Advertisment

திரிபுரா சட்டமன்ற தேர்தல்: 13 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் 17 இடங்களில் காங்கிரஸ் போட்டி

திரிபுரா சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி முன்னணி கூட்டணியில் காங்கிரஸிற்கு 13 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் 17 இடங்களில் காஙகிரஸ் போட்டியை அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Congress releases list of 17 for Tripura first hitch in alliance with Left

கடந்த ஆண்டு இடைத்தேர்தலில் அவர் தக்கவைத்திருந்த அகர்தலா தொகுதியில் சுதீப் ராய் பர்மனை மீண்டும் காங்கிரஸ் நிறுத்தியுள்ளது.

திரிபுராவில் இடதுசாரி முன்னணியுடனான கூட்டணியில் உள்ள அனைத்து விரிசல்களும் இன்னும் சரி செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் 17 வேட்பாளர்களின் பட்டியலை சனிக்கிழமை (ஜன.28) வெளியிட்டது.

Advertisment

முன்னதாக, கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு மொத்தமுள்ள 60 இடங்களில் 47 இடங்களுக்கு இடதுசாரி முன்னணி வேட்பாளர்களை அறிவித்தது.

காங்கிரஸிற்கு 13 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் காங்கிரஸ் 17 இடங்களில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதாவது ஒதுக்கப்பட்ட இடங்களை விட 4 இடங்கள் கூடுதல் ஆகும்.

நீண்டகால கசப்பான போட்டியாளர்களான இடதுசாரி முன்னணியும் காங்கிரஸும் சில நாள்களுக்கு முன்பு ஆளும் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க ‘மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் முன்னணி” என்ற கூட்டணியை அமைத்தன.

இதற்கிடையில், பர்ஜாலா, மஜ்லிஷ்பூர், பதர்காட், ராதாகிஷோர்பூர் மற்றும் பாபியாசெரா ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் வேட்பாளரை அறிவிக்க உள்ளன.

மேலும், இடதுசாரி பட்டியலில் தனக்கு ஒதுக்கப்பட்ட பெச்சார்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

2018 சட்டமன்ற தேர்தலில் 56 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதன் ஒரே சிட்டிங் எம்எல்ஏ சுதீப் ராய் பர்மன், கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் பாஜகவில் இருந்து காங்கிரஸுக்குத் திரும்பிய பிறகு வெற்றி பெற்றார்.

அந்த வகையில் தற்போது, 2018 ஆம் ஆண்டில் 56 பேர் கொண்ட பட்டியலில் இருந்து அதன் மாநிலத் தலைவர் பிரஜித் சின்ஹா மற்றும் முன்னாள் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோபால் சந்திர ராய் உட்பட இரண்டு பெயர்களை மட்டுமே காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு இடைத்தேர்தலில் அவர் தக்கவைத்திருந்த அகர்தலா தொகுதியில் ராய் பர்மனை மீண்டும் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. மீண்டும் காங்கிரசுக்கு திரும்பியுள்ள ஆஷிஷ் குமார் சாஹா, கடந்த முறை பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற டவுன் பர்தோவாலியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

டவுன் பர்டோவாலியில் இருந்து மூன்று முறை வெற்றி பெற்ற சாஹா, இந்த முறை தற்போதைய முதல்வர் மாணிக் சாஹாவை அந்த இடத்தில் இருந்து எதிர்கொள்கிறார்.

இடது முன்னணி வேட்பாளர்களை அறிவிக்கும் போது, கன்வீனர் நாராயண் கர், மூத்த காங்கிரஸ் தலைவர்களுடன் இந்த பட்டியல் விவாதிக்கப்பட்டதாக கூறினார். காங்கிரஸ் அதிக இடங்களைக் கோரியதாகவும், இறுதியில் அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் இடதுசாரி வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டதாகவும் சிபிஐ(எம்) கூறியது.

காங்கிரஸ் பட்டியல் முன்னதாக ஜனவரி 25 அன்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இடதுசாரிகள் அதன் பெயர்களை அறிவித்த பிறகு, கட்சி சீட் பகிர்வு சூத்திரம் மற்றும் அதன் பெயர்கள் இரண்டிலும் அமைதியாக இருந்தது. வேட்புமனு தாக்கல் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பாஜக அவ்வாறு செய்ததை அடுத்து, சனிக்கிழமையன்று, காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு டெல்லியில் பெயர்களை வெளியிட்டது.

திரிபுரா சிபிஐ(எம்) மாநிலச் செயலர் ஜிதேந்திர சவுத்ரி, தங்களின் பெயர்கள் உயர்நிலைக் குழுவால் விவாதிக்கப்படுவதால், தாமதிக்குமாறு காங்கிரஸ் கேட்டுக் கொண்ட போதிலும், இடது முன்னணி பெயர்களை அறிவித்ததாக ஒப்புக்கொண்டார்.

தொகுதிகள் ஒன்றுடன் ஒன்று சில உரசல்களை ஏற்படுத்தினாலும், இரு கட்சிகளும் அதனை சமாளிக்க வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tripura
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment