Advertisment

பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சொந்த செலவில் சூனியம் வைத்த சிஐஎஸ்எஃப் மூத்த அதிகாரி

சிங் மற்றும் அவரது வழக்கறிஞர் நண்பர், நீரஜ் சவுகான் (40) ஆகியோர் அலிகரில் இருந்து போதை வஸ்துவை வாங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரியின் கணவரின் காரில், அக்டோபர் 4 ஆம் தேதி பிரகதி விஹார் ஹாஸ்டலில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தபோது அதை வைத்துள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
crime news

ராஜஸ்தானில் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் கணவருக்கு சொந்தமான காருக்குள், 550 கிராம் அளவிற்கான Charas எனப்படும் போதை வஸ்துவை திட்டமிட்டு வைத்ததாக, வெளிவிவகார அமைச்சின் (எம்.இ.ஏ) பாதுகாப்பு பணியகத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்ட சி.ஐ.எஸ்.எஃப் மூத்த தளபதி வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

Advertisment

சிஐஎஸ்எஃப் மூத்த கமாண்டன்ட் ரஞ்சன் பிரதாப் சிங் (45), ராஜஸ்தானில் பணிபுரியும் அந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியை 20 ஆண்டுகளுக்கு முன்பு சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாரானபோது சந்தித்ததாகவும், 2000 ஆம் ஆண்டில் இருவரும், உத்தரகாண்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமியில் நான்கு மாத கோர்ஸ் ஒன்று படித்த போது சந்தித்துக் கொண்டதாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்

"பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது ஒருதலைக் காதலில் இருப்பதாக சிங் போலீசாரிடம் கூறியுள்ளார். பெண் அதிகாரி வேறொரு ஆணுடன் திருமணம் செய்து கொண்டதிலிருந்து மகிழ்ச்சியாக இல்லை. இருப்பினும், சிங் அந்த அதிகாரியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். சமீபத்தில், பெண் அதிகாரிக்கு பலமுறை தொலைபேசியில் அழைப்பு விடுத்து தொல்லைக் கொடுத்திருக்கிறார். இதனால், அப்பெண் அதிகாரியை, சிங்கை கண்டித்திருக்கிறார். இதையடுத்து, பழிவாங்க முடிவு செய்த சிங் ஆறு மாதங்களுக்கு முன்பு தனது பால்ய பருவ நண்பரிடமிருந்து சரஸ் என்ற போதை வஸ்துவை வாங்கியிருக்கிறார்," என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

பெண் அதிகாரியின் கணவர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) ஆலோசகராக இருக்கிறார். அவரை பழிவாங்க முடிவு செய்த சிங், போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் அதிகாரியின் கணவரை கைது செய்ய திட்டமிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "பின்னர் அவர் தனது திட்டத்தை ஒரு நண்பருடன் பகிர்ந்து கொண்டார்," என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

சிங் மற்றும் அவரது வழக்கறிஞர் நண்பர், நீரஜ் சவுகான் (40) ஆகியோர் அலிகரில் இருந்து போதை வஸ்துவை வாங்கி ஐ.ஏ.எஸ் அதிகாரியின் கணவரின் காரில், அக்டோபர் 4 ஆம் தேதி பிரகதி விஹார் ஹாஸ்டலில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தபோது அதை வைத்துள்ளனர். CISF க்கு "சந்தேகத்திற்கிடமான கார்" என்று புகாரளிக்க ஒரு பழ விற்பனையாளரின் தொலைபேசி வாங்கி புதன்கிழமை அவர்களே புகார் கொடுத்திருக்கின்றனர்.

ஆனால் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் கணவரிடம் விசாரித்ததில் போலீஸுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டது. அந்த குறிப்பிட்ட காரைத் தேடியபோது, ​​வெவ்வேறு இடங்களில் மூன்று பாக்கெட் போதைப்பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர். அதே போல், பழ கடைக்காரர் கட்டுப்பாட்டு அறைக்கு பதிலாக, சிஐஎஸ்எஃப் அதிகாரியிடமே நேரடியாக பேசி எப்படி புகார் கொடுத்தார் என்பது போலீஸாரின் சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியது.

டி.சி.பி (தெற்கு) அதுல் தாக்கூர் கூறுகையில், “பெண் அதிகாரியின் கணவருக்கு சொந்தமான ஒரு காரை நாங்கள் முதலில் மீட்ட பிறகு சிங் மற்றும் சவுகான் கைது செய்யப்பட்டனர். பின்னர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, விசாரணையின் போது, ​​அவர்கள் அலிகரில் இருந்து வாங்கிய பின்னர், 550 கிராம் போதை வஸ்துவை, காரில் வைத்ததை கண்டறிந்தோம். அவர்களுக்கு எதிராக எங்களிடம் வலுவான தொழில்நுட்ப சான்றுகள் உள்ளன, மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன” என்றார்.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment