கோவிட் -19 தடுப்பூசி 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், எதிர் கட்சித் தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப்பின், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் தடுப்பூசி எடுக்கப்படுவதற்கு தகுதியுடையவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி விநியோகத்தில் 50 சதவீதம் நேரடியாக வெளி சந்தை மற்றும் மாநில அரசுகளின் தடுப்பூசி திட்டத்திற்கு கிடைக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் மாதாந்திர உற்பத்தியில் 50% மத்திய மருந்து ஆய்வகத்தில் (சி.டி.எல்) வெளியிட்ட அளவுகளை மத்திய அரசுக்கு வழங்குவார்கள், மீதமுள்ள 50% அளவை மாநில அரசுகளுக்கும் வெளி சந்தையிலும் வழங்கலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி வழங்கும் நடைமுறை தற்போது உள்ளது போலவே தொடரும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. முன்னர் வரையறுக்கப்பட்டபடி இந்தியாவின் தடுப்பூசி மையங்கள் மூலம் தகுதியுள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும்: இதில் சுகாதாரப் பணியாளர்கள் (எச்.சி.டபிள்யூ), முன்களப் பணியாளர்கள் (எஃப்.எல்.டபிள்யூ) மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும் அடங்குவர்.
நோய்த்தொற்றின் அளவு (தற்போது உள்ள கோவிட் தொற்றுகளின் எண்ணிக்கை) மற்றும் செயல்திறன் (நிர்வாகத்தின் வேகம்) ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய அரசு அதன் பங்கிலிருந்து மாநிலங்களுக்கு தடுப்பூசிகளை ஒதுக்கும்.
மேலும் மத்திய அரசு, தடுப்பூசி வீணடிக்கப்படுவதும் இந்த அளவுகோல்களில் பரிசீலிக்கப்படும், மேலும் இது அளவுகோல்களை எதிர்மறையாக பாதிக்கும். மேற்கூறிய அளவுகோல்களின் அடிப்படையில், மாநில வாரியான ஒதுக்கீடு முடிவு செய்யப்பட்டு முன்கூட்டியே மாநிலங்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.
மே 1 ஆம் தேதிக்கு முன்னர் உற்பத்தியாளர்கள் மாநில அரசுகளுக்கும் வெளி சந்தையிலும் கிடைக்கும் 50% விநியோகத்திற்கான விலையை வெளிப்படையாக அறிவிப்பார்கள் என்று மத்திய அரசு கூறியது.
இந்த விலையின் அடிப்படையில், மாநில அரசுகள், தனியார் மருத்துவமனைகள், தொழில்துறை நிறுவனங்கள் போன்றவை உற்பத்தியாளர்களிடமிருந்து தடுப்பூசிகளை வாங்க முடியும் என்றும் தனியார் மருத்துவமனைகள் இந்த 50% விநியோகத்திலிருந்து பிரத்யேகமாக கோவிட் -19 தடுப்பூசியை வாங்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேநேரம், தனியார் தடுப்பூசி வழங்குநர்கள் தங்கள் சுய நிர்ணய தடுப்பூசி விலையை வெளிப்படையாக அறிவிப்பார்கள்.
இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும். இந்த தடுப்பூசி விநியோக முறை நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும் என்றாலும், அரசு சாரா ஒதுக்கீட்டில் முழுமையாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசிகளை முழுவதுமாக பயன்படுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil