Advertisment

அதிக தொற்று, அதிக இறப்பு: குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானாவுக்கு சிறப்புக் குழு வருகை

தெலுங்கானாவின் அதிக நேர்மறை விகிதம், அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் கண்டறியப்படாமல் போகக்கூடும் என்ற அச்சத்திற்கு வழிவகுத்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Covid 19, Coronavirus, corona, telengana, maharashtra, gujarat

Health volunteers performing temperature scanning for covid-19 symptoms at Gul Mohammed Chawl in Dharavi on Friday Express photo by Nirmal Harindran, 12-06-2020, Mumbai

கெளனைன் ஷெரிப் எம்

Advertisment

வியாழக்கிழமை புதிய உச்சமாக 16,000-க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்று எண்ணிக்கைகள் பதிவாகியுள்ள நிலையில், தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு நிபுணர்களின் குழுவை அனுப்பப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதிக நேர்மறை விகிதங்களைக் கொண்ட இந்த மூன்று மாநிலங்களில், தொற்று எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

காய்கறி வாங்க சென்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங்: ஊரடங்கை மீறியதாக கார் பறிமுதல்

நிபுணர்கள் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்திற்கும் அனுப்பப்படலாம். மருத்துவ மேலாண்மை தொடர்பான ஆலோசனைகளும் உதவிகளும் தேவைப்படுவதாகவும் தெரிகிறது. டெல்லியில் கோவிட் -19 நிலைமையை மத்திய அரசு, ஏற்கனவே உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

தெலுங்கானா குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அங்கு சோதனை குறைவாகவும் பாஸிட்டிவ் விகிதம் அதிகமாகவும் உள்ளது. சுகாதார செயலர், லாவ் அகர்வால் தலைமையிலான நிபுணர்கள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்கள் உள்ளிட்ட மத்திய குழு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் இரண்டு நாட்களுக்கு இருப்பார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மூன்று மாநிலங்களில் மேலும் உதவி தேவைப்படுகிறது. சுகாதார சேவைகள் இயக்குநரகம் ஜெனரலின் மூத்த தொற்றுநோயியல் நிபுணர்கள், மற்றும் குழு மருத்துவர்கள் அவர்களைப் பார்வையிடுவார்கள். வெள்ளிக்கிழமை, அந்த அணி குஜராத்தை பார்வையிடும், அதைத் தொடர்ந்து சனிக்கிழமை மகாராஷ்டிராவையும், ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் தெலுங்கானாவிலும் இருக்கும்” என்றார்.

தெலுங்கானாவின் அதிக நேர்மறை விகிதம், அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் கண்டறியப்படாமல் போகக்கூடும் என்ற அச்சத்திற்கு வழிவகுத்தது. "உறுதிப்படுத்தல் விகிதம் 18% வரை அதிகமாக உள்ளது" என்று அந்த ஆதாரம் சுட்டிக்காட்டியது. இது தேசிய சராசரியான 6.3% ஐ விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.

தெலுங்கானாவின் சோதனை விகிதத்தில், “இது அதிகரித்துள்ள நிலையில், ஒரு மில்லியனுக்கான சோதனைகள் இன்னும் மிகக் குறைவு. நாட்டில் சராசரியாக ஒரு மில்லியனுக்கு 4,800 சோதனைகள், தெலுங்கானா ஒரு மில்லியனுக்கு 1,200 சோதனைகள். அண்டை மாநிலமான ஆந்திரா ஒரு மில்லியனுக்கு 9,000 ஆகவும், தமிழ்நாடு ஒரு மில்லியனுக்கு 8,600 ஆகவும் சோதனை செய்கிறது. உத்தரபிரதேசம் கூட ஒரு மில்லியனுக்கு 1,900 சோதனைகள் செய்கிறது” என்றார் அதிகாரி ஒருவர்.

இதுவரை பரிசோதிக்கப்பட்ட 67,318 மாதிரிகளில், மாநிலத்தில் 10,444 வழக்குகள் கண்டறியப்பட்டு 225 பேர் உயிரிழந்துள்ளனர். சோதனை முடிந்ததிலிருந்து கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 2,999 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களில், 2,053 பேர் அறிகுறியற்றவர்களாக இருந்தனர், மீதமுள்ளவர்கள் கடுமையான சுவாச பிரச்னை அறிகுறிகளைக் காட்டினர்.

“தெலுங்கானாவின் சோதனையை எவ்வாறு அதிகரிப்பது என்பது குறித்து மத்திய குழு விவாதிக்கும்.  மத்திய மற்றும் மாநில அரசு வசதிகளில் திறனை எவ்வாறு உகந்த முறையில் பயன்படுத்துவது என்பது குறித்தும் அவர்கள் கலந்துரையாடுவார்கள்” என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

மகாராஷ்டிராவில், "வழக்குகளின் மருத்துவ மேலாண்மை" குறித்த கவலை அதிகரித்துள்ளது. அங்கு இறப்பு விகிதம் தேசிய சராசரியான 3.2% ஐ விட 4.7% அதிகமாகும். மேலும் "தொற்றுகள் அதிகரித்து வரும் புதிய பகுதிகள்" கண்டறியப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் இதுவரை 6,739 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamil News Today Live : தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை மருந்துக் கடைகள் செயல்படாது!

மும்பை பெருநகரப் பகுதியில் விஷயங்கள் "பரவலாக உறுதிப்படுத்தப்பட்டு வருகையில்", தானே, புனே, பால்கர் மற்றும் சோலாப்பூர் போன்ற இடங்கள் தொடர்ந்து அதிகமான தொற்று எண்ணிக்கையை கண்டறிந்துள்ளன, என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

குஜராத்தை பொறுத்தவரை, மத்திய மருத்துவ அணியின் கவனம் 6% இறப்பு விகிதத்தின் மேல் இருக்கும். இங்கு கோவிட் எண்ணிக்கை 1,736.

குஜராத் 8.5%, மகாராஷ்டிரா 17% ஆகிய இடங்களில் அதிக நேர்மறை விகிதங்களைக் கொண்டுள்ளது.

இரு மாநிலங்களும், டெல்லியுடன் சேர்ந்து, தேசிய சராசரியை விட அதிகமான இறப்பு விகிதத்தைத் தொடர்ந்து பதிவு செய்கின்றன.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coronavirus Corona Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment