சிபிஎஸ்இ தேர்வில் வெற்றிபெற்ற "இளைய தோழமைகளுக்கு" வாழ்துக்கள்: பிரதமர் மோடி

மாணவர்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் படித்த 10,98,891 பேர் எழுதினர். மாணவர்கள் 6,38,865 பேரும், மாணவிகள் 4,60,026 பேரும் தேர்வெழுதியிருந்தனர். இந்நிலையில், சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

இந்நிலையில், நொய்டாவில் உள்ள அமிட்டி இன்டர்நேஷனல் பள்ளி மாணவி ரக்‌ஷா கோபால் 99.6 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார். சண்டிகரைச் சேர்ந்த புமி சாவந்த் 99.4 சதவீத மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளின் சதவீதம் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு சற்று குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 83.05 சதவீதம் என்றிருந்த தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 82 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளதாவது: சிபிஎஸ்இ தேர்வில் வெற்றி பெற்ற எனது இளைய தோழமைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மாணவர்களின் எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

×Close
×Close