Advertisment

தீவிரமடையும் எல்லை பிரச்சனை! டெப்சாங் பகுதியிலும் படைகளை குவித்த சீனா!

இராணுவத்தின் ஊடக பிரிவு இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இருப்பினும், செய்தியை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தீவிரமடையும் எல்லை பிரச்சனை! டெப்சாங் பகுதியிலும் படைகளை குவித்த சீனா!

பாங்கோங் த்சோ, கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்ப்ரிங் ஆகிய பாகுதிகளில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பதட்டங்களைத் தவிப்பதற்காக இந்தியா- சீனா ராணுவ மட்டத்தில் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் சூழலில், சீனா ராணுவம் டெப்சாங் எனும் இடத்தில் படைகளை குவித்து வருகிறது. இதன் மூலம், சீனா எல்லைக் கட்டுப்பாடு கோடு பிரச்சனையை மேற்கு எல்லைப் பகுதி வரை சீனா விரிவாக்குகிறது.

Advertisment

காரகோரம் மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கும் தௌலத் பேக் ஓல்டி என்ற இந்தியா ராணுவத்தின் விமானத் தளத்தில் இருந்து சுமார் 30 கி.மீ தென்கிழக்கில் அமைந்திருக்கும் டெப்சாங் சமவெளியில் அமைந்திருக்கும் Y-ஜங்க்ஷன் (அ) பாட்டில்னெக் எனும்  பகுதியில்  சீனா ராணுவம் படைக் குவிப்பில் ஈடுபட்டுள்ளது. ராணுவ கனரக வாகனங்கள், சிறப்பு இராணுவ உபகரணங்கள்யும் தயார் நிலையில் வைத்திருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

டெப்சாங் சமவெளி நெடுகே வாகன நடமாட்டத்தை தடுக்கும் வகையில் பாறை அமைப்புகள் இருப்பதால் இந்த இடம்  பாட்டில்னெக் என கருதப்படுகிறது. ஏப்ரல் 2013 இல் சீனா ராணுவம் இந்த இடத்தில் தான் அத்துமீறி கூடாரங்கள் அமைத்தன. இதன் காரணாமாக, டெப்சாங் சமவெளி எல்லைப் பகுதியில் மூன்று வாரங்களுக்கு பதட்டமான சூழல் நீடித்தது.  இராஜதந்திர பேச்சுவார்த்தை அமைதிக்கு வழிவகுத்தன.  டெப்சாங் சமவெளியில் முன்பிருந்த நிலையும் மீட்கப்பட்டது.

இந்தியாவின் எல்லைக் கட்டுப்பாடு கோட்டில் இருந்து     சுமார் 18 கி.மீ தொலைவில் இந்த பாட்டில்னெக் பகுதி உள்ளது. இருப்பினும், இந்தியாவின் எல்லைக் கோடு உண்மையில் மேலும் 5 கி.மீ மேற்கே இருப்பதாக சீனா தெரிவித்து வருகிறது.

255 கி.மீ நீளமுள்ள தர்புக்-ஷியோக் தௌலத் பேக் ஓல்டி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பர்ட்சே எனும் லடாக்  நகரின் வடகிழக்கில் இருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் பாட்டில்னெக் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இராணுவத்தின் ஊடக பிரிவு இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இருப்பினும்,"அறிக்கையை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது" என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர்  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

பர்ட்சேவில் இருந்து வழித்தடங்கள் இந்த பாட்டில்னெக்  பகுதியல் இரண்டு தடங்களாக பிரிகின்றன. அதனால், இந்த இடம் Y-ஜங்க்ஷன் என்று அழைக்கப்படுகிறது. ஒன்று வழித்தடம்  வடக்கு  புறமாக ராக்கி நாலா வழியாக  பெட்ரோலிங் பாயிண்ட்ஸ் 10-ஐ நோக்கி பயணிக்கிறது(பிபி -10) மற்றொன்று தடம் தென்கிழக்கு வழியாக ரோந்து புள்ளி -13(பிபி -13) நோக்கி செல்கிறது.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

பாட்டில்னெக் வழியாக, இந்தியாவின் பெட்ரோலிங் பாயிண்ட்ஸ் 10ல் இருந்து 13 வரை சீனா இணைத்து விட்டால், எல்லைக் கட்டுபாட்டு பகுதியில், இந்தியாவின்  பெட்ரோலிங்  வரம்பை மேலும் மேற்கு நோக்கி மாற்றக்கூடும் என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர். தௌலத் பேக் ஓல்டி  விமானத் தளத்திற்கு அருகிலுள்ள எல்லைக் கட்டுப்பாடு கோட்டில்  குறிப்பிடத்தக்க பகுதியை இந்தியா ராணுவம் அணுக முடியாத சூழல் உருவாகும்.மேலும், இந்தியாவின்  மூலோபாய தௌலத் பேக் ஓல்டி நெடுச்சாலைக்கு அருகே உள்ள பகுதிகளில் சீனா ராணுவம் தனது ஆதிக்கத்தை செலுத்தும் நிலை ஏற்படும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

India Indian Army China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment