Advertisment

இந்தியாவை போட்டியாக கருதும் சீனா: அமெரிக்க நட்பை கட்டுப்படுத்த முயற்சி

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட உலக ஒழுங்கிற்குள் முன்னுரிமை பெறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.

author-image
WebDesk
New Update
இந்தியாவை போட்டியாக கருதும் சீனா: அமெரிக்க நட்பை கட்டுப்படுத்த முயற்சி

China sees rising India as rival : உயர்ந்து வரும் இந்தியாவை சீனா ஒரு போட்டியாளராக கருதுகிறது. மேலும் அந்நாடு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுடனான பந்தத்தை சீனா கட்டுப்படுத்த விரும்புகிறது என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகின் முன்னணி சக்தியாக விளங்கும் அமெரிக்காவை அந்த இடத்தில் இருந்து மாற்றவும் சீனா முயற்சிப்பதாக அடிக்கோடிட்டு காட்டியுள்ளது.

Advertisment

சீன இராணுவம், சமீபத்தில் இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய எல்லையில் மோதல்களைத் தூண்டியது, இதனால் இரண்டு புறமும் ராணுவ வீரர்கள் மாண்டனர். மேலும் இந்தியாவின் இராணுவத்துடன் பதட்டமான நிலைப்பாட்டில் சீனா உள்ளது. இந்த வெளியுறவுத்துறை அறிக்கையானது, சீனாவின் ஆக்கிரமிப்பை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த மைக் பாம்பியோ தலைமையில் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் பாம்பியோ, இந்தியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சீனாவின் கம்யூனிச கட்சி எந்த ஒரு ஜனநாயக நாட்டிற்கும் நண்பனாக இருக்க முடியாது என்பதை மிகவும் தெளிவுடன் காண்கிறார்கள். இந்தியாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு எதிராக எழுந்திருக்கும் அச்சுறுத்தல்களை தைரியமாக எதிர்கொள்ள இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும் என்று கூறினார். வெளியுறவுத்துறையின் விரிவான கொள்கை ஆவணம், பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளின் பாதுகாப்பு, சுயாட்சி மற்றும் பொருளாதார நலன்களை சீனா குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

"சீனா உயர்ந்து வரும் இந்தியாவை ஒரு போட்டியாளராக கருதுகிறது, மேலும் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடனான புது டெல்லியின் கூட்டாண்மை மற்றும் பிற ஜனநாயக நாடுகளுடனான அதன் உறவுகளை கட்டுப்படுத்துவதால் பொருளாதார ரீதியாக பெய்ஜிங்கின் அபிலாஷைகளுக்கு இடமளிக்க இந்தியாவை தூண்டுகிறது" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

"தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் (ஆசியான்) உறுப்பு நாடுகள், முக்கியமாக மீகாங் பிராந்தியத்தில் உள்ளவர்கள் மற்றும் பசிபிக் தீவுகளில் இருக்கும் நாடுகளில் இருப்போரின் பாதுகாப்பு, சுயாட்சி மற்றும் பொருளாதார நலன்களை சீனா குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 

சீனாவை ஆளும் சி.சி.பி. பெரும் அதிகாரத்திற்கான போட்டியை தூண்டுகிறது என்ற விழிப்புணர்வு அமெரிக்கா மற்றும் இதர நாடுகள் வளர்ந்து வருகிறது என்பதை 70 பக்க அறிக்கை தெரிவிக்கிறது. உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் சீனாவின் ஊடுருவல்களின் வடிவத்தை சிலர் புரிந்துகொள்கிறார்கள், கட்சி விரும்பும் ஆதிக்கத்தின் குறிப்பிட்ட வடிவம் மிகக் குறைவு" என்று அறிக்கை கூறியது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட உலக ஒழுங்கிற்குள் முன்னுரிமை பெறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடுகளில் அடித்தளமாக விளங்கும் ஒழுங்கு, அமெரிக்கா நிறுவப்பட்ட உலகளாவிய கொள்கைகளிலிருந்து பெறப்பட்டது. அது அமெரிக்க தேசிய நலன்களையும் முன்னேற்றுகிறது. பெய்ஜிங்கின் சர்வாதிகார இலக்குகள் மற்றும் மேலாதிக்க விருப்பங்களுக்கு சேவை செய்வதற்காக உலக ஒழுங்குகளை மாற்றி அமைக்க சீனாவின் பி.ஆர்.சி. முக்கியத்துவம் பெறுகிறது.

சீனாவின் சவாலை எதிர்கொள்ள அமெரிக்கா சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. னாவின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது என்று பிராந்திய நாடுகளில் ஒரு உணர்வை வளர்ப்பதன் மூலம் அமெரிக்காவின் செல்வாக்கைக் குறைக்க சீனா முயல்கிறது. அமெரிக்க ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்ட நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் மற்றும் வளர்ந்து வரும் மூலோபாய பங்காளிகளான இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா மற்றும் தைவான் ஆகியவை தான் சீனாவின் முக்கிய இலக்குகளாக உள்ளது.

தைவானை சீனாவின் பிராந்தியமாக கூறும் போக்கையும் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான கடினமான உறவுகளையும் இது எடுத்துக்காட்டுகிறது. "பெய்ஜிங் ஜனநாயக தைவானை அச்சுறுத்துகிறது. தேவைப்பட்டால் தைவானை மெயின்லேண்டுடன் மீண்டும் ஒன்றிணைக்க விரும்புகிறது. பி.எல்.ஏ கடற்படை மற்றும் சீன கடலோர காவல்படை ஆகியவை செங்காகு தீவுகளில் (Senkaku Islands) ஜப்பானின் நிர்வாகத்தில் அடிக்கடி தலையீடு செய்கிறது ”என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“டிரம்ப் நிர்வாகம் வழக்கமான ஞானத்துடன் ஒரு அடிப்படை இடைவெளியை அடைந்தது. சி.சி.பியின் உறுதியான நடத்தை மற்றும் சுய-வெளிப்படுத்தப்பட்ட குறிக்கோள்கள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு அனுமானங்களைத் திருத்தி, சீனாவின் சவாலின் முதன்மையையும் அளவையும் நிவர்த்தி செய்ய ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்க வேண்டும் என்று அது முடிவு செய்தது, ”என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சீனாவுன் வூஹான் மாகாணத்தில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் குறித்தும் இந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பொறுப்பற்ற தன்மையுடன் நடந்து கொண்டது. தவறான பிரச்சாரத்தின் காரணமாக சீனாவின் மீது இருந்த சந்தேகத்தை மூடி மறைத்தது போன்ற காரணங்களையும் சுட்டிக் காட்டியிருந்தது. நிறைய மக்களுக்கு சீனாவின் நோக்கம் மற்றும் தன்மை குறித்த சரியான புரிதல் இல்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

To read this article in English

 

China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment