Advertisment

ஒரே பாலின திருமணம் இந்திய குடும்ப விதிக்கு பொருந்தாது : மத்திய அரசு

Same Sex Marrige HC Opinion: ஒரு கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் என்பதே இந்தியாவின் குடும்ப விதி என்று ஒரே பாலின திருமணம் குறித்து உயர்நீதிமன்றம் கருத்து

author-image
WebDesk
New Update
ஒரே பாலின திருமணம் இந்திய குடும்ப விதிக்கு பொருந்தாது : மத்திய அரசு

Centre opposes same-sex marriage : ஒரே பாலின திருமணத்தை அங்கிகரிக்ககோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், ஒரே பாலினத்தவர்கள் ஒன்றாக வாழ்வதும், ஒரே பாலின நபர்களிடம் பாலியல் உறவு கொள்வதும் “இந்திய குடும்ப விதியமுறையுடன் ஒப்பிட முடியாது. ஒரு கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் என்பதே இந்தியாவின் குடும்ப விதி என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Advertisment

இந்து திருமணச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம் மற்றும் வெளிநாட்டு திருமணச் சட்டத்தின் கீழ் ஒரே பாலின திருமணங்களை அங்கீகரித்து பதிவு செய்யக் கோரிய மனுக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், "திருமணம் என்பது ஒரு புனிதத்தன்மையால் இணைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளில், இது ஒரு சடங்காக கருதப்படுகிறது. திருமணம் என்பது நாட்டின் பழமையான பழக்கவழக்கங்களில் ஒன்று, சடங்குகள், நடைமுறைகள், கலாச்சார நெறிமுறைகள் மற்றும் சமூக விழுமியங்களைப் பொறுத்தது ”என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பிரிவு 377 ஐ நியாயப்படுத்திய உச்சநீதிமன்றம், நாட்டின் சட்டங்களின் கீழ் மனுதாரர்கள் ஒரே பாலின திருமணத்திற்கான அடிப்படை உரிமையை கோர முடியாது என்றும், இது பிரிவு 21 சட்டத்தால் நிறுவப்பட்ட நடைமுறைக்கு உட்பட்டது என்றும் "ஒரே பாலின திருமணத்திற்கான அடிப்படை உரிமையை நாட்டின் சட்டங்களின் கீழ் அங்கீகாரம் அளிக்கப்படுவதற்கான விரிவாக்கத்தை ஏற்படுத்த முடியாது, இது உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளது.

"ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களிடையே திருமணத்தை ஏற்றுக்கொள்வது எந்தவொரு குறிப்பிடாத தனிப்பட்ட சட்டங்களிலோ அல்லது குறியிடப்பட்ட சட்டரீதியான சட்டங்களிலோ அங்கீகரிக்கப்படவில்லை என்றும், அத்தகைய உறவு திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதன் மூலம் இந்த திருமணம் முறைப்படுத்த அனுமதிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழும். அந்த சட்டத்தின் அடிப்படையில்  இது ஒருபோதும் நீதித்துறை தீர்ப்பின் பொருளாக இருக்க முடியாது, ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் திருமணம் என்பது இரண்டு நபர்களுக்கிடையேயான ஒரு விஷயம் மட்டுமல்ல, இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான ஆழமான பினைப்பு. இது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் போது, ​​அது ஒரு தனிநபரின் தனியுரிமைக் கருத்துக்குத் தள்ளப்பட முடியாது. அங்கீகாரமாக திருமணம் என்பது பல சட்டரீதியான உரிமைகள் மற்றும் கடமைகள் இணைக்கப்பட்டுள்ள ஒரு உறவின் அடையாளம் இது ஒரு பொதுக் கருத்தாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மனநல மருத்துவர் டாக்டர் கவிதா அரோரா மற்றும் ஒரு சிகிச்சையாளர் அங்கிதா கன்னா, ஒரு மனுவில் பங்குதாரரைத் தேர்ந்தெடுப்பதற்கான அடிப்படை உரிமையை அமல்படுத்த முயன்றனர், ஆனால் இந்த  விண்ணப்பம் டெல்லியின் கல்காஜியில் உள்ள ஒரு திருமண அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது. அவர்கள் ஒரு பாலின ஜோடி என்று கூறப்பட்டது. இது தொடர்பாக பராக் விஜய் மேத்தா தாக்கல் செய்த இரண்டாவது மனுயில்,  ஓ.சி.ஐ அட்டை வைத்திருப்பவர், மற்றும் இந்திய குடிமகன் வைபவ் ஜெயின் கடந்த 2017 இல் வாஷிங்டன் டி.சி.யில் திருமணம் செய்து கொண்டவர் என்றும் கூறப்பட்டது.

தற்போதைய சட்ட கட்டமைப்பில் ஒரே பாலின திருமணங்களை பொருத்த முடியுமா என்பது கேள்வி அல்ல, மாறாக “திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நன்மைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக. சட்ட அங்கீகாரம், பாலின ஜோடிகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது, இதனை மீறுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்கப்படாது

இந்து திருமணச் சட்டத்தின் கீழ் ஒரே பாலின திருமணங்களுக்கு அங்கீகாரம் கோரி பொதுஜன முன்னணியை அபிஜித் ஐயர் மித்ரா உட்பட மூன்று பேர் மனு தாக்கல் தாக்கல் செய்துள்ளனர். நீதிமன்றம் கடந்த ஆண்டு இந்த சட்டம் பாலின நடுநிலையானது என்றும், இந்திய குடிமக்களுக்கு ஆதரவாக இந்த சட்டம் குறித்து மையம் விளக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment