Advertisment

பகவத் கீதையில் ஜிகாத்.. சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் மூத்தத் தலைவர்

ஜிகாத் இஸ்லாம் மதத்தில் மட்டுமல்ல பகவத் கீதை, கிறிஸ்தவத்திலும் உள்ளது எனப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்.

author-image
WebDesk
New Update
Congress distances itself from Patil’s ‘jihad’ comment as BJP steps up attack

முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்

காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மோஷினா கித்வாய் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், “ஜிகாதி என்பது இஸ்லாமில் மட்டுமல்ல, மகாராஷ்டிராவில், ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜூனனுக்கு உரைத்த கீதையிலும் ஏன் கிறிஸ்தவத்திலும் உள்ளது” என்றார்.

Advertisment

சிவராஜ் பாட்டீலின் இந்தக் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய பாஜக மாநிலங்களவை எம்.பி., சுதான்ஷ{ திரிவேதி, “சிவராஜ் பட்டேலின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அல்லது சோனியா காந்தி பதிலளி;க்க வேண்டும்” என்றார்.

பாரதிய ஜனதா தேசிய செய்தித் தொடர்பாளர் பிரேம் சுக்லா, ‘இந்துக்களை அவமதிப்பதை காங்கிரஸ் தொடர்ந்து செய்துவருகிறது. இதனடிப்படையில் சிவராஜ் பாட்டீலின் கருத்து வந்துள்ளது” என்றார்.

காங்கிரசும் ஆதரவில்லை

இந்த விவகாரத்தில் சிவராஜ் பாட்டீலுக்கு காங்கிரசும் ஆதரவு அளிக்கவில்லை எனத் தோன்றுகிறது. இது குறித்து பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம ரமேஷ், ‘என்னுடைய மூத்த சகாவான சிவராஜ் பாட்டீல், பகவத் கீதையைப் பற்றி சில கருத்துக்களைச் சொன்னது ஏற்றுக்கொள்ள முடியாதது. காங்கிரஸின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பகவத் கீதை இந்திய நாகரிகத்தின் முக்கிய அடித்தளமாகும்' என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Congress Bhagavad Gita
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment