோக் வர்மா விவகாரம் உச்ச நீதிமன்றம் விசாரணை Live Updates

02 : 45 : லோதி காவல் நிலையத்தில் இருக்கும் ராகுல் காந்தி

ராகுல் காந்தியை கைது செய்த காவல் துறையினர் அவரை லோதி காவல் நிலையத்தில் தங்க் வைத்துள்ளனர்.

 

02:00 PM : கைது செய்யப்பட்டார் ராகுல் காந்தி

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆர்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார் ராகுல் காந்தி. அதில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் . இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க

01: 55 PM : உச்ச நீதிமன்ற உத்தரவினை வரவேற்கிறேன் - அருண் ஜெட்லி

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உச்ச நீதிமன்றம்  இன்று அளித்த உத்தரவினை வரவேற்கிறேன் என்று கூறியிருக்கிறார். விசாரணைக்கான கால அவகாசம் அளிக்கப்பட்டு நீதிமன்றத்தின் மாண்பை காத்திருக்கிறது. மேலும் சிபிஐ அதிகாரிகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என அவர் கூறியிருக்கிறார்.

12 : 15 PM : மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மோடியின் காவலர்கள் போல் வேலை செய்ய முடியாது - காங்கிரஸ்

இன்று அலோக் வர்மா விவகாரத்தில் விசாரணை செய்ய உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பினை வரவேற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜ்வாலா “சிபிஐயின் சுதந்திரத்தை கட்டுப்படுத்த நினைத்த கொடுங்கோல் ஆட்சி செய்பவர்களுக்கு விழுந்த அடி இது. சிவிசி எனப்படும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மோடியின் காவலாளிகள் போல் செயல்பட இயலாது” என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

12:05 PM : மறு விசாரணை தேதி அறிவிப்பு

அலோக் வர்மா நீக்கப்பட்டதன் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 12ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

12:00 PM : நாகேஷ்வர ராவ் எடுத்த நடவடிக்கைகள்

நாகேஷ்வர ராவ் தான் பொறுப்பேற்றதில் இருந்து இன்றைய தேதி வரை செய்த வேலைகள் குறித்த அறிக்கை ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு.

11:40 AM : ராகேஷ் அஸ்தானாவின் வழக்கினை விசாரிக்க மறுப்பு

அலோக் வர்மா போன்றே ராகேஷ் அஸ்தானாவும் தன்னுடைய பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தார். ஆனால் அதனை விசாரணை செய்ய மறுத்துவிட்டது அமர்வு. முன் கூட்டியே மனுவினை அளித்திருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

11: 35 AM : பத்து நாட்களுக்குள் விசாரணை செய்து முடிவினை சமர்பிக்க CVCக்கு உத்தரவு

அலோக் வர்மாவின் வழக்கினை பார்வையிட்ட நீதிபதிகள், அலோக் வர்மா மீது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து 10 நாட்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையினை சமர்பிக்க மத்திய  ஊழல் தடுப்புப் பிரிவிற்கு உத்தரவிட்டார் ரஞ்சன் கோகய். அதுவரை புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நாகேஷ்வர ராவ் எந்த வழக்கினையும் விசாரிக்கவோ, முடிவுகள் மேற்கொள்ளவோ கூடாது என உத்தரவு.

11:30 AM : தொடங்கியது விசாரணை

அலோக்  வர்மா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நரிமன் “அலோக் வர்மாவின் பதவி காலம் இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கின்றது. மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் மத்திய அமைச்சகத்தின் உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது” என்று விளக்கம்.

10: 55 AM : மற்ற வழக்குகளை போல் இதுவும் சாதாரண வழக்கு தான் முகுல் ரோஹட்கி

10:45 AM - விசாரணை மேற்கொள்ள இருக்கும் நீதிபதிகள்

மூவர் கொண்ட அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கினை விசாரிக்க உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எஸ்.கே. கவுல், ஏ.எம் ஜோசப் இந்த வழக்கினை விசாரிக்க உள்ளனர். இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களில் ஒருவரான நரிமன் அலோக் வர்மாவிற்காக வாதாட உள்ளார்.

ராகேஷ் அஸ்தானா சார்பில் வாதட முகுல் ரோஹட்கி உள்ளார்.

10: 30 AM  - காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவிடம் காங்கிரஸ் கட்சியினர் அக்டோபர் 4ம் தேதி ரபேல் போர் விமான ஒப்பந்த பேரத்தில் ஊழல் நடந்திருப்பதாக புகார் ஒன்றை அளித்தனர். அதனைத் தொடர்ந்து தான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு சிபிஐ அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட இருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்திருக்கிறார்.

10:15 AM : நீதிமன்றம் செல்ல தயாரான ராகேஷ் அஸ்தானா

அலோக் வர்மாவைப் போல் ராகேஷ் அஸ்தானாவும் உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.  உச்ச நீதிமன்றம் செல்வதற்காக வழக்கறிஞர் முகுல் ரோஹட்கி வீட்டில் இருந்து கிளம்பினார் ராகேஷ் அஸ்தானா.

Narendra Modi Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment