Advertisment

15-18 வயதினருக்கான தடுப்பூசி; ஜனவரி 1 முதல் CoWIN தளத்தில் பதிவு ஆரம்பம்

15-18 வயதுக்குட்பட்டவர்கள் ஜனவரி 1 முதல் CoWIN இல் பதிவு செய்யலாம். பதிவு செய்வதற்கு, ஆதார் அல்லது வேறு எந்த அடையாள அட்டையும் இல்லாத பட்சத்தில், மாணவர் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தலாம்

author-image
WebDesk
New Update
15-18 வயதினருக்கான தடுப்பூசி; ஜனவரி 1 முதல் CoWIN தளத்தில் பதிவு ஆரம்பம்

Children between 15-18 can register on CoWIN from Jan 1: 15 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள், தங்கள் தடுப்பூசிகளுக்காக ஜனவரி 1 முதல் CoWIN தளத்தில் பதிவு செய்ய முடியும் என்று மத்திய அரசாங்கம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

Advertisment

பதிவு செய்வதற்கு, ஆதார் அல்லது வேறு எந்த அடையாள அட்டையும் இல்லாத பட்சத்தில், குழந்தைகள் தங்கள் மாணவர் அடையாள அட்டைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள் என்று CoWIN தளத்தின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ். ஷர்மா ANI இடம் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் கிறிஸ்துமஸ் இரவு உரைக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது, பிரதமர் தனது உரையில் 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் விரைவில் நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று கூறினார். மேலும், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசியின் மூன்றாவது 'முன் எச்சரிக்கை' அல்லது பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.

கோவிட் தடுப்பூசியின் முதல் முன்னெச்சரிக்கை டோஸ், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில், ஒன்பது மாதங்களுக்கு முன் இரண்டாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு வழங்கப்படும், அவர்கள் மூன்றாவது டோஸூக்காக பதிவு செய்யலாம் என்று சர்மா உறுதிப்படுத்தினார். பதிவு செயல்முறை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது போல் இருக்கும், என்றார்.

முன்னெச்சரிக்கை தடுப்பூசியை முதலில் பெற உள்ளவர்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்றவர்கள் என்று அர்த்தம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் ஃபரிதாபாத்தில் உள்ள டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் (டிஎச்எஸ்டிஐ) ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஐந்து அறிவியல் ஆய்வுகளின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களுக்கு இடையேயான இடைவெளியை ஒன்பது மாதங்களில் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது என்று இந்த விவாதத்தின் ஒரு பகுதியாக இருந்த அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Virus Vaccine Cowin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment