Advertisment

நீங்கள் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது - பாஜகவை விளாசிய ராகுல்காந்தி

Parliament News Update : இந்தியாவில் 84 சதவீதம் மக்கள் வறுமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அமைப்புசாரா துறை முற்றிலுமாக அழிந்துவிட்டதால், 'மேக் இன் இந்தியா' நடக்காது

author-image
WebDesk
New Update
நீங்கள் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது - பாஜகவை விளாசிய ராகுல்காந்தி

Congress Leader Rahul Gandhi Speech : நாடளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாஜக தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியுள்ளார்.

Advertisment

2022-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல்நாளில் ஜனாதிபதி உரையடன் தொடங்கிய இந்த கூட்டத்தொடரில் நடப்பு நிதியாண்டுக்காக பட்ஜெட தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் முதல்நாள் கூட்டம் முடித்துக்கொள்ளப்பட்ட நிலையில், 2-வது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில் எதிர்கட்சி சார்பில் முதலில் பேசிய எம்பியும காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி கூறுகையில்,  , இந்தியா தற்போது இரண்டு பிரிவாக பிரிந்துள்ளது. இதில,  இதில் ஒன்று பணக்காரர்களுக்காகவும், மற்றொன்று பணமில்லாத ஏழை மக்களுக்காகவும் உள்ளது.  இந்தியாவில் நடப்பது மக்கள் ஆட்சி என்று சொன்னாலும் கூட ஆட்சியாளர்கள் மன்னரைப்போலத்தான் நடந்துகொள்கிறார்கள்.

இந்தியாவில், இரண்டு விதமான பார்வை உண்டு. அதில் ஒன்று மாநிலங்களின் ஒன்றியம் என்ற பார்வை. இதற்கு கூட்டாட்சி என்று அர்த்தம். நான் தமிழ்நாட்டில் உள்ள என் சகோதரனிடம் சென்று, 'உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்பேன். அதன்பிறகு, எனக்கு என்ன தேவை என்பதை கேட்டு பெறுவேன். இது தான் கூட்டாட்சி. இது ஒரு ராஜ்யம் அல்ல. ஆனால் உங்கள் வாழ்நாளில் நீங்கள் ஒருபோதும் தமிழக மக்களை ஆள மாட்டீர்கள். அதை செய்யும் முடியாது என்று பேசினார்.

மேலும் , பணக்காரர்களுக்கு ஒன்று, ஏழைகளுக்கு ஒன்று என இரண்டு இந்தியா உருவாக்கப்பட்டு, அவற்றுக்கிடையேயான இடைவெளி அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்சிய ராகுல்காந்தி, ஜனாதிபதி உரையில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், இந்த அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட இரண்டு இந்தியாவையும் ஒன்றாகக் கொண்டுவருவதற்கான பணிகளைத் தொடங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தினார்.

இந்தியாவின் 40% செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு சென்றுள்ளதாக கூறியுள்ள அவர், "இன்று, 84% இந்தியர்களின் வருமானம் குறைந்து, அவர்களை வறுமையை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்றும், அமைப்புசாரா துறை முற்றிலுமாக அழிந்துவிட்டதால், 'மேக் இன் இந்தியா' நடக்காது என்றும், சீனாவுடனான எல்லைக் பிரச்சினை மற்றும் பெகாசஸ் வழக்கு போன்றவற்றையும் எழுப்பினார்.

முன்னதாக, நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து தகது விமர்சனத்தை பதிவு செய்த ராகுல் காந்தி, மத்திய அரசின் பூஜ்ஜியத் தொகை பட்ஜெட் எனறும், "சம்பள வர்க்கம், நடுத்தர வர்க்கம், ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் MSME களுக்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை" என்று ட்வீட் செய்ததது குறிப்பிடத்தகக்து

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Rahul Gandhi Parliament
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment