டெல்லி, டெல்லி பாண்டவ் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு உண்ட 5 இளைஞர்கள், உணவு அருந்தினர். பின்னர் உணவு கட்டணாத்தொகையில் தள்ளுபடி வழங்குமாறு ஹோட்டல் உரிமையாளரிடம் கேட்டுள்ளனர். ஆனால் தள்ளுபடி வழங்க இயலாது எனவும், முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் உரிமையாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் தொடங்கிய சில நேரத்திலேயே வன்முறை வெடித்தது. இதில் இரு தரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் ஹோட்டலின் பொருட்களை இளைஞர்கள் சேதப்படுத்தும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமரேவில் பதிவானது. இந்த வீடியோ தற்போது இணையதளம் முழுவதும் பரவி வருகிறது.
#CCTV A clash broke out in a restaurant in Delhi's Pandav Nagar between customers and restaurant staff yesterday over bill payment pic.twitter.com/Vf40uqOi1K
— ANI (@ANI) April 15, 2018