Advertisment

தமிழகத்தில் மதுக்கடை திறப்பு, நோய் பரவல் வேகத்தை அதிகரிக்கும்: தலைவர்கள் கண்டனம்

Coronavirus Latest Updates: தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இது நோய் பரவலை மேலும் அதிகரிக்கும் என்று அரசின் இந்த முடிவுக்கு தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus latest news updates

coronavirus latest news updates

Covid-19 News Update : தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இது நோய் பரவலை மேலும் அதிகரிக்கும் என்று அரசின் இந்த முடிவுக்கு தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisment

கோயம்பேடு சந்தை கொரோனா காரணமாக நாளை (5-ம் தேதி) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. 7-ம் தேதி முதல் திருமழிசையில் காய்கறி மொத்த விற்பனை நடைபெற இருக்கிறது.

இந்தியா முழுவதும் 3-ம் கட்ட பொது முடக்கம் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. மத்திய அரசு வெளியிட்டிருக்கும் தளர்வுகளை மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன. தமிழகத்தில் இன்று முதல் பொது முடக்க தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன. அதே நேரத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் ஆலோசனையும் நடைபெறுகிறது. தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா வைரஸ், இருப்பது தெரியவந்திருக்கிறது. இவர்களில் 203 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், என்பதால் அங்கு இருப்பவர்களுக்கு அச்சம் மேலோங்கியிருக்கிறது.

கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களையும் ஒதுக்கித் தருமாறு, சென்னை மாநகராட்சி மண்டப உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில், தன்னார்வலர் உள்ளிட்ட 52 பேருக்கு வைரஸ் இருப்பதாக, சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். வீட்டு வேலை பணியாளர்கள், அனுமதி சீட்டு பெற்று பணிபுரிய வேண்டும், என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Live Blog

Coronavirus Live Updates : உலக அளவில், கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகள் அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.



























Highlights

    22:37 (IST)04 May 2020

    எண்ணிக்கை 2.50 லட்சத்தை கடந்தது.

    உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2.50 லட்சத்தை கடந்தது.

    இதுவரை 36 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11.70 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்!

    22:18 (IST)04 May 2020

    மிகவும் துரதிருஷ்டவசமான முடிவாகும்

    “தமிழ்நாட்டில் மதுக்கடைகள் வரும் 7-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்றும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரம் செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது தமிழ்நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்; இது மிகவும் துரதிருஷ்டவசமான முடிவாகும்.

    மதுக்கடைகள் திறக்கப்பட்டால் நோய்த் தொற்று பரவும் வேகம் மேலும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, கடந்த 40 நாட்களாக இல்லாமல் இருந்த சட்டம் & ஒழுங்கு பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். எனவே, மதுக்கடைகளை திறப்பதால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து, இம்முடிவை அரசு கைவிட வேண்டும்; மதுவிலக்கை அறிவிக்க வேண்டும்”.

    - ராமதாஸ்.

    22:14 (IST)04 May 2020

    இரு பெண்களுக்கு கொரோனா தொற்று

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று

    * 65 வயது மூதாட்டி, 67 வயது மூதாட்டி என இருவருக்கு பாதிப்பு என தகவல்

    *அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்

    21:36 (IST)04 May 2020

    ரூ.30,000 கோடி வரை கூடுதல் வருவாய் தவறான தகவல்

    பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி உயர்வால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது தவறானது

    * ஆண்டுக்கு ரூ.25,000 கோடி முதல் ரூ.30,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பதும் தவறானது

    - தமிழக அரசு

    21:30 (IST)04 May 2020

    உயிரோடு விளையாடும் செயல் - டிடிவி தினகரன்

    கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நாள்தோறும் பல நூற்றுக்கணக்கில் அதிகரித்து வரும் சூழலில், மதுக்கடைகளைத் திறப்பது மக்களின் உயிரோடு விளையாடும் செயல். துளியும் பொறுப்பற்ற இந்த நடவடிக்கையைப் பழனிசாமி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    மே 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் (TASMAC) கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு மிக மோசமானது - கண்டிக்கத்தக்கது.

    - டிடிவி தினகரன்

    21:28 (IST)04 May 2020

    முடிவை திரும்பப்பெற வேண்டும்

    மதுக்கடைகளை திறக்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

    21:25 (IST)04 May 2020

    மோசமான செயல்...

    மதுக்கடையை மீண்டும் திறப்பது மோசமான செயல் என தமிழருவி மணியன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

    20:51 (IST)04 May 2020

    வருங்காலத்தை சீர் குலைக்க அனுமதிக்கக் கூடாது

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டியில், தமிழகத்தில் 40 நாட்களாக மதுவை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த சூழ்நிலையை அரசு குலைக்க வேண்டாம். தமிழ் இனம் உயர்வதற்கான ஒளிக்கீற்று தென்படுகிறது. மது அரக்கன் மக்களின் வருங்காலத்தை சீர் குலைக்க, அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    20:31 (IST)04 May 2020

    இந்தியாவில் கொரோனா வைரஸ் குணமடைதல் விகிதம் 27.45%

    நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42,836-ஆகவும், மொத்த இறப்பு எண்ணிக்கை 1,389-ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்தமாக, 11,762 பேர் குணமடைந்திருக்கிறார்கள். நாட்டின் கொரோனா குணமடைதல் விகிதம் 27.45%-ஆக உள்ளதாக அமைச்சகம் தெரிவிக்கிறது.

    20:29 (IST)04 May 2020

    29 பேர் உயிரிழப்பு

    குஜராத்தில் இன்று மட்டும் 29 பேர் பலி!

    குஜராத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 29 பேர் உயிரிழப்பு!

    புதிதாக 376 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது.

    மொத்த பாதிப்பு - 5,804

    உயிரிழப்பு - 319

    20:29 (IST)04 May 2020

    கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழப்பு

    மேற்குவங்க மாநிலத்தில் இன்று 61 பேர் கொரோனாவால் பாதிப்பு; கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழப்பு..

    இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,259 ஆக உயர்ந்தது;

    மொத்தம் 61 பேர் உயிரிழந்துள்ளனர்

    20:15 (IST)04 May 2020

    பால் பாக்கெட்டுகளை ஏற்றும் பணிகள் பாதிப்பு

    சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அங்கு பால் பாக்கெட்டுகளை ஏற்றும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    19:50 (IST)04 May 2020

    தாராவியில் மேலும் 42 பேருக்கு கொரோனா

    மும்பை தாராவி பகுதியில் இன்று மேலும் 42 பேருக்கு கொரோனா உறுதியானது; அங்கு இதுவரை 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

    19:44 (IST)04 May 2020

    டாஸ்மாக் திறக்கப்படுவது ஏன்?

    தமிழகத்தை ஒட்டியுள்ள ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப்பகுதியில் உள்ள மக்கள் அதிகளவில் செல்வதால், மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவற்றை கருத்தில் கொண்டே டாஸ்மாக் திறக்கப்படுகிறது.

    19:38 (IST)04 May 2020

    ஆபத்தானது; கண்டனத்திற்குரியது

    ’டாஸ்மாக் திறப்பு: கே.பாலகிருஷ்ணன் கண்டனம்’

    கொரோனா பாதிப்புள்ள சூழலில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது ஆபத்தானது; கண்டனத்திற்குரியது

    - கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்)

    19:12 (IST)04 May 2020

    7ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறப்பு

    தமிழகத்தில் மே 7ஆம் தேதி முதல் மதுக்கடைகள் திறப்பு. நிபந்தனைகளுக்கு உட்பட்டு திறக்க தமிழக அரசு உத்தரவு. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படாது.

    மதுக்கடைகளில் ஒருநேரத்தில் 5 பேருக்கு மேல் கூட கூடாது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதி. அனைத்து மதுக்கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்

    18:48 (IST)04 May 2020

    7 ஆம் தேதி முதல் வெளிநாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டுவர நடவடிக்கை

    வெளிநாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் 7 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிவிகாரத் துறை அமைச்சக வலைதளங்களில் இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

    18:43 (IST)04 May 2020

    அத்தியாவசிய சேவைகளுக்கான அனுமதி சீட்டுகளின் கால அளவு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    அத்தியாவசிய சேவைகளுக்கான அனுமதி சீட்டுகளின் கால அளவு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

    18:40 (IST)04 May 2020

    கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது

    கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. சென்னை அருகே திருமழிசையில் வரும் 7-ம் தேதி முதல் தற்காலிக காய்கறி மொத்த விற்பனை அங்காடி செயல்படும். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டு கோள் என்று கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழு தெரிவித்துள்ளது.  

    18:24 (IST)04 May 2020

    சென்னையில் இன்று மட்டும் 266 பேருக்கு கொரோனா தொற்று

    தமிழகத்தில் சென்னை (266), கடலூர்(122) , விழுப்புரம் (49) போன்ற பகுதிகளில் அதிகமான கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது  

    17:47 (IST)04 May 2020

    ஷ்ரமிக் சிறப்பு ரயிலில் கட்டணம் வசூலிக்க படாது- மத்திய அரசு உத்தரவு

    பிற மாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்புபவர்களுக்கான ஷ்ரமிக் சிறப்பு ரயிலில் கட்டணம் வசூலிக்க படாது. 85 சதவீத கட்டணத்தை ரயில்வே துறையும், 15 சதவீத கட்டணத்தை மாநில அரசுகளும் ஏற்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  

    17:46 (IST)04 May 2020

    இதுவரை இல்லாத உயர்வு- தமிழகத்தில் இன்று 527 பேருக்கு கொரோனா உறுதி
    இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 527 பேரில், 377 ஆண்கள் மற்றும் 150 பேர் பெண்கள் ஆவார்கள்    
     
     

    17:34 (IST)04 May 2020

    இதுவரை இல்லாத உயர்வு- தமிழகத்தில் இன்று 527 பேருக்கு கொரோனா உறுதி

    இன்று தமிழகத்தில் 527 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றின் மொத்த எண்ணிக்கை 3,550 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 12,863 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.  ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.  1409 பேர் இதுவரை குணமடைந்த நிலையில், இன்று மட்டும் 30 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.      

    16:41 (IST)04 May 2020

    மே 31-ல் நடைபெறுவதாக இருந்த யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு

    மே 31 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் ப்ரிலிம்ஸ் தேர்வை ஒத்திவைப்பதாக யுபிஎஸ்சி இன்று தெரிவித்துள்ளது. தேர்வுக்கு 30 நாட்கள் முன்பாக  தேர்வு தேதிகள்  குறித்த அறிவிப்புகள்  வெளியிடப்படும் என்று யுபிஎஸ்சி  தெரிவித்துள்ளது.    இந்திய வனத்துறை சேவை தேர்வுகளுக்கான தேதிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

    16:35 (IST)04 May 2020

    இன்று மட்டும் இந்தியாவில் 2553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 42,533 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 2553 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது   

    29453 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.  

    இன்று மட்டும் 1074 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,706 ஆக உள்ளது . 

    15:42 (IST)04 May 2020

    சென்னை ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி

    சென்னை ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் அடிக்கடி கண்காணித்து வந்த நிலையில் ஐபிஎஸ் அதிகாரிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 

    15:29 (IST)04 May 2020

    சூரத் மாவடத்தில் மோதல்

    சூரத் மாவடத்தில் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கும்,  காவல் துறையினருக்கும்  இடையே மோதல் வெடித்தது. 

    15:23 (IST)04 May 2020

    swachata செயலி புதிய பிரிவுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது (2/2)
    • கோவிட்-19 காலத்தில் புகை பரப்புதல், கழிவு நீர் அகற்றுதல் கோரிக்கை
    • கோவிட்-19 காலத்தில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாட்டை மீறுவோர் பற்றிய தகவல்
    • கோவிட்-19 காலத்தில் முடக்கநிலை அமலை மீறுவது பற்றிய தகவல்
    • கோவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதாக எழும் சந்தேகம் பற்றிய கோரிக்கை
    • கோவிட்-19 காலத்தில் உணவுக்கான கோரிக்கை
    • கோவிட்-19 காலத்தில் தங்கும் இடத்துக்கான கோரிக்கை
    • கோவிட்-19 காலத்தில் மருந்துக்கான கோரிக்கை
    • கோவிட்-19 நோய் பாதித்த நோயாளியை அழைத்துச்  செல்வதற்கான வாகன வசதிக் கோரிக்கை
    • தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து கழிவுகளை அகற்றுவதற்கான கோரிக்கை.

    போன்ற புதிய ஒன்பது வகைப்பாடுகளில் புதிதாக அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.  

    15:20 (IST)04 May 2020

    swachata செயலி புதிய பிரிவுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது (1/3)

    கொரோனா நெருக்கடி காலத்தில், தூய்மையான பாரதம் திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கெனவே ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், கழிவுகள் அகற்றுதல், அதைச் சார்ந்த பணிகளை நல்ல முறையில் திட்டமிடுதல், அவற்றை செயல்படுத்துதல் ஆகியவற்றிற்கு Swachhata MOHUA செயலிஉதவியாக இருக்கின்றன. கோவிட் -19 தொடர்பான புகார்களைத் தெரிவித்து, தங்களுடைய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு உதவும் வகையில், இப்போது இந்தச் செயலி மாற்றி அமைக்கப்பட்டு, பலப்படுத்தப் பட்டுள்ளது.  முன்னர் இந்தச் செயலி ஒரு சில மாநிலங்கள் மற்றும் குடிமக்களுக்கு மட்டும் அளிக்கப் பட்டிருந்தது. மக்களின் கருத்துகளின் அடிப்படையில், இப்போது இந்தச் செயலி நாடு முழுக்க அளிக்கப் பட்டுள்ளது.

    15:18 (IST)04 May 2020

    சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருதுக்கு விண்ணப்பப்பிதற்கான கடைசி தேதி 30 ஜூன், 2020 வரை நீட்டிப்பு

    தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பங்களிப்பவர்களுக்கான மிக உயரிய சிவில் விருதாக சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருதை, சர்தார் வல்லபாய் படேலின் பெயரில் மத்திய அரசு நிறுவியது.

    இந்தத் துறையில் எழுச்சியூட்டும் வகையில் குறிப்பிடத்தகுந்த பங்களித்திருக்கும் தனி நபர்கள், நிறுவனங்கள் அல்லது அமைப்புகளை அங்கீகரித்து, வலிமையான, ஒற்றுமையான இந்தியாவின் மதிப்பை வலுப்படுத்துவது இந்த விருதின் நோக்கமாகும்.

    இந்த விருதுக்கான நியமனங்கள்/பரிந்துரைகளை வரவேற்று 20 செப்டம்பர், 2019 அன்று ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டது. https://nationalunityawards.mha.gov.in என்னும் இணையதள முகவரியில் இந்த விருது தொடர்பான தகவல்கள் கிடைக்கின்றன.

    மேற்கண்ட இணையதளத்தில் நியமனங்கள் வரவேற்கப்படுவதை 30 ஜூன், 2019 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    15:16 (IST)04 May 2020

    மேற்கு வங்கத்தில் அதிக இறப்பு விகிதம்  பதிவாகியுள்ளது

    நாட்டிலேயே  மேற்கு வங்கத்தில் அதிக இறப்பு விகிதம் (12.8% )உள்ளது என்று திங்கள்கிழமை, மத்திய மந்திரிகள் குழு (ஐ.எம்.சி.டி) தலைவர் அபூர்வா சந்திரா அம்மாநில தலைமைச் செயலாளர் ராஜீவா சின்ஹாவுக்கு அளித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    குறைந்த எண்ணிகையிலான பரிசோதனை, பலவீனமான கண்காணிப்பு  ஆகியவற்றின்  வெளிப்பாடாக இறப்பு விகிதம்  அதிகமாக இருக்கலாம் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.  

    15:09 (IST)04 May 2020

    ரஜினி காந்தின் ராகவேந்திர மண்டபம் தொடர்பான செய்திகள் உண்மையில்லை

    ரஜினி காந்தின் ராகவேந்திர மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 3 மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சியும் நடைபெறாத என்று பரப்படும் செய்தியில் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.    

    14:27 (IST)04 May 2020

    உதவி ஆய்வாளரின் மனைவி உட்பட  3 பேருக்கு கொரோனா உறுதி

    ஏற்கனவே, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரின் மனைவி உட்பட  3 பேருக்கு தற்போது கொரோனா  தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  

    14:25 (IST)04 May 2020

    சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் புதிதாக 20 பேருக்கு கொரோனா உறுதி

    சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் இன்று ஒரே நாள் மட்டும் புதிதாக 20 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

    13:28 (IST)04 May 2020

    இந்தியாவில் லாக்டவுன் மற்றும் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம்

    பொது முடக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவில் கொரோனா  நோயாளிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மத்தியிலேயே 8.2 லட்சமாக அதிகரித்து இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறுகிறது. தனி நபர் இடைவெளி மற்றும் தனிமனித சுகாதாரத்தைப் பற்றிய அரசின் பரந்துவிரிந்த பிரச்சாரத்தால் தான், நாட்டில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மே 2 அன்று 39,000 ஆக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   publive-image

    13:23 (IST)04 May 2020

    தமிழர்களை அழைத்துவர ரூ.1 கோடி நிதியுதவி வழங்கப்படும் - கே.எஸ். அழகிரி

    வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்க்ப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.   

    13:18 (IST)04 May 2020

    புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் 50 ரயில்கள் கட்டணத்தை தேஜாஷ்வி யாதவ் ஏற்றார்.

    ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜாஷ்வி யாதவ், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் 50 ரயில்கள் கட்டணத்தை பீகார் அரசுக்கு வழங்குவதாக அறிவித்தார்.

    தேஜாஷ்வி யாதவ் விடுத்துள்ள அறிக்கையில், பிற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும்  பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் திரும்ப அழைத்து வர சிறப்பு ரயில்களை இயக்கப்படுகிறது.தொழிலாளர் சகோதரர்களிடமிருந்து ரயில் கட்டணத்தை வசூலிக்க வேண்டாம் என்று மாநில அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். முதல் 50 ரயில்களின் செலவுகளை ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஏற்றுக் கொள்ளும்' என்று தெரிவித்துள்ளார்.    

    ஆதாரங்கள் இல்லை என்று காரணம் காட்டி சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரைத் திரும்பக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை கைவிட வேண்டாம். நீங்கள் (மாநில அரசு) தாமதமின்றி அவர்களை திரும்ப அழைத்து வர வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

    13:11 (IST)04 May 2020

    கொரோனா போராட்த்திற்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி ரூ.20 லட்சம் நிதி திரட்டியது.

    கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவும் வண்ணம் இந்திய மகளிர் ஹாக்கி அணி ரூ.20 லட்சம் நிதி திரட்டியுள்ளது. இந்திய மகளிர் ஹாக்கி அணி 18 நாட்கள் உடற்பயிற்சி சவால் மூலம் 20, 01,130 ஐ உயர்த்தியது. டெல்லியை தளமாகக் கொண்டு இயங்கும் உதய் அறக்கட்டளைக்கு  இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.

    13:04 (IST)04 May 2020

    டெல்லி, பெங்களூர் நகராட்சிகளில் உள்ள மதுக்கடைகள் முன்பாக பதிவு செய்யப்பட்ட காட்சிகள்  

    டெல்லி, பெங்களூர் நகராட்சிகளில் உள்ள மதுக்கடைகள் முன்பாக பதிவு செய்யப்பட்ட காட்சிகள்  

    12:43 (IST)04 May 2020

    கோயம்பேடு கொரோனா ஹாட் ஸ்பாட்

    கோயம்பேடு சுற்றுவட்டார பகுதிகளில், கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது கோயம்பேட்டுடன் தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

    12:11 (IST)04 May 2020

    கடலூரில் 699 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

    ”கடலூரில் இதுவரை 699 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட 699 பேரும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள். கடலூர் மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

    11:44 (IST)04 May 2020

    430 பேருக்கு கொரோனா பரிசோதனை

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 160ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கோயம்பேட்டில் இருந்து வந்த மேலும் 430 பேருக்கு கொரோனா பரிசோதனை தொடர்கிறது. 

    11:29 (IST)04 May 2020

    கோயம்பேட்டிலிருந்து கடலூர் திரும்பியவர்களுக்கு கொரோனா

    கடலூரில் இதுவரை 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் திரும்பியவர்களில் 129 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

    11:08 (IST)04 May 2020

    ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

    சென்னை மாதவரம் பால் பண்ணையில் பால் பாக்கெட்டை லாரியில் ஏற்றும் ஊழியர்கள் கொரோனா அச்சம் காரணமாக பணிக்கு வரவில்லை.  தொழிலாளர்கள் பணிக்கு வராததால், ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

    10:51 (IST)04 May 2020

    விழுப்புரத்தில் கோயம்பேடு கொரோனா தொற்று

    கோயம்பேடு சந்தை மூலம் விழுப்புரத்தில் இன்று மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    10:34 (IST)04 May 2020

    கோயம்பேட்டிலிருந்து சென்ற 7500 பேரை கண்டறியும் முயற்சி

    கோயம்பேட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற 7,500 தொழிலாளர்களை கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோயம்பேட்டில் இருந்து சென்றவர்களின் தகவல்களை மாவட்ட நிர்வாகம் வாங்கி ஆய்வு செய்து வருகின்றன

    10:16 (IST)04 May 2020

    அம்மா உணவக பெண்ணுக்கு கொரோனா

    சென்னை ஐஸ் ஹவுஸில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றிய திருவல்லிக்கேணியை சேர்ந்த 52 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    10:09 (IST)04 May 2020

    இந்தியாவில் கொரோனா

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 42 ஆயிரத்தைதாண்டியது. நாடு முழுவதும் 42,533 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 1,373 ஆக உயர்ந்துள்ள நிலையில், 11,707 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்

    10:04 (IST)04 May 2020

    கோயம்பேடு கொரோனா கிளைகள்

    கோயம்பேடு சந்தை மூலம் விழுப்புரத்தில் இன்று புதிதாக 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து காய்கறி வாங்கிவந்து விழுப்புரத்தில் விற்பனை செய்த 20 பேருக்கு இன்று கொரோனா.

    10:00 (IST)04 May 2020

    3-வது பொது முடக்கம்

    கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாடு முழுவதும் முடக்கம் செய்யப்பட்டது. மார்ச் 25-ம் தேதி முதல் லாக்டவுன், ஏப்ரல் 15 முதல் இரண்டாம் லாக்டவுன் என்றிருந்த நிலையில் மே 4-ம் தேதியான இன்று முதல் 3-ம் முடக்கம் அமலுக்கு வந்திருக்கிறது. 

    Corona Virus: வெளி மாநிலங்களில் தங்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்ப தமிழக அரசின் www.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் சிவப்பு நிற பட்டனை குளிக் செய்து தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் தங்கியுள்ள வெளி மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல விரும்புபவர்கள் www.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பழுப்பு நிற பட்டனை கிளிக் செய்து தங்கள் விபரங்களை பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    Coronavirus Corona Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment