Advertisment

ஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் நுழையவும் சி.பி.ஐக்குத் தடை

மாநில அரசுகளின் முறையான அனுமதியைப் பெறாமல் உள்ளே வரக்கூடாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சிபிஐக்குத் தடை, மேற்கு வங்கம், ஆந்திரா, சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜீ

சிபிஐக்குத் தடை

சிபிஐக்குத் தடை : டெல்லி சிறப்பு காவல் சட்டம் 1946, பிரிவு 6ன் கீழ் தான் மத்திய புலனாய்வுத் துறை என்று கூறப்படும் சிபிஐயின் அதிகாரங்கள், எல்லைகள், மற்றும் செயல்பாடுகள் குறித்த விளக்கங்கள் உள்ளன. அச்சட்டத்தின் படி சிபிஐ அமைப்பானது டெல்லியில் எல்லைக்குள் தங்களின் அதிகாரங்களை சுதந்திரமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisment

ஆனால் டெல்லியின் எல்லைக்கு வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் அம்மாநிலங்களில் எந்த விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ அதிகாரங்களை செயல்படுத்தவோ சிபிஐக்கு உரிமை இல்லை.

ஆந்திராவிற்குள் நுழைய சிபிஐக்குத் தடை :

இது நாள் வரை சிபிஐ ஆந்திர மாநில எல்லைக்குள் தங்களின் அதிகாரங்களை பயன்படுத்த அளிக்கப்பட்ட தடையில்லா உத்தரவு அரசாணையை திரும்பப் பெற்றார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இது குறித்து கேள்வி எழுப்பிய போது மாநில - மத்திய அரசின் அதிகாரப் பகிர்வுகள் தொடர்பான ஏற்பாடு இது.

வருமான வரித்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறையை அரசியல் நோக்கத்துடன் பயன்படுத்தி வருகின்றது மத்திய அரசு என்ற குற்றச்சாட்டினை முன் வைத்தார் சந்திரபாபு நாயுடு. மேலும் படிக்க : பாஜகவிற்கு எதிராக ஒரே அணியில் திரளும் எதிர்கட்சிகள்

சிபிஐக்குத் தடை : ஆந்திர அரசு வெளியிட்ட அறிக்கை சிபிஐக்குத் தடை : ஆந்திர அரசு வெளியிட்ட அறிக்கை

ஆந்திராவைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் சிபிஐக்குத் தடை

சந்திரபாபு நாயுடுவின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக மத்திய அரசிடம் இருந்து எந்த விதமான எதிர்ப்பும் கிளம்பவில்லை. ஆனால் சந்திர பாபு நாயுடுவைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜீயும் மேற்கு வங்கத்தில் நுழைய சி.பி.ஐக்குத் தடை விதித்திருக்கிறார்.

பாஜகவிற்கு அளித்த வந்த ஆதரவு வாபஸ் பெறப்பட்டதில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியானது பாஜகவிற்கு எதிராக ஒரே அணியில் செயல்படும் கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. சந்திரபாபு நாயுடு முக ஸ்டாலினை இது தொடர்பாக சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Mamata Banerjee Cbi Chandrababu Naidu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment