Advertisment

பிளாஸ்மா சிகிச்சையால் யாருக்கு பயன் - டாக்டர்கள் சொல்வது என்ன?

ICMR Plasma therapy : ஐசிஎம்ஆருக்கு அனுப்பப்படும் சோதனைகளின் முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படுவதாக முதன்மை ஆலோசகர் அபர்ணா முகர்ஜி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona virus, Plasma therapy, Covid pandemic, India corona virus, Plasma therapy, plasma therapy for COVID patients, why plasma therapy for coronavirus, Plasma therapy coronavirus, ICMR Plasma therapy, indian express

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க பிளாஸ்மா சிகிச்சை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையில் நல்ல பலன் கிடைக்கவே, கொரோனா தொற்றிலிருந்து குணம் பெற்றவர்களிடமிருந்து ரத்தத்தை பெற்று அதிலிருந்து பிளாஸ்மாவை தனித்து எடுத்து நோயாளிகளுக்கு செலுத்தி சோதனை நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த பிளாஸ்மா சிகிச்சை நடைமுறை, முற்றிலும் இந்தியாவிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறை ஆகும். இதுதொடர்பான சோதனை நடத்தி வரும் மருத்துவ ஆய்வு நிறுவனங்கள், தங்களது ஆய்வறிக்கையை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் (ஐசிஎம்ஆர்) சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் பிளாஸ்மா சிகிச்சை குறித்த PLACID trial சோதனைகள் 52 மையங்களில் நடைபெற்று வருகின்றன. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை 36 நிறுவனங்களின் முதன்மை விஞ்ஞானிகளுடன் நடத்திய நேர்காணலில், 24 நிறுவனங்களில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை முறை போதிய அளவிற்கு வெற்றி பெற்றாலும், குணம் அடைந்தவரின் ரத்தத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுக்க வேண்டும் என்பது மிகச்சவாலானதாக உள்ளது. கொரோனா தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டவரது ரத்தத்தை இந்த சிகிச்சைக்கு பயன்படுத்த முடிவதில்லை.

கொரோனா தொற்றால் குணமடைந்தவர்கள் அறிகுறிகள் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் அவர்களின் ரத்தத்தில் இருந்துதான் ஆன்ட்டிபாடிகள் எடுக்கப்படுகின்றன. குணமடைந்தவர்களுக்கு சோதனை முடிந்த 5 முதல் 10 நாட்களுக்குள் அவர்களிடமிருந்து பெற்ற ரத்தத்தில் இருந்து பிளஸ்மா பெறப்படுவதையே நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சிகிச்சை நடைமுறைகள் சரியான நேரத்தில் நடைபெற்றால், மருத்துவமனையில் தங்கியிருக்கும் நேரம், வைரல் சோதனை, ஆக்சிஜன் தேவை உள்ளிட்டவைகள் குறைவதுடன் எதிர்மறையான சோதனை முடிவுகளும் பெருமளவில் தவிர்க்கப்படுகின்றன.

ஒரு மருத்துவருக்கு பிரெஷ் ஆன பிளாஸ்மா கிடைக்கும் பட்சத்தில், மற்ற மருத்துவர்கள், கொரோனா அறிகுறி இல்லாத நபரிடமிருந்து ரத்தத்தை பெற்று அதன்மூலம் தேவையான ஆன்ட்டிபாடிகளை பெற நீண்ட காலம் காத்திருக்க நேரிடுவதே பெரும் சவாலாக உள்ளது.

ஐசிஎம்ஆருக்கும் அனுப்பப்படும் சோதனைகளின் முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்படுவதாக முதன்மை ஆலோசகர் அபர்ணா முகர்ஜி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் மூலம் குணமடைந்தவரின் ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிளாஸ்மா, தொற்று உடையவரின் உடலில் செலுத்தப்படுகிறது. அதன்மூலம் அவரது உடலில் செயலற்ற நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு, அது தடுப்பு மருந்தின் active immunityக்கு எதிராக செயல்பட துவங்குகிறது.

பிளாஸ்மா சிகிச்சைக்கு இதுவரை 452 நோயாளிகளின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகளவு பதிவு, சென்னை மருத்துவ கல்லூரியிலேயே நடைபெற்றுள்ளது. இவர்களில் 24 நோயாளிகளுக்கு பிளாஸ்மா செலுத்தாத நிலையில் அவர்கள் கண்ட்ரோல்கள் ஆக ஐசிஎம்ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 85 சதவீதம் பேர் குணமடைந்துள்ளதாகவும், இவர்களுக்காக 60 சதவீதம் பேர் கண்ட்ரோல்களாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மருத்துவ கல்லூரியின் முதன்மை விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

நாம் நோயாளியின் உடம்பில் செலுத்தும் பிளாஸ்மா சீராக ஒட்டி செயலாற்றினால் மட்டுமே இந்த சோதனை வெற்றி பெறும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்மா சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகளின் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 90க்கும் கீழ் குறைவாக இருக்கும் பட்சத்தில் சிகிச்சைக்காக அவர்களுக்கு 10 முதல் 12 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படும். அவர்களது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு ஒரேநாளில் 90 என்ற அளவை கடந்துவிட்டால், வெளியிலிருந்து செலுத்தப்படும் ஆக்சிஜனின் அளவு 2 லிட்டர் என்ற வீதத்தில் குறையும்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், பிளாஸ்மா சிகிச்சை முறைக்கு கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி அதிகாரப்பூர்வமற்ற முறையில் அனுமதி அளித்தது. நோய்ப்பாதிப்பு குறைவாக உள்ள நோயாளிகள் மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை ஸ்டீராய்டுகள் உதவியுடன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு இந்த பிளாஸ்மா சிகிச்சை முறையை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

“convalescent plasma therapy கொரோனா சிகிச்சைக்கு மட்டுமல்லாது இதற்குமுன் சார்ஸ் , மெர்ஸ் உள்ளிட்டவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைந்ததை தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற பிளாஸ்மா சிகிச்சை விழிப்புணர்வை துவக்கிவைத்தார். இதனையடுத்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிளாஸ்மா வங்கிகள் துவங்கப்பட்டு வருகின்றன.

சென்னை மருத்துவ கல்லூரிக்கு அடுத்தபடியாக PLACID trialக்கு மகாராஷ்டிராவின் ஆர்சிஎஸ்எம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் கோல்ஹாபூர் சிபிஆர் மருத்துவமனையில் அதிக பதிவுகள் நடைபெற்றுள்ளன. கொரோனா தொற்று குறைவாக உள்ள 25 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில், 85 சதவீதம் பேருக்கு 3 நாட்களில் நெகட்டிவ் முடிவுகள் வந்துவிட்டன, அவர்கள் 11 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்தனர். இவர்களுக்கு 16 கண்ட்ரோல்கள் சோதனைக்கு பயன்படுத்தப்பட்டன.

இவர்களில் அதிக பாதிப்பு கொண்ட 5 நோயாளிகளுக்கு கடைசிவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று டாக்டர் வருண் அசோக் பாப்னா தெரிவித்துள்ளார்.

நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு எனக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், என்னால் பூரண குணம் அடைய முடியவில்லை. இந்த சிகிச்சை முறையை முழுவதுமாக நம்ப முடியாது என்றாலும், நோயாளிகளை ஸ்டெபிலைஸ்படுத்த இந்த சிகிச்சை முறை பயனளிக்கும் என்று நொய்டாவில் உள்ள சூப்பர் ஸ்பெசாலிட்டி குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் கல்வி மையத்தின் இயக்குனர் டாக்டர் சத்யம் ஆரோரா தெரிவித்துள்ளார். தாங்கள் 5 நோயாளிகளுக்கும் வெளியில் இருந்து 2 பேருக்கும் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொண்டதில் 7 பேரும் குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கண்ட்ரோல்களின் அடிப்படையிலான பிளாஸ்மா சிகிச்சை முறையினால் பலருக்கு நெகட்டிவ் என்று முடிவுகள் வருகின்றன. அவர்கள் ஐசியுக்கு மாற்றப்படுகின்றனர். அங்கிருந்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நோய்ப்பாதிப்பு குறைவாக உள்ள 90 பேருக்கு நடத்த பிளாஸ்மா சிகிச்சையில் 80 சதவீதம் பேர் நான்கு நாட்களில் குணமடைந்துவிட்டதாக மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஸ்ரீ அரபிந்தோ இன்ஸ்ட்டியூட்டின் டாக்டர் ரவி தோஷி தெரிவித்துள்ளார். அவர்களுக்கு ரேடியாலஜி ஸ்கேன்களின் மூலம் 10 நாட்களில் கிடைக்கவேண்டிய பலன்கள் 4வது நாளிலேயே கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் 4 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தனித்தனியாக வெண்டிலேட்டர் வசதி தேவைப்பட்டதாக டாக்டர் நேஹா சிங் தெரிவித்துள்ளார். பிளாஸ்மா பெறும் நிகழ்வே மிக சவாலானதாக இருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் தன்னிச்சையாகவே குணமடைந்து விடுவதாகவும், பிளாஸ்மா சிகிச்சை ஓரளவிற்கே பயன் அளிப்பதாக பூனா மருத்துவமனை டாக்டர் விருஷாலி மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

10 நோயாளிகளுக்கு பிளாஸ்மா செலுத்தப்பட்டதில் 7 முதல் 10 நாட்களுக்கு அவர்களது உடலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த பிளாஸ்மா சிகிச்சை தொடர்பாக ஊடகங்களே அதிகளவில் பிரபலப்படுத்தி வருகின்றன. ஆனால் இந்த சிகிச்சசையின் எதிர்மறைத்தன்மை விளைவை அது வெளியிட மறுத்து விடுகின்றன என்று சண்டிகர் PGIMER மருத்துவமனையின் டாக்டர் பங்கஜ் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - Plasma therapy effective for moderately ill patients, say most doctors of ICMR trial

Corona Virus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment