Advertisment

கொரோனா தொடர்பு தடம் அறிதலில் கர்நாடகா டாப்: ஐ.சி.எம்.ஆர் ஆய்வு முடிவு

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றைக்  கட்டுப்படுத்தியதில் முக்கிய காரணியாக  காண்டாக்ட் டிரேசிங் (தொடர்பு தடமறிதல்) செயல்முறை உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona testing , contact tracing

Corona testing , contact tracing , Karnataka covid-19 contact tracing

பெங்களூர் மருத்துவமையில், 65 வயது நிரம்பிய ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த பிறகு, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இது, மாநிலத்தின் கொரோனா தொடர்பான முதல் மரணம் என்பதை அரசு நிர்வாகம் உறுதி செய்தவுடன், தொடர்பு தடமரிதல் ( காண்டாக்ட் டிரேசிங்)  செயல்முறையை முடிக்கிவிடப்பட்டது. மருத்துவ நிர்வாகமும், காவல்துறையும் கூட்டாக செயல்பட்டு நோயாளியுடன தொடர்பில் இருந்த 108 பேரை முறையாக தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா சோதனைக்கு உட்படுத்தினர். இதில், 28 பேர் நோயாளியுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், 76 பேர் இரண்டாம் கட்ட இரண்டாம் கட்ட தொடர்பில் இருந்தவர்கள்.

Advertisment

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்றைக்  கட்டுப்படுத்தியதில் முக்கிய காரணியாக  காண்டாக்ட் டிரேசிங் செயல்முறை உள்ளது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தொழிநுட்ப வல்லுனர்களின் கூட்டு முயற்சியால் நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதார அதிகாரிகள் வெற்றிகரமாக தனிமைப்படுத்தி நோய்ப் பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஜனவரி 22 முதல் ஏப்ரல் 30 வரை கோவிட் -19 நோயாளியுடன் தொடர்பில இருந்தவர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை மாநிலங்கள் அளவில் எப்படி உள்ளது? என்பது குறித்த ஆய்வறிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர். தொடர்பு தடமரிதளில் கர்நாடகா மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

சராசரியாக, கர்நாடகா மாநிலத்தில் நோயாளியுடன் தொடர்பில் இருந்த 93 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. தேசியளவில், இந்த சராசரி எண்ணிக்கை 20- ஆக உள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களான மகாராஷ்டிரா(8) ,   டெல்லி (9) போன்ற மாநிலங்கள் குறைவான  எண்ணிக்கையில் தான் சோதிக்கின்றன.

இருப்பினும்,நாட்டில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைவாக இருந்த காலகட்டத்தில் தான் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது, கொரோனா பாதிப்பு  அதிகரித்து வரும் சூழலில், காண்டாக்ட் டிரேசிங் செயல்முறையும் குறைந்து வருகிறது.

வியாழக்கிழமை மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், நோயாளியுடன் உடனடி தொடர்பில் இருந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். வியாழக்கிழமை நிலவரப்படி, டெல்லியின் கொரோன பாதிப்புகள் 32,810 ஆக அதிகரித்து இருந்தது.

சத்யேந்தர் ஜெயின் மேலும் கூறுகையில்," முந்தைய தடுப்பு நடவடிக்கைளின் போது, நோயாளியுடன் தொடர்பில் இருந்த 600 பேரை தனிமைப்படுத்தி, கொரோனா பரிசோதனை மேற்கொண்டோம். ஆனால், இன்று நாள் மட்டும் டெல்லியில் 1500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  1,500- ஐ, 600 உடன் பெருக்கினால் 9,00,000 பேரை ட்ரேசிங் செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

கர்நாடகாவைத் தவிரத்து, தொடர்பு தடமறிதலில் 75-வது உயர் செயல்திறன் கொண்ட மாநிலங்களாக கேரளா,  தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில், சராசரியாக கொரோனா  நோயாளியுடன்  தொடர்பில் 44 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கேரளாவில் இந்த எண்ணிக்கை 40 ஆக உள்ளது.

முதன்மை (நேரடி) தொடர்புகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலங்கள் பட்டியலிலும் கர்நாடகா முதல்நிலையில் உள்ளது. ஒரு கொரோனா நோயாளிக்கு, நேரடி தொடர்பில் இருந்த 47 பேரை கர்நாடாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்கிறது. தேசிய அளவில் இந்த எண்ணிக்கை இந்த எண்ணிக்கை 6-ஆக உள்ளது. தமிழ்நாட்டில் - 14, கேரளா - 11, மகாராஷ்டிரா - 2.3, டெல்லி - 2.1  என்ற எண்ணிகையில் நேரடி தொடர்புகளை சோதிக்கின்றன.

இருப்பினும், தொடர்பு தடமரிதலால் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம்  மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் அதிகளவில் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கின்றது. மகாராஷ்ட்ராவில் தொடர்பு தடமரிதல் மூலம் பரிசோதனை மேற்கொண்ட 11% பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது (நேரடி தொடர்புகளில் 13%) . டெல்லியில் இந்த விகிதம் 9 சதவீதமாக உள்ளது  (நேரடி தொடர்புகளில் 15%)

தேசிய அளவிலான சராசரி விகிதம் 4 சதவீமாக உள்ளது. (நேரடி தொடர்புகளில் 6 %)

மறுபுறம், கர்நாடகாவில் தொடர்பு தடமரிதல் முயற்சியால்  1% பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. (முதன்மை தொடர்புகளில் 1%). கேரளாவில் இந்த விகிதம்  2 சதவீதமாக உள்ளது (நேரடி தொடர்புகளில் 3%) .  தமிழகத்திலும் தொடர்பு தடமறிதலால் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது.

கர்நாடகாவில், மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் 3,092  கொரோனா நோயாளிகளில் 70% நோயாளிகள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும், அங்கு காண்டாக்ட் டிரேசிங் முழு மூச்சில் செயல்படுத்தப்படுகிறது.     சனிக்கிழமை நிலவரப்படி, கொரோனா நோயாளிகளுடன் நேரடி மற்றும் இரண்டாம் கட்ட தொடர்பில் இருந்த 35,552  பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment