சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா : லஞ்ச ஊழல் வழக்கு தொடர்பாக ராகேஷ் அஸ்தானாவால் புகார் செய்யப்பட்ட புலனாய்வுத் துறை இயக்குநர் அலோக் வர்மா விடுப்பில் அனுப்பப்பட்டார். துணை இயக்குநராக செயல்பட்டு வந்த நாகேஷ்வர ராவ் இயக்குநர் பொறுப்புகளை கூடுதலாக கவனிப்பார் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.
இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷி மீதான வழக்கு ஒன்றில் ஐதராபாத்தைச் சேர்ந்த சனா பாபு என்ற தொழில் அதிபரை விடுவிப்பதற்காக 2 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றார் என சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கினை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார் ராகேஷ் அஸ்தானா.
மத்திய அரசின் அறிக்கை
/tamil-ie/media/media_files/uploads/2018/10/whatsapp-image-2018-10-24-at-07-46-59-1.jpg)
சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா பதவி நீக்கம்
மேலும் தன்னுடைய மூத்த அதிகாரி அலோக் வர்மா மீது லஞ்சம் வாங்கியதாக புகார் தெரிவித்தார் ராகேஷ் அஸ்தானா. இதனைத் தொடர்ந்து இருவரையும் நேரில் வரச் சொல்லி மோடி உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
இந்நிலையில் அலோக் வர்மாவினை அவருடைய பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது மத்திய அரசு. அவருடைய பொறுப்புகள் அனைத்தையும் துணை இயக்குநர் நாகேஷ்வர ராவ் பார்ப்பார் எனவும் தகவல் அளித்திருக்கிறது மத்திய அரசு.
அலோக் வர்மா மீது புகார் அளித்த ராகேஷ் அஸ்தானாவின் அனைத்து பொறுப்புகளையும் நேற்றே திருப்பிப் பெற்றுக் கொண்டது சிபிஐ என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக சிபிஐ கட்டிடத்தின் 10வது மற்றும் 11வது மாடியில் இருக்கும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் ராகேஷ் மற்றும் அலோக் இருவரின் அலுவலக அறைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு
தன் மீது அரசு எடுத்திருக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். கோபால் சங்கரநாரயணன் என்ற வழக்கறிஞர் அலோக் வர்மா சார்பில் இன்று காலையில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அலோக் வர்மாவின் மனுவினை வெள்ளிக்கிழமை விசாரிக்க இருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தானா மீதான வழக்குகளை விசாரித்து வந்த டி.ஐ.ஜி. எம்.கே.சின்ஹா உட்பட 13 சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம்.