Advertisment

லாக்டவுன்ல பொறந்த குழந்தைக்கு கொரோனான்னா பேர் வைப்பது?

ஊரடங்கு உத்தரவின் போது பலரும் பல சுவாரசியமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இது வேற லெவல்.

author-image
WebDesk
Apr 02, 2020 09:44 IST
New Update
Corona outbreak UP parents named their daughter Corona

Corona outbreak UP parents named their daughter Corona

Corona outbreak UP parents named their daughter Corona : இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மக்கள் அந்நோயின் பரவலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவின் போது பலரும் பல சுவாரசியமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை சமூக வலைதளங்களில் வீடியோவாகவும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் குவாரண்டைன் காலத்தை மேலும் சுவாரசியமாக்கும் வகையில் இரண்டு குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர்கள் பெயர் வைத்துள்ளனர்.

Advertisment

மேலும் படிக்க : கொரோனாவிற்கு பாடல்கள் மூலம் விழிப்புணர்வு – லாக்டவுனில் கோவை தம்பதியினர் புது முயற்சி 

கொரோனா குழந்தை

22ம் தேதி பின்பறப்பட்ட ஜனதா ஊரடங்கின் போது, பிறந்த பெண் குழந்தைக்கு கொரோனா என்றும் பெயரிட்டுள்ளனர் அவருடைய பெற்றோர்கள். இந்த சுவாரசியமான சம்பவம், கோரக்பூரில் நடைபெற்றது. இது தொடர்பாக அவருடைய மாமா கூறுகையில், இந்த கொரோனா நோய் தான் உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

லாக்டவுன் குழந்தை

உத்தரப் பிரதேசம், டியோரியா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது குகுண்டு கிராமம். திங்கள் கிழமையன்று பிறந்த அந்த ஆண் குழந்தைக்கு, அவருடைய பெற்றோர்கள் லாக்டவுன் என்று பெயரிட்டுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

#Coronavirus #Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment