Advertisment

'போராட்டத்தை நிறுத்துங்கள்’ : கலவரத்தில் தன் மகனை இழந்த தந்தை மக்களுக்கு அழைப்பு

ஆனால் ஒரு குறிப்பிட்ட இன மக்களை மட்டும் தொடர்ந்து மோசமான நிலைக்கு இந்த அரசு தள்ளுகிறது. இது குறித்து அரசு யோசனை செய்ய வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Citizenship Law protests Bengal Imam calls for peace

Citizenship Law protests Bengal Imam calls for peace

Ravik Bhattacharya

Advertisment

Citizenship Law protests: Bengal Imam calls for peace : மௌலானா இம்தாதுல் ரஷிதி கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது உயிரிழந்தார். அப்போது அந்த போராட்டதை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். தற்போது மேற்கு வங்கத்தின் அசன்சோல் பகுதியில் நடைபெற்று வரும் போராட்டங்களை கைவிட வேண்டும் என்று கூறி கோரிக்கை விடுத்துள்ளார் அவர். குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தற்போது நடைபெறும் வன்முறைகள் தவறானவை என்று அவர் கூறியுள்ளார்,

மேலும் போராட்டக்காரர்கள் பொதுமக்களுக்கும், தனியார் மற்றும் அரசு உடமைகளுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். போராட்டம் மக்களை அசௌகரியப்படுத்தும் வகையிலோ, தனிநபரையோ, குறிப்பிட்ட இனமக்களையோ, அரசு மற்றும் தனியார் உடமைகளை சேதப்படுத்தும் வகையிலோ அமையக்கூடாது. தற்போது மக்கள் போராடும் விதம் தவறானது. நான் அனைவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என இந்தியன் எக்ஸ்பிரஸ் மூலம் போராட்டக்காரர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் அவர்.

16 வயதான இமாமின் மகன் கடந்த ஆண்டு நடைபெற்ற ராமநவமி ஊர்கோலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தார். தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை சட்டம் லட்சக்கணக்கான மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதை அவர் ஏற்றுக் கொள்கிறார். மக்கள் பயந்துள்ளனர். இந்த ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராட உரிமை உள்ளது. ஆனால் போராட்டம் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்றும் இமாம் கூறுகிறார்.

To read this article in English

அரசு மக்களுக்கு உதவ வேண்டும். மக்கலுக்கு இன்னல்களை தா கூடாது. அசாமில் நிறைய பணம் செலவு செய்து என்.ஆர்.சி கொண்டு வரப்பட்டது. மக்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் தற்போது பழைய என்.ஆர்.சி வேண்டாம் என்று கூறிவிட்டு நாடுதழுவிய என்.ஆர்.சியை அறிமுக செய்ய இருப்பதாக அரசு அறிவிக்கிறது. நிறைய மக்களிடம் முறையான சான்றுகள் இல்லை. அவர்கள் எங்கே செல்வார்கள். இந்தியாவில் இருக்கும் இஸ்லாம் தவிர்த்த இதர அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட இன மக்களை மட்டும் தொடர்ந்து மோசமான நிலைக்கு இந்த அரசு தள்ளுகிறது. இது குறித்து அரசு யோசனை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 30ம் தேதி நடைபெற்ற ராம நவமி ஊர்வலத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தில் ரஷிதியின் மகனான சிப்துல்லாவை கலவரக்காரர்கள் தூக்கிச் அடித்தே கொன்றனர்.  சில மணி நேரங்கள் கழித்து அவருடைய உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.  இந்த கலவரத்தில் இறந்த நான்காவது நபர் இவர் ஆவார்.  இமாமைவிட வேறு யாரால் இது போன்ற ஒரு அமைதி சூழலுக்காக குரல் கொடுக்க முடியும். நாங்கள் அவருடைய வீடியோவை ரெக்கார்ட் செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டோம். இது சரியான நோக்க்கில் அனைவரிடம் சென்று சேர வேண்டும் என்றும் முகமது ஜிம் நவாஸ் என்ற சமூக ஆர்வலர் அறிவித்துள்ளார்.

West Bengal Assam
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment