Advertisment

10 பாயிண்ட்களில் மோடி அரசின் பொருளாதார கொள்கையை விமர்சித்த ப.சிதம்பரம்!

மத்திய அரசின் பொருளாதார நிலைப்பாட்டை சிதம்பரம் விமர்சித்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
10 பாயிண்ட்களில் மோடி அரசின் பொருளாதார கொள்கையை விமர்சித்த ப.சிதம்பரம்!

நாட்டின் பொருளாதாரத்தை சுமக்கும் நான்கு முக்கிய டயர்களில் மூன்று பஞ்சராகிவிட்டது என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஏற்றுமதி, தனியார் முதலீடுகள் மற்றும் தனியார் நுகர்வு ஆகியவை பஞ்சராகிவிட்டதாக அவர் குறிப்பிடுகிறார். மத்திய அரசின் முதன்மை திட்டங்களான பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி-யை கடுமையாக சாடியுள்ள சிதம்பரம், இந்த இரு திட்டங்களும் நாட்டில் பொருளாதார ஆரோக்கியத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் இதற்கு காரணமாக அரசின் மீது மக்களுக்கு பரவலாக கோபம் நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும், 10 முக்கிய அம்சங்களையும் குறிப்பிட்டு மத்திய அரசின் பொருளாதார நிலைப்பாட்டை சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

1, ஆர்.பி.ஐயின் நுகர்வோர் நம்பிக்கைக் கணக்கெடுப்பு:

சிதம்பரம் கூறுகையில், ரிசர்வ் வங்கியின் நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு மூலம், கடந்த ஒரு வருடத்தில் பொருளாதார நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றுவிட்டதாக 48சதவிகித மக்கள் கருதுவாக தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்பு நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் எடுத்திருக்க வாய்ப்பு இல்லை. அங்கு எடுத்திருந்தால், 48% என்பது இன்னும் அதிகரித்து இருக்கும்.

2, விவசாய விலைகள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை:

விரக்தியில் இருக்கும் விவசாயிகள் கோபமடைந்து உள்ளனர். இதனால், அவர்கள் வீதியில் இறங்கி போராட உள்ளனர். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு மலிவான விலை நிர்ணயம் மற்றும் விவசாய ஊழியர்களுக்கான ஊதிய தேக்க நிலை இந்த கோபத்திற்கு காரணமாகும். சில பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளது. ஆனால் அரசு அளிக்கும் அந்த குறைந்த பட்ச ஆதவு விலை போதுமானதாக இல்லை, தவிர,  அதன் வருடாந்திர உயர்வில் காட்டப்படும் கஞ்சத்தனம் மேலும் கோபத்தை அதிகப்படுத்துகிறது.

3, அதிகரிக்கும் எரிபொருள் விலை:

செயற்கைத் தனமாக அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலையால், நாடு முழுவதும் மக்கள் கோபத்தில் இருக்கின்றனர். 2014 மே-ஜூனில் நாட்டில் இருந்த எரிபொருள் விலையை விட இப்போது ஏன் விலை அதிகமாக இருக்கிறது என்பதற்கு உண்மையில் ஒரு காரணமும் கிடையாது.

4, வேலைவாய்ப்பின்மை:

ஒவ்வொரு காலாண்டிலும் சில ஆயிரங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றது. ஆனால், இது வருடத்திற்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் வெகு தொலைவில் உள்ளது. அதுமட்டுமின்றி, 2017 அக்டோபர் - டிசம்பர் காலாண்டிற்கான தொழிலாளர்கள் பணியகம் கணக்கெடுப்பை மத்திய அரசு ஏன் வெளியிடவில்லை? என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள கல்வி வளாகங்களில் மாணவ, மாணவிகளிடையே பெரும் கொந்தளிப்பு உள்ளது. ஏனெனில், படித்து முடித்தவுடன் தங்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை என அவர்களுக்கு தெரிந்துவிட்டது. இருப்பினும், யாருக்கும், பக்கோடா போட்டு சம்பாதிக்கலாம் என்ற புதுவித யோசனை தோன்றவில்லை.

5, பொருளாதாரத்தில் பஞ்சரான டயர்கள்:

நாட்டில் பொருளாதாரத்தில் மூன்று டயர்கள் பஞ்சராகி உள்ளது. முதலில் 'ஏற்றுமதி' - கடந்த நான்கு வருடங்களில் வளர்ச்சி விகிதம் நெகட்டிவாக உள்ளது. இரண்டாவது 'தனியார் முதலீடு' - அவை இக்கட்டான நிலையில் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக மூலதன உருவாக்கம் 28.5 சதவிகிதத்துடன் நின்றுவிட்டது. இறுதியாக, 'தனியார் நுகர்வு' - கடந்த சில மாதங்களாக மூழ்கியிருந்தது, இப்போது தான் சற்று உயருகிறது.

6, பணமதிப்பிழப்பிற்கு பிறகு குறைந்த வளர்ச்சி விகிதம்:

கடந்த 2015-16ல் 8.2 சதவிகிதமாக இருந்த வளர்ச்சி விகிதம் 2017-18ல் 6.7 சதவிகிதமாக சரிந்துள்ளது. சரியாக 1.5 சதவிகிதம் சரியும் என நானும், மன்மோகன் சிங் அவர்களும் கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 2017-18ம் ஆண்டில் தமிழகத்தில் 50,000 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஐந்து லட்சம் பேருக்கு வேலை பறிபோயுள்ளது. அதேபோல், 2017-18ம் ஆண்டில் திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வர்த்தகம் 50,000 கோடியில் இருந்து 36,000 கோடியாக குறைந்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

7, குறைபாடுள்ள ஜி.எஸ்.டி. திட்டத்தால் சரியும் வர்த்தம் மற்றும் வணிகம்:

ஆளும் அரசின் ஜி.எஸ்.டி. திட்டத்தின் ஜி.எஸ்.டி.ஆர் Form 2 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர் Form 3 அதிகம் கவனிக்கப்படவில்லை. தற்காலிக GSTR படிவம் 3Bல் வரி பொறுப்பு கணக்கிடப்படுகிறது, இது சட்டவிரோதமாகும்.

8, கடந்த நான்கு ஆண்டுகளில் ஒட்டுமொத்த NPA (Non-Performing Asset) உயர்ந்துள்ளது; வங்கிகள் வாரியம் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.2,63,000 கோடியில் இருந்து ரூ. 10,30,000 கோடி உயர்ந்துள்ளது. இன்னும் அது உயரும் என்று சிதம்பரம் தெரிவித்தள்ளார்.

9, பணவீக்கம்

10, சமூக பாதுகாப்பு திட்டங்கள் புறக்கணிக்கப்பு

உள்ளிட்ட 10அம்சங்களை குறிப்பிட்டு ஆளும் பாஜக அரசை ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment