Advertisment

தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் இன்று திறப்பு: சென்னையில் விற்பனைக்கு தடை

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tasmac supreme court, tamil nadu tasmac online purchase, tasmac .co.in, tasmac.co.in result, tasmac mobile app, tasmac online purchase in tamilnadu, டாஸ்மாக் ஆன்லைன், டாஸ்மாக் சுப்ரீம் கோர்ட் வழக்கு, டாஸ்மாக் வழக்கு, online wine shop, tamil nadu tasmac news today, tn tasmac.com, how to order liquor online in tamilnadu, order liquor online near me

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு இருந்த சட்ட தடைகள் விலகின. இதனையடுத்து,சென்னையைத் தவிர்த்து தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் இன்று திறக்கப்படுகிறது.

Advertisment

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வேளாண் துறைக்கு ரூபாய் 4 லட்சம் கோடி கடனுதவியை அறிவித்தார். அதோடு சாலையோர வியாபாரிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கும் நலத்திட்டங்களை அறிவித்தார். சாலையோர வியாபாரிகளுக்கு ஐந்தாயிரம் கோடி ரூபாய் கடனுதவியும், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குமிடம் மற்றும் உணவுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்குகிறது. நேற்று ஒரு நாளில் 447 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. டாஸ்மாக் சம்பந்தமான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழகத்தில் படிப்படியாகத்தான் ஊரடங்கை தளர்த்த வேண்டும் என சிறப்பு மருத்துவர் குழு தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. டெல்லியில் சிக்கித்தவித்த 1100-க்கும் மேற்பட்டோர் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர். இவர்களை கண்காணிக்க 400 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் புதுதில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.  .



























Highlights

    22:39 (IST)15 May 2020

    மாவட்ட வாரியான விவரம்

    22:14 (IST)15 May 2020

    சத்தம் போட்டு பேசினால் கொரோனா பரவுமா? விஞ்ஞானிகள் கூறும் தகவல்கள்

    அமெரிக்காவின் தேசிய அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், மக்களை பேச வைத்து சோதனை செய்தனர். அதில் குறிப்பிட்ட சில வார்த்தைகளை மெதுவாகவும், பிறகு வேகமாகவும் உச்சரிக்க செய்தனர். இந்த சோதனையில், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு நிமிடம் சத்தமாக பேசும்போது, கொரோனா வைரசை சுமந்த, கண்ணுக்கு புலப்படாத 1000க்கும் மேற்பட்ட உமிழ்நீர்த் திவலைகள் உருவாவதை கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த ஆய்வின் போது, ஒரு சில நபர்கள் சத்தமாக பேசும்போது, மற்றவர்களை விட 10 மடங்கு அதிகமான வைரசை காற்றில் பரப்புவதும் கண்டுபிடிக்கப்படடுள்ளது. இவ்வாறு காற்றில் பரவும் உமிழ்நீர்த் திவலைகள், 8 நிமிடம் முதல் 14 நிமிடம் வரை மிதந்துகொண்டிருப்பதையும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    21:52 (IST)15 May 2020

    கொரோனாவிற்கு கண்டுபிடித்த மருந்து என்ன? திருத்தணிகாசலம் வாக்குமூலம்

    கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக வீடியோ வெளியிட்டு வந்த திருத்தணிகாசலத்திடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை 4 நாட்கள் போலீஸ் கஷ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக திருத்தணிகாசலத்தின் கல்வி சான்றிதழ்கள்? அவர் எங்கு சித்த மருத்துவம் பயின்றார் போன்ற விவரங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

    கபசுர குடிநீரும், நிலவேம்பு கசாயமும் நோயைக் கட்டுபடுத்தும். அதையே தன்னிடம் வருபவர்களுக்கு கொடுத்ததாக விசாரணையில் திருத்தணிகாசலம் கூறியுள்ளதாக காவல்துறை உயரதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் போலீஸார் விசாரணை நாளையுடன் முடிவடையும் நிலையில் திருத்தணிகாசலத்திடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    21:16 (IST)15 May 2020

    கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் எத்தனை பேர்?

    வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இன்று கொரோனா பாதிப்பு உறுதியானவர்கள் எத்தனை பேர்?

    மாலத்தீவுகள் - 6

    மகாராஷ்டிரா - 40

    குஜராத் - 2

    கர்நாடகா - 1

    மொத்தம் - 49

    21:15 (IST)15 May 2020

    3-வது கட்ட சிறப்பு நிதித் தொகுப்பு

    கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நிவாரணத் திட்டங்களுக்காக 3-வது கட்ட சிறப்பு நிதித் தொகுப்பை அறிவித்தார் முதல்வர் எடியூரப்பா

    20:49 (IST)15 May 2020

    ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா

    * கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10,108 ஆக உயர்வு

    * சென்னையில் இன்று ஒரே நாளில் 309 பேருக்கு கொரோனா

    19:17 (IST)15 May 2020

    தயார் நிலையில் உள்ள டாஸ்மாக் டோக்கன்கள்

    டாஸ்மாக் வழங்குவதற்காக டோக்கன்கள் தயார் நிலையில் உள்ளன. ஞாயிறு முதல் திங்கள் வரை மதுவாங்க வண்ண டோக்கன்கள் வழங்க டாஸ்மாக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள், குறிப்பிட்ட நாளில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிக் கொள்ளலாம். சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்பட உள்ளது.

    19:11 (IST)15 May 2020

    மக்களே நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் - கமல் ட்வீட்

    மக்கள் நலனில் என்றும் இல்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் அரசு காட்டுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் விமர்சித்துள்ளார். இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இடைகாலத் தடை வாங்கி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மக்களே நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

    19:11 (IST)15 May 2020

    அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றம்

    மாணவர்கள் படிக்கும் அனைத்து பள்ளிகளும் தேர்வு மையங்களாக மாற்றம்

    * ஒரு தேர்வு அறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப் படுவார்கள்

    * பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்

    19:10 (IST)15 May 2020

    கொரோனா பாதிப்பு உறுதி

    கேரளாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

    * கொரோனா பாதித்த 576 பேரில் 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் - பினராயி விஜயன்

    17:30 (IST)15 May 2020

    இறால் இறக்குமதிக்கான அனுமதி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

    மார்ச் மாதத்துடன் அங்கீகாரத்தை‌ இழந்த 242 இறால் பண்ணைகள் மேலும் 3 மாதங்கள் செயல்பட அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.    

    17:17 (IST)15 May 2020

    வேளாண் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துதலில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்

    வேளாண் விளை பொருட்களை ஆன்லைனில் விற்க சட்டம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் தடையை நீக்கும் வகையில், வேளாண் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துதலில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.  

    17:08 (IST)15 May 2020

    வெங்காயம், உருளை ஆகியவற்றின் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும் - நிர்மலா சீதாராமன்

    வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு. இதன்மூலம் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளை ஆகியவற்றின் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. 

    தேசிய பேரிடர் அல்லது பஞ்சம் ஆகியவற்றால் விலை ஏற்றம் ஏற்படும்போது மட்டுமே விவசாய உற்பத்தி பொருட்கள் மீதான கையிருப்பு அளவை கட்டுப்படுத்துவது குறித்த விதிமுறைகள் வெளியிடப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.    

    17:00 (IST)15 May 2020

    ஆபரேஷன் கிரீன்: காய்கள், பழங்கள் என அனைத்து பயிர்களுக்கும் வழங்கப்பட உள்ளது

    விளை பொருளை வினியோகம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக ரூபாய் 500 கோடி நிதி ஒதுக்கீடு. ஏற்கனவே தக்காளி, வெங்காயம் மற்றும் உருளை பயிருக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் தற்போது காய்கள், பழங்கள் என அனைத்து பயிர்களுக்கும் வழங்கப்பட உள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

      

    16:58 (IST)15 May 2020

    நிர்மலா சீதாராமன்: தேனீ வளர்ப்பு முன் முயற்சிகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு

    தேனீ வளர்ப்பு முன் முயற்சிகளுக்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு. ஒருங்கிணைந்த தேனீ வளர்ப்பு மேம்பாட்டு மையங்கள், சந்தைப்படுத்துதல், சேகரிப்பு மையங்கள் ஆகியவை ஏற்படுத்தப்படும்.

    16:56 (IST)15 May 2020

    கால்நடை வளர்ப்பு கட்டமைப்பு நிதியாக 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

    கால்நடை வளர்ப்பு கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூபாய் 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு. பால் வளத்தைப் பெருக்குவதற்கு இந்த நிதி பெருமளவில் பயன்படுத்தப்படும். பால் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்கவும் இந்த நிதி உதவியாக இருக்கும். 

    16:50 (IST)15 May 2020

    மூலிகை பயிரிடுதலை ஊக்குவிப்பதற்காக 4000 கோடி ஒதுக்கீடு

    மூலிகை பயிரிடுதலை ஊக்குவிப்பதற்காக 4000 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட உள்ளது. தேசிய மருத்துவ தாவர வாரியம் 2.25 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மருத்துவ தாவரங்களை வளர்ப்பதை ஊக்குவித்துள்ளது. 

    அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் ஹெக்டேரில் மூலிகை பயிர்கள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நான்காயிரம் கோடி ரூபாய் நிதி பயனுள்ளதாக அமையும். 

    16:45 (IST)15 May 2020

    சிறு உணவு நிறுவனங்களுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

    சிறு, குறு உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

     

    16:43 (IST)15 May 2020

    13 ஆயிரத்து 340 கோடி ரூபாய் ஒதுக்கீடு - தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டம்

    தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 340 கோடி ரூபாய் ஒதுக்கீடு. இதன் மூலம் அனைத்து வகையான கால்நடைகளுக்கும் 100% தடுப்பூசி அளிப்பதை உறுதி செய்ய முடியும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  

    16:38 (IST)15 May 2020

    மீன்வளத்துறை திட்டத்தின்கீழ் மீனவர்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் நலத்திட்டம் அறிவிப்பு

    மீன்வள மேம்பாட்டிற்காக ரூ.11,000 கோடி நிதி அறிவிப்பு, மீன்பிடி துறைமுகம், மீன்சந்தைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.9,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    16:34 (IST)15 May 2020

    ரூ.ஒரு லட்சம் கோடி வேளாண் கட்டமைப்பு நிதி அறிவிப்பு

    விவசாய உற்பத்திப் பொருட்களை பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேளாண் கட்டமைப்பு நிதி ரூ.ஒரு லட்சம் கோடி அறிவிப்பு. குறு உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு பத்தாயிரம் கோடியிலான திட்டம். இது பிரதமரின் உள்நாட்டு உற்பத்தி கொள்கைக்கு வலு சேர்க்கும். 

    16:22 (IST)15 May 2020

    பிரதமர் விவசாயிகள் நிதி திட்டம்

    பிரதமர் விவசாயிகள் நிதி திட்டத்தின் கீழ் 18 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார் 

    16:21 (IST)15 May 2020

    ஊரடங்கு காலத்தில் 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது

    நிர்மலா சீதாராமன்:  ஊரடங்கின் போது பால் தேவை 20 முதல் 25 சதவீதம் வரை குறைந்தது. இதைச் சரிக்கட்ட 560 லட்சம் லிட்டர் பால் கூட்டுறவு அமைப்புகள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டது 

    16:19 (IST)15 May 2020

    74 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் நிறைவேற்றப்பட்டுள்ளது

    நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பு: இந்த இக்கட்டான கொரோனா பெருந்தொற்று சூழ்நிலையிலும் சமூக விலகல் மற்றும் இதர விதிமுறைகளை பின்பற்றி ரபி பருவ அறுவடையை விவசாயிகள் நிறைவேற்றியுள்ளனர் ஊரடங்கின்போது 74 ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் நிறைவேற்றப்பட்டுள்ளது

    16:17 (IST)15 May 2020

    ஊழியர்களுக்கு ரூ2500 கோடி இ.பி.எஃப் தொகை பங்களிப்பு: நிர்மலா சீதாராமன்

    வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர் பங்குத் தொகையில் ஒரு பகுதியை அடுத்த 3 மாதங்களுக்கு அரசு செலுத்தும் என்றும், ஏற்கனவே 3 மாதங்களுக்கு பிஎஃப் சந்தாவை அரசு செலுத்தும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கும் இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த காலாண்டில் தொழிலாளர்களும் நிறுவனங்களும் பி.எஃப். தொகையை 10% செலுத்தினால் போதும் என்றும் நிர்மலா சீதாரமன் முன்னதாக அறிவித்தார்.

    ஊழியர்களுக்கு ரூ2500 கோடி இ.பி.எஃப் தொகை பங்களிப்பு: நிர்மலா சீதாராமன்

    16:12 (IST)15 May 2020

    நிர்மலா சீதாரமான் நேற்று அறிவித்த நலத்திட்டங்கள் குறித்த ஒரு பார்வை:

    # மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரை ரூ.86,600 மதிப்புள்ள விவசாயிகளின் 63 லட்சம் கடன்கள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. கிராமப்புற மேம்பாட்டுக்காக 2020 மார்ச் மாதத்தில் மாநிலங்களுக்கு கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தின் கீழ் ரூ.4,200 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது.

    # கடந்த 2 மாதங்களில் புலம்பெயர்ந்தோர் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. பொதுமுடக்க காலத்தில் நகர்ப்புறத்தில் வீடற்றவர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு வழங்கப்பட்டுள்ளது.

    # புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலனுக்காக மாநிலங்களுக்கு ரூ.11,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், விவரங்களுக்கு விவசாயிகள், மீனவர்கள் தெருவோர வியாபாரிகள்... நிர்மலா சீதாராமன் சலுகைகள் ஹைலைட்ஸ்

    16:09 (IST)15 May 2020

    விவசாயிகள், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், பால்வளம் உள்ளிட்ட துறைகளில் நலத்திட்டங்கள் இன்று அறிவிப்பு

    மூன்றாவது நாளாக சுயசார்பு இந்தியா நிதித் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட உள்ள நலத்திட்டங்கள் குறித்து நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சற்று நேரத்தில் உரையை துவக்க உள்ளார். விவசாயிகள், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், பால்வளம் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ளது.

    16:05 (IST)15 May 2020

    கடந்த 2 நாட்களில் அறிவித்த முக்கிய அறிவிப்புகள்

    16:03 (IST)15 May 2020

    இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்திக்கிறார்

    மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்னும் சற்று நேரத்தில் புதுதில்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார். 

    15:35 (IST)15 May 2020

    இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது - டாஸ்மாக் விவாகரம் குறித்து கமல்ஹாசன்

    உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும் என்று இழுத்தடித்து, உச்ச நீதிமன்றத்தில் இடைகாலத்தடை வாங்கி விட்டது தமிழக அரசு. மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை, மதுக்கடை திறப்பில் காட்டும் இந்த அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது என்று கமல்ஹாசன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.  முன்னதாக, ஊரடங்கு காலம் முடியும் வரை அனைத்து  டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை  உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது. 

    15:28 (IST)15 May 2020

    50% பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும்

    வரும் திங்கட்கிழமை முதல் வாரத்தில் 6 நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்பட வேண்டும். சுழற்சி முறையில் அரசு ஊழியர்கள் பணியாற்றுவார்கள். குரூப் ஏ, அரசு உயர் அதிகாரிகள் அனைத்து நாட்களும் வேலைக்கு வரவேண்டும். தேவையான போக்குவரத்து வசதி செய்து தரப்படும்  என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

    15:26 (IST)15 May 2020

    துபாயிலிருந்து 11 ஏர் இந்திய விமானங்கள் இந்தியாவுக்கு இயக்கப்படும்

    நாளை முதல் மே 23 வரை வந்தே பாரத இயக்கத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக துபாயிலிருந்து 11 ஏர் இந்திய விமானங்கள் இந்தியாவுக்கு இயக்கப்பட உள்ளதாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

    14:51 (IST)15 May 2020

    கடன் தள்ளுபடி, நேரடி உதவி என பசி தீர்ப்பதே இன்றைய அவசரத் தேவை!

    நிதியமைச்சரின் 2 ஆம் நாள் “20 லட்சம் கோடி” அறிவிப்பும் வழக்கமான ‘பகட்டு அறிவிப்பு’ பாலிடிக்ஸ்தான். விவசாயிகள், நடைபாதை வியாபாரிகளிடம் “கடன் வாங்கிக் கொள்” என்று சுமை ஏற்றுவதுதான் அரசாங்கமா? கடன் தள்ளுபடி, நேரடி உதவி என பசி தீர்ப்பதே இன்றைய அவசரத் தேவை! வட்டிக்கு கொடுப்பதில்லை! என்று திமுக தலைவர் மு. க ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். 

    14:44 (IST)15 May 2020

    10ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்க கோரும் பொது நல வழக்கு வாபஸ்

    10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

    14:39 (IST)15 May 2020

    இந்தியாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை - 2649

    14:23 (IST)15 May 2020

    சென்னை உயர்நீதமன்ற தீர்ப்புக்கு தடை

    Appeal by Tamil Nadu Govt challenging Madras High Court's order directing to close all TASMAC liquor shops and only online sale of liquor in the state during COVID19 lockdown: Supreme Court stayed the Madras High Court order. Additional conditions also stayed. pic.twitter.com/zw4aPldody— ANI (@ANI) May 15, 2020ஊரடங்கு காலம் முடியும் வரை அனைத்து  டாஸ்மாக் கடைகளை மூடுமாறு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை  உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    14:15 (IST)15 May 2020

    மாலை 4 மணிக்கு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்கிறார்

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று  மாலை 4 மணிக்கு புதுதில்லியில் செய்தியாளர்களை சந்திக்கிறார். ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் கீழ், கொரோனா பெருந்தொற்று எதிர்த்துப் போரிடுவதற்கு இந்திய பொருளாதாரத்திற்கு உதவும் அறிவிப்புகளை வெளியிடுகிறார்.   

    13:23 (IST)15 May 2020

    கடலூர் மாவ்வட்டத்தில் 146 பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்

    கடலூர் மாவட்டத்தில் 146 பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். கோயம்பேடு தொடர்புடைய 146 பேரும் 14 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தனிமை முகாம்களில் 14 நாட்கள் இருந்த 169 பேரும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்

    12:37 (IST)15 May 2020

    கொரோனா தடுப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

    சென்னையை பொறுத்தவரை பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை. நோய் தொற்று உள்ளவரை தொடுவதால் வாய், மூக்கு வழியாக பரவுகிறது. முகக்கவசம் கட்டாயம், கை கழுவ வேண்டும். பகுதி வாரியாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட நோய் அதிகம் உள்ள 10 பகுதிகளை கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கோடம்பாக்கம், வளசரவாக்கம் சவாலான மண்டலம். இங்கு வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கி வருகிறோம். தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என கொரோனா தடுப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

    12:24 (IST)15 May 2020

    டாஸ்மாக் வழக்கு

    மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரிய 2 மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு. சிஸ்டம் சார்ந்த விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என உச்சநீதிமன்றம் கருத்து.

    11:20 (IST)15 May 2020

    வீடு திரும்பிய காவல் உதவி ஆணையர்

    கொரனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 2 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையர், துறைமுகம் உதவி ஆணையர், முத்தியால் பேட்டை ஆய்வாளர் வீடு திரும்பினர். வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள மருத்துவ அதிகாரிகள்அறிவுறுத்தி உள்ளனர்

    11:09 (IST)15 May 2020

    கொரோனா பாதிப்பு முடிந்ததும் தான் கல்லூரிகள் திறக்கப்படும்

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதும் முடிந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்கியுள்ள கல்லூரிகளில் தூய்மைப்பணி முடிந்த பிறகே வகுப்புகள் தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். 

    10:28 (IST)15 May 2020

    சென்னை ராயபுரத்தில் 1,000ஐ நெருங்கும் பாதிப்பு!

    சென்னை ராயபுரம் மண்டலத்தில் இதுவரை 971 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்; கோடம்பாக்கத்தில் 895 பேருக்கு கொரோனா; திரு.வி.க.நகரில் 699 பேருக்கு கொரோனா சென்னையில் 5,637 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    10:06 (IST)15 May 2020

    கோயம்பேடு குறித்து ஜெயக்குமார்

    கோயம்பேடு மார்க்கெட் தொடர்பாக எடுத்தேன், கவிழ்த்தேன் என முடிவு எடுக்க முடியாது. தொற்று ஏற்பட்டதும் அரசு துரிதமாக செயல்பட்டு அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் முடிவு எடுத்தது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

    09:48 (IST)15 May 2020

    இந்தியாவில் கொரோனா

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,000 நெருங்கியது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  81,970, இதில் 27,920 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். 2,649 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில், 2-வது இடத்தில் தமிழகமும் உள்ளது. 

    மூன்றாவது நாளாக சுயசார்பு இந்தியா நிதித் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட உள்ள நலத்திட்டங்கள் குறித்து நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் சற்று நேரத்தில் உரையை துவக்க உள்ளார். விவசாயிகள், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், பால்வளம் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ள நலத்திட்டங்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட உள்ளது.

    Coronavirus Corona Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment