scorecardresearch

பழைய ஓய்வூதிய திட்டம் ரெடி.. ஹிமாச்சல் புதிய முதலமைச்சர் வாக்குறுதி

அண்மையில் நடந்து முடிந்த ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்ததில் 40 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் மாபெரும் வெற்றியை ருசித்தது.

Sukhvinder Singh Sukhu promises Old Pension Scheme
ஹிமாச்சலப் பிரதேச முதல் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட சுக்விந்தர் சிங் சுகு

ஹிமாச்சலப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு பொறுப்பேற்றுக்கொண்டார். மாநில வரலாற்றில் முதல் முறையாக துணை முதலமைச்சராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்றுள்ளார்.
இவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பேசிய ஹிமாச்சலப் பிரதேச முதலமைச்சர், மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்தார்.
மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் உங்களுக்கு 10 உத்தரவாதங்களை அளித்துள்ளோம், இந்தப் 10 உத்தரவாதங்களை நாங்கள் செயல்படுத்துவோம். வெளிப்படையான நேர்மையான ஆட்சியை வழங்குவோம். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்துவோம்” என்றார்.

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நடவுன் தொகுதியில் இருந்து நான்கு முறை எம்.எல்.ஏ.வாகவும், மாநிலத்தில் காங்கிரஸின் தேர்தல் குழுத் தலைவருமான சுக்விந்தர் சிங் சுகு இளமையில் இருந்தே அரசியலில் ஈடுபட்டுவருகிறார்.
சட்டம் பயிலும் காலத்திலே அரசியலில் ஈடுபட்டார். படிபடியாக உயர்ந்து கட்சியின் தலைவர் பொறுப்பிற்கு உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Cm sukhvinder singh sukhu promises old pension scheme

Best of Express