Advertisment

ஆக்ஸிஜன் மரணங்கள் குறித்து மத்திய அரசு எங்களிடம் கேட்கவில்லை - சத்தீஸ்கர் மாநில அமைச்சர் விளாசல்

மாநில அரசுகள் இது தொடர்பான போதுமான முழுமையான தரவுகளை தரவில்லை என்று அறிக்கை வெளியிட்டு, தவறான நிர்வாகத்தை மறைக்க வேண்டுமென்றே முயற்சிக்கிறது” என்று வெள்ளிக்கிழமை அன்று சிங் தியோ கூறினார்.

author-image
WebDesk
New Update
TS Singh Deo

Centre never asked Chhattisgarh for data on oxygen deaths : சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங் டியோ வெள்ளிக்கிழமை அன்று, “கொரோனா இரண்டாம் அலையின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறப்புகள் ஏற்படவில்லை என்று தவறான அறிக்கைகள் மூலம் மக்களை மத்திய அரசு வழிநடத்துகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மத்திய அரசு, மாநில அரசுகளிடம் இந்த மரணங்கள் தொடர்பாக எந்தவிதமான தரவுகளையும் கேட்டுப் பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

Advertisment

சத்தீஸ்கர் மாநிலம் ஆக்ஸிஜன் மிகை மாநிலமாக இருப்பதை உறுதி செய்து வரும் மாநில அரசு, இரண்டாம் அலையின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணங்கள் ஏதேனும் நிகழ்ந்துள்ளதா என்பதை அறிய மறு தணிக்கை ஆய்வு நடத்தி வருகிறது.

கொரோனா இரண்டாம் அலையின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மரணங்கள் எதனையும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பதிவு செய்யவில்லை என்று மத்திய அரசு ஜூலை 20ம் தேதி அன்று மாநிலங்களவையில் தெரிவித்தது. இது குறித்து எதிர்க்கட்சியில் விமர்சனங்களை முன்வைத்தது.

”இந்திய அரசுக்கு மாநில அரசு நிலையான தகவல்களை வழங்கி வருகிறது. ஆக்ஸிஜன் தொடர்பான மரணங்கள் குறித்து, மாநில அரசுகள் பதிவு செய்யும் படிவங்களில் அதற்காக தனி பகுதி கூட தரவில்லை. பிறகு, மாநில அரசுகள் இது தொடர்பான போதுமான முழுமையான தரவுகளை தரவில்லை என்று அறிக்கை வெளியிட்டு, தவறான நிர்வாகத்தை மறைக்க வேண்டுமென்றே முயற்சிக்கிறது” என்று வெள்ளிக்கிழமை அன்று சிங் தியோ கூறினார்.

சத்தீஸ்கர் ஆக்ஸிஜன் மிகை மாநிலமாக உள்ளதால், ஆகஸிஜன் பற்றாக்குறை மரணங்கள் ஏதும் பதிவாகவில்லை. இருப்பினும், பிடிவாதமாக இருப்பதற்கு பதிலாக மக்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் கருத்துகளுக்கு நாங்கள் செவிமெடுத்துள்ளோம். அனைத்து சாத்தியக்கூறுகளும் கண்காணிக்கப்பட்டு சரிபார்க்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நாங்கள் ஏற்கனவே கொரோனா தொடர்பான மரணங்கள் குறித்து தணிக்கை செய்துள்ளோம். மாநிலத்தில் கோவிட் -19 -இன் இரண்டாவது அலைகளின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகளில் அல்லது வெளியில் ஏற்படும் மரணம் குறித்த அனைத்து தகவல்களையும் பெற நாங்கள் எங்களின் தணிக்கையை விரிவுப்படுத்தியுள்ளோம் என்று அவர் கூறினார்.

மருத்துவ ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட மரணங்கள் ஏதேனும் பதிவாகியுள்ளதா என்பதை அறிய என்.ஜி.ஓக்கள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் சிவில் சொசைட்டி உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட - ஜனநாயக நாட்டில், வெளிப்படைத்தன்மை என்பது மிகவும் முக்கியமானது. வெளிப்படைத்தன்மை குறித்த காங்கிரஸின் உறுதிப்பாட்டை நாங்கள் பின்பற்றுவோம், ”என்று அவர் கூறினார்.

அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறப்புகள் குறித்து மாநிலத்தில் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. "புகார்கள் அவ்வப்போது பெறப்பட்டன, ஆனால் அவை ஆதாரமற்றவை. எல்லா சந்தேகங்களையும் போக்க மரணங்களை மீண்டும் தணிக்கை செய்வோம், ”என்று சிங் தியோ மேலும் கூறினார்.

இதே போன்ற தணிக்கைகளை நாடு முழுவதும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் தடுப்பூசி வீணடிக்கப்பட்டதாக சத்தீஸ்கர் மீது மத்திய அரசால் குற்றம் சுமத்த முடியும் என்றால், நாடு முழுவதும் தங்கள் குழுக்களை அனுப்புவதன் மூலம் எத்தனை இறப்புகள் நிகழ்ந்தன என்பதையும் அவர்கள் தீர்மானிக்க முடியும்," என்று அவர் கூறினார்.

மாநிலத்தின் ஆக்ஸிஜன் உற்பத்தி திறன் 388.87 மெட்ரிக் டன் என்று சிங் தியோ சுட்டிக்காட்டினார், அதே நேரத்தில் ஏப்ரல் 26 அன்று அதிகபட்ச நுகர்வு 180 மெட்ரிக் டன்னாக இருந்தது என்று அவர் கூறினார். மார்ச் மாத மத்தியில் கொரோனா இரண்டாம் அலை உருவாகியது. மாநிலத்தில் மார்ச் 15 முதல் ஜூலை 22 வரையில் 9,617 நபர்கள் இந்த நோய்க்கு உயிரிழந்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus Lack Of Oxygen Supply
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment