Advertisment

”அவனை நினைத்து பெருமை அடைகிறேன்” இந்தியாவுக்காக ஒரே மகனை இழந்த ராணுவ அதிகாரியின் தாய் உருக்கம்!

இனிமேல் என்னை ’அம்மா’ என்று கூப்பிட என மகன் இல்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
colonel santosh babu death

colonel santosh babu death

Arun Janardhanan, Sreenivas Janyala

Advertisment

colonel santosh babu death : மொத்த இந்தியாவும் கொரோனா அச்சுறுத்தலை பற்றி கவலைக் கொண்டிருந்த நேரத்தில் அனைவரின் காதுகளிலும் இடியென விழுந்தது அந்த செய்தி. லடாக்கின் கால்வின் (கல்வின்) பள்ளத்தாக்கில் திங்கட்கிழமை இரவு சீனா நடத்திய தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம்.

மொத்த இந்திய மக்களும் ஆடிபோயினர். இது என்ன சோதனை மேல் சோதனை என்பது போல் அனைவரின் இல்லத்திலும் இதுக் குறித்த பேச்சு தான். சமூகவலைத்தளங்களில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி பல்வேறு பதிவுகள் வெளியாகின. நமது நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த 20 ராணுவ வீரர்களுக்கும் பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.

இத்தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ அதிகாரி சந்தோஷ் பாபு தெலுங்கானாவை சேர்ந்தவர். இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான் ஐதராபாத்தில் போஸ்டிக் மாற்றப்பட்டது. லாக்டவுன் முடிந்த உடன் ஐதராபாத் வரவிருந்த சந்தோஷ் பாபு சீனா நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். தனது ஒரே மகனை இழந்து வாடும், சந்தோஷ் பாபுவின் தாய், கண்ணீர் மல்க அளித்திருக்கும் பேட்டி.

publive-image சந்தோஷ் பாபுவின் தந்தை மற்றும் தாய்

”தேசத்துக்காக என் ஒரே மகன் உயிர் தியாகம் செய்திருப்பது பெருமையாக இருக்கிறது. அவனின் வீர மரணத்தை எண்ணி பெருமைக் கொள்கிறேன். ஆனால் ஒரு தாயாக மகனை இழந்த துயரத்தில் இருக்கிறேன்.இனிமேல் என்னை ’அம்மா’ என்று கூப்பிட என் மகன் இல்லை என்பதை நினைத்தால் தான் கண்ணீரை அடக்க முடியவில்லை” என்றார்.

சந்தோஷ் கடந்த 15 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிப்புரிந்து வந்தார்.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய-சீனா எல்லையில் ராணுவ அதிகாரியாக பணியாற்றினார். சந்தோஷ் பாபுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் போஸ்டிக் மாற்றப்பட்டது. தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஐதராபாத்தில் குடியேற இருந்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக சந்தோஷ் ஐதராபாத் வருவது தாமதம் ஆகியது.

தற்போது டெல்லியில் இருக்கும் சந்தோஷ் குடும்பத்தாருக்கு திங்கட்கிழமை இரவே அவரின் இறப்பு செய்தி தொலைபேசி மூலம் பகிரப்பட்டது. சந்தோஷ்-க்கு ஒன்பது வயது மகள் மற்றும் நான்கு வயது மகன் உள்ளான்.

publive-image சந்தோஷ் மகள்

சந்தோஷ் பாபுவின் பள்ளி பருவத்தை நினைவு கூர்ந்த அவரின் தந்தை உபேந்தர், "நான் ராணுவத்தில் பணியாற்ற விரும்பினேன், ஆனால் என்னால் இலக்கை அடைய முடியவில்லை. எனது கனவை என் மகன் மூலமாக அடைந்தேன். சந்தோஷ் பாபு மிகவும் திறமையானவன்.

டெல்லியில் இருக்கும் என் பேரக்குழந்தைகள் ஐதராபாத் வர ஆவலாக இருந்தனர். இனிமேல் நாம் அனைவரும் அடிக்கடி பார்த்துக் கொள்ள போகிறோம் தாத்தா என்றார்கள். இந்திய-சீன எல்லையில் பதட்டம் என்ற தகவல் வெளியானதும் நாங்கள் சற்று பதறினோம். ஆனால் இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை” என கதறினார்.

publive-image சந்தோஷ் பாபு

சந்தோஷின் மனைவி மற்றும் பிள்ளைகள் டெல்லியில் உள்ளனர். அவரின் பெற்றோர்கள் தெலுங்கானாவில் உள்ள சூர்யாபேட்டை என்ற கிராமத்தில் வசித்து வருகின்றனர். சந்தோஷ் இறப்பு செய்தி செவ்வாய் மதியம் அவரின் வீட்டிற்கு தெரியப்படுத்திய உடனே, ஊர்மக்கள் அனைவரும்  அவரின் வீட்டின் முன்பு திரண்டு சந்தோஷின் தாய் தந்தைக்கு ஆறுதல் கூறினர்.

கமாண்டிங் ஆபீசர், 16 பீகார், சந்தோஷ் லடாக்கில் ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். " 1993 முதல் 2000 வரை, விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கொருகொண்டாவின் சைனிக் பள்ளியில் தனது பள்ளி படிப்பினை நிறைவு செய்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment