Advertisment

20 ஆண்டுகளுக்கு பிறகு முறையாக நடக்கும் பூஜைகள்... ஓய்வெடுக்கும் ஏழுமலையான்!

பிரம்ம தீபம், அகண்ட தீபம் என 2 விளக்குகளும் சுப்ரபாத சேவையின் போது ஏற்றப்படும். இப்போதும் அந்த விளக்குகள் ஏற்றப்பட்டு வருகிறது - தலைமை அர்ச்சகர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
20 ஆண்டுகளுக்கு பிறகு முறையாக நடக்கும் பூஜைகள்... ஓய்வெடுக்கும் ஏழுமலையான்!

Corona outbreak Tirumala Tirupati Venkateswara temple devasthanam : இந்தியா முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு தலங்கள், விமான போக்குவரத்து, பேருந்துகள், ரயில்கள், திரையரங்குகள், மால்கள் என அனைத்தும் பூட்டப்பட்டுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தொகை வீட்டில் முடங்கியுள்ளனர். அனைத்து கோவில்களைப் போன்றும், இந்தியாவில் மிகவும் பிரபலமாக இயங்கி வந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலும் அடைக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் படிக்க :’2 வாரங்களாக சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறேன்’ – கமல் விளக்கம்

பொதுமக்கள் பார்வைக்கு மட்டுமே  அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடவுள்களுக்கு தேவையான அனைத்து பூஜைகளும் அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது. 20 ஆண்டுகளாக எப்போதும் பயங்கர பிஸியாகவே இருக்கும் திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் இப்போது ஆகமவிதிகளின் படி 6 நேரமும் பூஜைகள் நடைபெற்று வருவதாக அக்கோவிலின் தலைமை பூசாரி அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க : தெருக்களில் கேட்பதெல்லாம் ஆம்புலன்ஸ் சத்தம் மட்டுமே! உறைந்திருக்கும் இத்தாலி…

6 கால பூஜைகள், நெய்வேத்தியங்கள், பக்தர்களின் தொடர் வருகையால் செய்யவே இயலாமல் இருந்தது. ஆனால் தற்போது கோவில்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து பூஜைகளும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. பிரம்ம தீபம், அகண்ட தீபம் என 2 விளக்குகளும் சுப்ரபாத சேவையின் போது ஏற்றப்படும். இப்போதும் அந்த விளக்குகள் ஏற்றப்பட்டு வருகிறது. இரவில் அணைத்து, குளிர்விக்கப்பட்டு மீண்டும் அடுத்த நாள் காலையில் சுப்ரபாத சேவையின் போது மீண்டும் ஏற்றப்படுகிறது.  ஆனால் கோவிலுக்கு வெளியே எப்போதும் எரிந்து வரும் அகிலாண்டம் விளக்கு மட்டும் தற்போது ஏற்றப்படாமல் இருக்கிறது என்று அந்த கோவிலும் தலைமை பூசாரி ரமண திட்சிதலு அறிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment