காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இணைந்து வந்தாலும் பாஜகவை தோற்கடிக்க முடியாது – அமித் ஷா உறுதி

காங்கிரஸ் , சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி இணைந்து வந்தாலும், பாஜகவை தோற்கடிக்க முடியாது என அமித் ஷா கூறியதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

அடுத்தாண்டு நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கட்சியின் பணிகள் குறித்து 403 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளிடம் வாரணாசியில் மத்திய உள் துறை அமைச்சர் அமிஷ் ஷா உரையாற்றினார்.

கூட்டத்தில் பங்கேற்ற கட்சித் தலைவர் ஒருவர் கூறுகையில், காங்கிரஸ் , சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி இணைந்து வந்தாலும், பாஜகவை தோற்கடிக்க முடியாது என அமித் ஷா கூறியதாக தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு, மாஃபியாவுக்கு எதிரான நடவடிக்கை மற்றும் தொற்றுநோய்களின் போது சுகாதார சேவைகளை நிர்வகிப்பது குறித்து யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தை ஷா பாராட்டியதாக கூறினார்.

தற்போதைய 2022 உபி தேர்தல் முடிவுகள், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முக்கியமானதாக இருக்கும். டெல்லியில் வெற்றிக்கான பாதை, இந்த மாநிலத்தின் வழியாக செல்வதால், அனைவரின் பார்வையும் உ.பி. மீது தற்போது உள்ளது.

2017ஆம் ஆண்டு பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 325 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெற்றன. அதே போலவே, இந்த முறை மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்த கட்சி நிர்வாகிகள் கடினமான உழைக்க வேண்டும் என ஷா கேட்டுக்கொண்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஷா சில தொகுதிப் பொறுப்பாளர்களுடன் உரையாடி, நிறுவனப் பணிகள் குறித்து கருத்துக்களைக் கேட்டறிந்ததாகவும், அனைத்து கட்சி தொண்டர்களுக்கும் பொறுப்புகளை வழங்க மாநில தலைவர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பொறுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பணிகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடர்ந்து பேசிய அவர், “முகமது அலி ஜின்னாவைப் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்ததற்காக SP தலைவர் அகிலேஷ் யாதவை சுட்டிக்காட்டி ஷா பேசியதாக கூறினார். மேலும், காங்கிரஸ் , சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகள் பலவீனமாக இருப்பதாகவும், மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்தாலும் பாஜகவை தோற்கடிக்க முடியாது என தெரிவித்தார்.

பாஜக மாநிலத் தலைவர் ஸ்வதந்த்ரா தேவ் சிங் கூறுகையில், ” ஒவ்வொரு வாக்குச்சாவடி வெற்றி உ.பி வெற்றி என்ற உறுதிமொழியை நிர்வாகிகளிடம் எடுத்திட வலியுறுத்தினார்.

300+ இடங்களை வெல்வதற்கான வியூகம் குறித்தும், தொகுதி பொறுப்பாளரின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். பாஜக தனது தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் ஆசீர்வாதத்தால் தேர்தலில் வெற்றிபெறும் என தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cong and sp together cant defeat bjp says amit shah in up pre poll meet

Next Story
சுழல் விளக்கு கலாச்சாரத்துக்கு முடிவு… நாட்டில் உள்ள அனைவருமே ‘விஐபி-கள்’ தான்… வெங்கையா நாயுடு விளக்கம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com