Advertisment

பாரத் ஜோடோ யாத்திரை.. சாலையில் விதவிதமான படங்கள்.. விவசாயி தோற்றத்தில் ராகுல்!

கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்திக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் விதவிதமான படங்கள், போஸ்டர்கள் வைக்கப்பட்டது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

author-image
WebDesk
New Update
பாரத் ஜோடோ யாத்திரை.. சாலையில் விதவிதமான படங்கள்.. விவசாயி தோற்றத்தில் ராகுல்!

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை (ஒற்றுமை யாத்திரை) காங்கிரஸ் முன்னெடுத்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்.7ஆம் தேதி கன்னியாகுமரியில் யாத்திரையை தொடங்கினார். முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தியிடம் தேசிய கொடியைக் கொடுத்து யாத்திரையை தொடங்கி வைத்தார்.

Advertisment

நேற்று முதல் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்ள தொடங்கினார். கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக யாத்திரை சென்றார். வழியில் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் எனப் பலரிடம் கலந்துரையாடினார். ராகுல் யாத்திரை செல்லும் வழிகளில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலைகளில் ராகுல் விதவிதமான தோற்றத்தில் இருக்கும் படங்கள் வைக்கப்பட்டது. அதில் குறிப்பாக விவசாயி தோற்றத்தில், தலையில் தலைப்பாகை கட்டி, கலப்பை ஏந்தி நிற்பது போன்ற படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. போட்டோஷாப் செய்யப்பட்ட படமாக இருப்பினும் கூட்டத்தின் கவனத்தை ஈர்த்தது.

ராகுல் முதல் நாள் பயணத்தில் முக்கிய யாத்தீரிகள் குழுவுடன் திக்விஜய் சிங், ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, சுப்ரியா ஷ்ரினேட், கே.வி.தங்கபாலு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். கட்சித் தொண்டர்கள் காமராஜர் படம், யாத்திரை பாதை வரைபடத்துடன் கூடிய டி-சர்ட் அணிந்து யாத்திரையில் பங்கேற்றனர்.

யாத்திரை செல்லும் வழியில் பிரமாண்டமான கட்அவுட்கள், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி அடங்கிய போஸ்டர் படங்கள் ஒட்டப்பட்டிருந்தன.

publive-image

சட்டமன்றத் தொகுதிகள்

கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகள் வழியாக ராகுல் நேற்று யாத்திரை மேற்கொண்டார். இவ்விரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி பலம் பொருந்தியதாக இல்லை. கன்னியாகுமரியில் அதிமுகவைச் சேர்ந்தவர் எம்எல்ஏவாக உள்ளார். நாகர்கோவில் தொகுதி பாஜகவிடம் உள்ளது.

publive-image

காமராஜர் காலத்தைச் சேர்ந்த மாநில காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் (89) வியாழக்கிழமை ராகுல் யாத்திரை தொடங்குவதற்கு முன் தேசியக் கொடியேற்றினார். குமரி அனந்தன் கடந்த காலங்களில் யாத்திரைகள் மேற்கொண்டுள்ளார். காந்தியின் கருத்துகளையும் இலட்சியங்களையும் பரப்புவதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு 1967இல் பேரணி சென்றார்.

publive-image

10 ஆண்டுகளுக்குப் பிறகு, 1977இல், அதே நோக்கத்துடன் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு மற்றொரு பாதயாத்திரையை மேற்கொண்டார். 2017 ஆம் ஆண்டு இறுதியில், அவர் சென்னையில் இருந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டிக்கு "அகிம்சா யாத்திரை" மேற்கொண்டார். சுவாரஸ்யமான ஒன்று, அனந்தன் இரண்டு முறை காங்கிரஸை விட்டு வெளியேறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment