Advertisment

'பையாஸ்' என்று பேசிய பஞ்சாப் முதல்வர்; உற்சாக பிரியங்கா: பா.ஜ.க, ஆம் ஆத்மி கண்டனம்

உ.பி., பீகாரின் பையாக்களை பஞ்சாபிற்குள் நுழைய விடக்கூடாது என்ற சரண்ஜித் சன்னியின் கருத்துக்கு பிரியங்கா உற்சாகம்; வெட்ககேடானது என பாஜக, ஆம் ஆத்மி கண்டனம்

author-image
WebDesk
New Update
'பையாஸ்' என்று பேசிய பஞ்சாப் முதல்வர்; உற்சாக பிரியங்கா: பா.ஜ.க, ஆம் ஆத்மி கண்டனம்

Kanchan Vasdev

Advertisment

Cheered by Priyanka, Channi kicks up row with ‘UP, Bihar’ remark: பஞ்சாப் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியுடன், அவரை உற்சாகப்படுத்தி, பஞ்சாபியர்களை "ஒன்றுபடுங்கள்" என்றும், "உ.பி., பீகார் மற்றும் டெல்லியில் உள்ள பையாக்களை" பஞ்சாபின் உள்ளே நுழைய விடக்கூடாது என்றும் அவர் அழைப்பு விடுத்தபோது ஒரு சலசலப்பை ஏற்படுத்தினார்.

அவரது கருத்துக்கள் போட்டியாளர்களான ஆம் ஆத்மி மற்றும் பாஜகவிடம் இருந்து கடுமையான விமர்சனத்தைப் பெற்றன, சரண்ஜித்தும் பிரியங்காவும் "ஒரு குறிப்பிட்ட சமூகத்தை" குறிவைத்து "உ.பி மற்றும் பீகாரில் இருந்து வரும் மக்களை" "புறக்கணிக்க" அழைப்பு விடுத்தது "வெட்கக்கேடானது" என்று அக்கட்சிகள் கூறின.

செவ்வாய்கிழமை மாலை ரோபரில் கட்சி வேட்பாளரும், பஞ்சாப் இளைஞர் காங்கிரஸ் தலைவருமான பிரிந்தர் சிங் தில்லானுக்கு ஆதரவாக பிரியங்கா நடத்திய சாலைப் பிரச்சாரத்தில் உரையாற்றிய முதல்வர் சன்னி, “பிரியங்கா பஞ்சாபின் மருமகள். அவர் நமது பஞ்சாபியர். எனவே பஞ்சாபியர்களே ஒன்றுபடுங்கள். உ.பி., பீகார் மற்றும் டில்லியை சேர்ந்த பையாக்கள் பஞ்சாபில் ஆட்சி செய்ய விரும்புகிறார்கள். ஆனால் நாம் அவர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது” என்று கூறினார்.

இதையும் படியுங்கள்: 25 பாஜக தலைவர்களுக்கு மத்திய பாதுகாப்பு; மக்களை அச்சுறுத்தும் செயல் என காங்கிரஸ் விமர்சனம்

சன்னி இந்த கருத்துக்களை கூறியதும், பிரியங்கா சிரித்து கைதட்டினார். மேலும், அவர் சன்னி மற்றும் தில்லானிடமும் சொன்னார்: “போலி தலைப்பாகை அணிவதால் ஒருவர் சர்தார் ஆக மாட்டார் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள். சர்தார்கள் சர்தார்களே”

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை பஞ்சாபை ஆள விரும்பும் புலம்பெயர்ந்தோர் எனக் குறிப்பிட்டு, புலம்பெயர்ந்தோருக்கான "பையாஸ்" என்ற வார்த்தையை சன்னி பயன்படுத்துகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இவர்கள் பையாக்கள் போன்றவர்கள். நாம் அவர்களை பஞ்சாபிற்கு அழைத்து வருகிறோம், அவர்களை மதிக்கிறோம், கவனித்துக்கொள்கிறோம். ஆனால், அவர்கள் நம்மை ஆள அனுமதிக்க முடியாது” என்றார்.

இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் சன்னியை கடுமையாக சாடினார்: “இது மிகவும் வெட்கக்கேடானது. எந்தவொரு தனிநபரையோ அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ இலக்காகக் கொண்ட கருத்துகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். பிரியங்கா காந்தியும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர், அதனால் அவரும் ஒரு ‘பையா’.

குரு ரவிதாஸ் ஜெயந்தியையொட்டி ஜலந்தருக்கு வந்த ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இது மிகவும் வெட்கக்கேடான கருத்து என்று கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் உடன் ஜலந்தரில் செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “எந்தவொரு சமூகம் அல்லது மாநிலம் அல்லது குழு மீது கருத்துகளை தெரிவிப்பது வருந்தத்தக்கது,” என்றார்.

மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான பூபேந்தர் யாதவ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: முதலில் ராகுல் காந்தி இந்தியா ஒரு தேசம் அல்ல என்றார். உ.பி மற்றும் பீகாரைச் சேர்ந்த மக்களைப் புறக்கணிக்க முதல்வர் சரண்ஜித் சன்னியின் அழைப்புக்கு இப்போது பிரியங்கா காந்தி உற்சாகம் தெரிவித்துள்ளார். காங்கிரஸின் முதல் குடும்பத்திற்கு இந்தியாவை பிளவுபடுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதனால்தான் இந்தியா அவர்களை மாநிலத்திற்கு மாநிலமாக நிராகரிக்கிறது.

லூதியானாவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி, “தலைப்பாகை பஞ்சாபின் பெருமை. எனவே அதை அணிவதில் அரசியல் இருக்கக் கூடாது என்றார். மேடையில் தலைப்பாகை அணிந்த மோடி மற்றும் கெஜ்ரிவாலை அவர் குறிப்பிடுவதாக சில காங்கிரஸ் தலைவர்கள் கூறியபோது, ​​மற்றவர்கள் மணீஷ் திவாரி பிரியங்காவை தாக்குவதாகக் கூறினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Punjab Arvind Kejriwal Priyanka Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment