ரூ. 251 க்கு ஸ்மார்ட்ஃபோன் வழங்குவதாக புரட்சி செய்தவர் கைது!

இந்த விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளி வந்துள்ளன.

ஃப்ரீடம்251 என்ற பெயரில் உலகின் மிக விலைமலிவான ஸ்மார்ட்ஃபோனை அறிவித்து புகழ் அடைந்த ரிங்கிங் பெல்ஸ் நிறுவன உரிமையாளர் மோகித் கோயலை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்ற வருடம் ரூ. 251 க்கு ஃப்ரீடம்251 என்ற பெயரில் உலகிலியே குறைந்த ஸ்மார்ஃபோனை பொதுமக்களுக்கு வழங்குவதாக அறிவித்தவர் தான் ரிங்கிங் பெல்ஸ் நிறுவன உரிமையாளர் மோகித் கோயல். இந்த ஃபோனை பெற போட்டிப்போட்டுக் கொண்டு லட்சகணக்கானோர் முன்பதிவு செய்தனர். ஆனால் அடுத்த சில மணி நேரத்திலியே இந்த இணையதளம் முடங்கியது.

கவர்ச்சிக்கரமான விளம்பரத்தை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் வேலை தான் இந்த ஃப்ரீடம்251 எனக்கூறி இந்த நிறுவனத்தின் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அதன் பின்பு, ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் மூடப்பட்டது. இந்நிலையில் தான் மார்ச் 6 ஆம் தேதி ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தை சார்ந்த பெண் ஒருவர் தான் ஓட்டல் ஒன்றில் விழாவுக்காக சென்ற போது 5 தொழிலதிபர்களால் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி காவல் துறையினர், தற்போது ரிங்கிங் பெல்ஸ் நிறுவன உரிமையாளர் மோகித் கோயல், அவரது உதவியாளர் மற்றும் ஒரு பெண்ணையும் கைது செய்துள்ளனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளி வந்துள்ளன.

கூட்டு வன்புணர்வுக்கு ஆளான பெண் 5 தொழிலதிபர்களிடமும் பணம் கேட்டு மிரட்டி வந்தது தெரிய வந்தது.இது குறித்து கூறிய தொழிலதிபர்களில் ஒருவர் இந்த வழக்கை திரும்ப பெற ரூ.11 கோடி கேட்டு மிரட்டியதாக தெரிவித்தார்.இதுக்குறித்து அவர் கூறியிருப்பது, “அந்த பெண் எங்களை ஃபோனில் தொடர்புக் கொண்டு 11 கோடி தரும்படி மிரட்டினார். தர முடியாது என்றும் கூறியதும் ரூ.2.5 கோடி வரை பேரம் பேசினார். பின்பு இந்த பணத்தை பெற்றுக் கொள்ள கோயல் மற்றும் அவர்களின் நண்பர் ஆகிய மூன்று பேரும் நேற்று இரவு ஓட்டல் ஒன்றுக்கு வந்தனர். அப்போது தான் டெல்லி போலீசார் அவர்களை கைது செய்தனர்” என்று கூறியுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close