Advertisment

Coronavirus Updates : தமிழகத்தில் முதல்முறையாக ஒருவர் கொரோனா சிகிச்சைக்காக பிளாஸ்மா தானம்

Coronavirus Latest Updates: கடந்த 24 மணி நேரத்தில் 1,511 பேர் குணம் அடைந்துள்ளனர். இதையடுத்து, குணமானவர்கள் எண்ணிக்கை 30 சதவீதத்தை தாண்டியுள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus Updates : தமிழகத்தில் முதல்முறையாக ஒருவர் கொரோனா சிகிச்சைக்காக பிளாஸ்மா தானம்

Covid-19 Cases Update: பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் 5 வது முறையாக காணொலிக் காட்சி மூலம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியான டுவிட்டர் பதிவில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில், 66,918  பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றில் இருந்து 3,277 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 128 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரழப்பு 2,109  ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில், நோய் தாக்கியவர்களில் 19,357 பேர்  குணமடைந்துள்ளனர் . கடந்த 24 மணி நேரத்தில் 1,511 பேர் குணம் அடைந்துள்ளனர். இதையடுத்து, குணமானவர்கள் எண்ணிக்கை 30 சதவீதத்தை தாண்டியுள்ளது. குணம் அடைபவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களில் 3 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் குணமடைந்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Coronavirus Updates : கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம்.



























Highlights

    22:06 (IST)11 May 2020

    கொரோனா தடுப்பு பணியில் உதவுவதற்கு மத்தியக் குழு நாளை சென்னை வருகை

    கொரோனா தடுப்பு பணியில் உதவுவதற்காக மத்தியக் குழு நாளை சென்னை வருகை தர உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

    21:26 (IST)11 May 2020

    தமிழகத்தில் முதல்முறையாக ஒருவர் கொரோனா சிகிச்சைக்காக பிளாஸ்மா தானம்

    தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒருவர், கொரோனா சிகிச்சைக்காக முதலாவதாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவனையில் பிளாஸ்மா தானம் அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    21:20 (IST)11 May 2020

    விழுப்புரத்தில் மாணவியை எரித்துக்கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் - விஜயகாந்த்

    விழுப்புரத்தில் மாணவியை எரித்துக்கொன்றவர்களை தூக்கிலிட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    20:23 (IST)11 May 2020

    இதுவரை இல்லாத அளவில் இன்று சென்னையில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் இன்று புதிதாக 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 4 பெண்கள் 2 ஆண்கள் என மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    19:47 (IST)11 May 2020

    விழுப்புரத்தில் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

    விழுப்புரத்தில் எரித்துக்கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    19:27 (IST)11 May 2020

    உச்சநீதிமன்றத்தில் நாளை டாஸ்மாக் வழக்கு விசாரணை: தமிழக அரசு கோரிக்கை ஏற்கப்படுமா?

    தமிழக அரசின் டாஸ்மாக் மது விற்பனைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள டாஸ்மாக் வழக்கு விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ள டாஸ்மாக் தொடர்பான வழக்கு விசாரணையில் மிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

    19:11 (IST)11 May 2020

    தமிழகத்தில் இன்று புதிதாக 798 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 8000ஐ தாண்டியது

    தமிழகத்தில் மேலும் இன்று புதிதாக 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது.

    19:11 (IST)11 May 2020

    தமிழகத்தில் இன்று புதிதாக 798 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 8000ஐ தாண்டியது

    தமிழகத்தில் மேலும் இன்று புதிதாக 798 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது.

    19:09 (IST)11 May 2020

    விழுப்புரம் சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் பழனிசாமி க்டும் கண்டனம்

    விழுப்புரத்தில் சிறுமி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “விழுப்புரம் - சிறுமதுரையில் சிறுமி ஜெயஸ்ரீ மிருகத்தனமாக கொல்லப்பட்ட செய்தி நெஞ்சை பதற வைக்கிறது. இக்கொடூர செயலை வன்மையாக கண்டிக்கிறேன். சிறுமியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இச்செயலில் ஈடுபட்டுவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.

    17:37 (IST)11 May 2020

    தமிழகத்திற்கு ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும்; பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்

    பிரதமர் மோடி, காணொலி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியபோது, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2,500 கோடி கடன் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    17:30 (IST)11 May 2020

    அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கூடுதல் உணவு தானியம் வழங்க வேண்டும்; முதல்வர் கோரிக்கை

    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை அதிகரிக்க வேண்டும். அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கூடுதல் உணவு தானியங்களை வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    17:27 (IST)11 May 2020

    சென்னைக்கு மே 31-ம் தேதி வரை ரயில், விமான சேவை தொடங்க வேண்டாம்; பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

    சென்னையில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், மே 31-ம் தேதி வரை சென்னைக்கு ரயில் சேவையை தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடியிடன் முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், விமான சேவையையும் தொடங்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

    17:17 (IST)11 May 2020

    கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.2,000 கோடியை வழங்க வேண்டும்; முதல்வர் பழனிசாமி பிரதமரிடம் வலியுறுத்தல்

    காணொலி மூலம் பிரதமர் மோடி மாநில முதல்வர்களுடன் நடத்திய ஆலோசனிஅக் கூட்டத்தில், தமிழக முதல்வர் பழனிசாமி, கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக அரசு ஏற்கெனவே கேட்ட ரூ.2,000 கோடியை விடுவிக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினார். தேசிய பேரிடம் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடியை வழங்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கோரியுள்ளார்.

    சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இப்போதைக்கு ரயில் சேவையை தொடங்க வேண்டாம் என்றும் மே 31-ம் தேதி வரை சென்னைக்கு ரயில் சேவையை அனுமதிக வேண்டாம் என்று முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

    17:03 (IST)11 May 2020

    வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஒத்துழைக்க வேண்டும் - பிரதமர் மோடி

    புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

    சிவப்பு மண்டலங்களில் மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

    16:28 (IST)11 May 2020

    செங்கல்பட்டில் மேலும் 91 பேருக்கு கொரோனா

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

    16:08 (IST)11 May 2020

    கொரோனா இல்லாத மாவட்டமாகிறது திருப்பூர்

    கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து கொரோனாவிலிருந்து குணமடைந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இருவர் இன்று வீடு திரும்ப உள்ளனர். கொரோனா இருந்த எஞ்சிய இருவரும் குணமடைந்ததால் தொற்று இல்லாத மாவட்டமாகிறது திருப்பூர். 

    15:38 (IST)11 May 2020

    முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

    மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை தொடங்கியது. ஊரடங்கு தளர்வால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடைப்பெறுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

    14:41 (IST)11 May 2020

    பொதுநல மனு

    கொரோனா தொற்றுக்கு "எத்தனால் வேப்பர் தெரபி" சிகிச்சைக்கு அனுமதி அளிக்க ஐசிஎம்ஆருக்கு உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

    14:28 (IST)11 May 2020

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா

    தாம்பரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று உறுதியான 6 பேரும் கோயம்பேடு தொடர்பு உடையவர்கள். கன்டோன்மென்ட் கவுன்சிலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தாம்பரம், பல்லாவரம் நகராட்சியில் மட்டும் இதுவரை 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    14:08 (IST)11 May 2020

    டாஸ்மாக் விவகாரம்

    டாஸ்மாக் விவகாரத்தில், "ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மது வைத்திருப்பது முரண்பாடாக உள்ளதே?” என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. 

    13:29 (IST)11 May 2020

    புலம்பெயர் தொழிலாளர்கள் விரைவில் தங்கள் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் - முதல்வர்

    இதுவரை 9 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் 8  சிறப்பு ரயில்களில் மூலம் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார். மேலும்,தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் தங்கள் சொந்த இடங்களுக்கு இன்னும் ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று உறுதியளித்தார்.  

    12:28 (IST)11 May 2020

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந் தேதி திறப்பு

    வைகாசி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை  திறக்கப்படுகிறது. 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும் என்றும், தினமும் அதிகாலை 5- 10 மணி மற்றும் மாலை 5 -  இரவு 7.30 மணிக வரை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.    

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊடரங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாளல், ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

    12:12 (IST)11 May 2020

    விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று - திருநள்ளாறு காவல் நிலையம் மூடப்பட்டது

    திருநள்ளாறு காவல் நிலையத்தில் விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சம்மந்தப்பட்ட அனைத்து காவலர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    12:11 (IST)11 May 2020

    விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று - திருநள்ளாறு காவல் நிலையம் மூடப்பட்டது

    திருநள்ளாறு காவல் நிலையத்தில் விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சம்மந்தப்பட்ட அனைத்து காவலர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

    12:01 (IST)11 May 2020

    வீட்டில் தனிமைப்படுத்தல் சிகிச்சை குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

    அறிகுறிகள் காட்டத் தொடங்கிய 17 நாட்களுக்குப் பிறகு, தொடர்ந்து 10 நாட்களுக்கு காய்ச்சல் இல்லாத நோயாளிகள் தனிமைப்படுத்தல் சிகிச்சையை முடிக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.நேற்று, வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, லேசான கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தல் சிகிச்சைப் முடிந்ததும் கொரோனா டெஸ்டிங் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளளது (உடல் வெப்பநிலை சோதனை மட்டும் போதுமானது). முன்னதாக, ஏப்ரல் 27 சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, நோய் பாதப்பு இல்லை என்று  கண்காணிப்பு மருத்துவ அதிகாரி வழங்கிய சான்றிதழ் அடிப்படையில் மட்டும் தனிமைப்படுத்தல் சிகிச்சை முடிவடையும். 

    மேலும், லேசான அல்லது முன் அறிகுறிகள் கொண்ட நோயாளிகள், தனிமைப்படுத்தல் சிகிச்சைப் பகுதிக்கான வசதிகளையும்,  கவனித்துக்கொள்வதற்கான ஒரு பராமரிப்பாளரையும் வைத்திருந்தால் தங்கள் வீடுகளிலே தனிமைப்படுத்தல் சிகிச்சையைத் தேர்வு செய்யலாம்.  

    11:17 (IST)11 May 2020

    போதிய டெஸ்டிங் வசதி இல்லை- புலம்பெயர் தொழிலாளர்களின் வருகையால் பீகார் அரசுக்கு நெருக்கடி

    கடந்த 10 நாளில் மட்டும் 1.10 லட்சம் புலம்பெயர் தொழிலளர்கள் பீகார் மாநிலத்தை வந்தடைந்துள்ளனர். மேலும், கூடுதலாக 85,000 பேர் இந்த மாத இறுதிக்குள் வருவார்கள் என  மதிப்பிடப்பட்டுள்ளது. இது, அந்த மாநிலத்திற்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.   

    அதிகபட்சமாக  ஒரு நாளைக்கு சுமார் 1,800 கொரோனா டெஸ்டிங் செய்யும் அளவிற்கு தான் பீகார் சுகாதாரத் துறையின் திறன் உள்ளது. இதுநாள் வரையில், ஆறு அரசு மருத்துவமனைகள் மற்றும் சுயாதீன அமைப்பான ராஜேந்திர மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் தினமும் சராசரியாக 1,400-1,500 சோதனைகள் எடுக்கப்பட்டு வந்தது.  பணம் செலுத்த விரும்பும் எவருக்கும் சோதனைகள் நடத்த இரண்டு தனியார் ஆய்வகங்களை பீகார் அரசாங்கம் அனுமதித்துள்ளது . 

    11:04 (IST)11 May 2020

    மாநில அரசுகள் சுகாதாரப் பணியாளர்கள் நடமாட்டத்தை தடுக்கக் கூடாது - உள்துறை அமைச்சகம் கடிதம்

    மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், கோவிட் - 19 அல்லாத பிற சிகிச்சைக்கு வருபவர்கள் ஆகியோருக்கான மாநிலங்களுக்கிடையேயான பயணம் உள்ளிட்ட தடையற்ற பயணத்தை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

    09:41 (IST)11 May 2020

    தமிழகத்தில் மே-4 ல் இருந்து கொரோனா தொற்று வளர்ச்சி விகிதம் அதிகரிப்பு

    மே - 4 : 527

    மே - 5 : 508

    மே 6 : 771 

    மே 7 :580

    மே 8 : 600

    மே 9 : 526 

    மே 10: 669 

    09:36 (IST)11 May 2020

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று

    கிர்ஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், அங்கு  தற்போது வரை 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது    

    09:32 (IST)11 May 2020

    சென்னை உட்பட முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவை: இன்று மாலை முன்பதிவு தொடக்கம்

    புது தில்லியில் இருந்து திப்ருகார், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்மு தாவி ஆகிய இடங்களுக்கு பயணிகள் சென்றுவர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில் சேவை விவரங்களை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    09:27 (IST)11 May 2020

    தென்கொரியாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகம்

    கடந்த 48 மணிநேரங்களில் தென்கொரியா நாட்டில்  69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய வாரத்தில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கைக்கு நிகராக கடந்த இரண்டு நாட்கள் எண்ணிக்கை உள்ளது. நேற்று, தலைநகர் சோலில் உள்ள மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை மீண்டும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.  

    09:19 (IST)11 May 2020

    காசராகோட்டு மாவட்டத்தின் கடைசி கொரோனா நோயாளி குணமடைந்தார்

    கேரளாவின் வட மாநிலங்களில் ஒன்றாக காசராகோட்டு மாவட்டத்தில் சிகிச்சை எடுத்து வந்த கடைசி கொரோன நோயாளி நேற்று குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டார். கேரளாவில் மொத்த எண்ணிக்கையில் 35 சதவீத கொரோனா தொற்று (512 ல் 178 )முந்தைய நாட்களில் இந்த மாவட்டத்தில் கண்டறியப்பட்டது.

    09:09 (IST)11 May 2020

    ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிக்கன் பிரியாணி

    ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுகளில் சிகிச்சை பெற்று வரும் வரும் 500 பேருக்கு நேற்று சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.மேலும், மனம் சோர்வு அடையாத வகையில் பல்வேறு உளவியல் ரீதியான ஆலோசனைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    09:05 (IST)11 May 2020

    திருமழிசை காய்கறி சந்தையில் ரூ. 1.50 கோடி அளவில் காய்கறி விற்பனை

    திருமழிசை காய்கறி சந்தையில் நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் ரூ.1.50 கோடி அளவில் காய்கறி விற்பனை நடைபெற்றுள்ளதாக முதன்மை நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.  சென்னை கோயம்பேடு சந்தை கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட நிலையில், காய்கறி கடைகள், சென்னை திருமழிசையில் தற்காலிகமாக மொத்த சந்தை அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  

    09:03 (IST)11 May 2020

    சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுகாதார மைய வசதிகள் குறித்த நிலவரம்

    10/05/2020 தேதியின்படி அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 483 மாவட்டங்களில் 7740 சிகிச்சை மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் இதில் அடங்கும். 656769 தனிமைப்படுத்தல் படுக்கை வசதிகளும், நோய்த் தாக்குதல் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு 305567 படுக்கை வசதிகளும், நோய்த் தாக்குதல் இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு 351204  படுக்கை வசதிகளும், ஆக்சிஜன் உதவி தேவைப்படுபவர்களுக்கு 99492 படுக்கை வசதிகளும் உருவாக்கப் பட்டுள்ளன. ஆக்சிஜன் வசதியுடன் 1696 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவு சிகிச்சைக்கு 34076 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

    08:26 (IST)11 May 2020

    இந்தியாவில் குணமடைவோர் எண்ணிக்கை 30 சதவீதத்தை தாண்டியது

    இந்தியாவில், 66,918  பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றில் இருந்து 3,277 பேருக்கு நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 128 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரழப்பு 2,109  ஆக அதிகரித்துள்ளது.

    இதுவரையில், நோய் தாக்கியவர்களில் 19,357 பேர்  குணமடைந்துள்ளனர் . கடந்த 24 மணி நேரத்தில் 1,511 பேர் குணம் அடைந்துள்ளனர். இதையடுத்து, குணமானவர்கள் எண்ணிக்கை 30 சதவீதத்தை தாண்டியுள்ளது. குணம் அடைபவர்களின் விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களில் 3 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் குணமடைந்து வருகின்றனர்.

    Coronavirus Updates : மாலத்தீவு, மொரீஷியஸ், செஷல்ஸ், மடகாஸ்கர் காமராஸ் ஆகிய நாடுகளுக்கு உணவுப்பொருள்கள், ஹைட்ரோகுளோரிக்வின் மாத்திரைகள் உட்பட, கோவிட்-19 தொடர்பான மருந்துகள், சிறப்பு ஆயுர்வேத மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிக் குழுக்களுடன் இந்தியக் கடற்படைக்கு சொந்தமான கேசரி என்ற கப்பல்,

    புறப்பட்டுச் சென்றது. மிஷன் சாகர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உதவித் திட்டம், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்கும், நோயின் பாதிப்பினால் ஏற்பட்ட சிரமங்களுக்கும்,இந்த நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான மிகச்சிறப்பான உறவுகளை வலுப்படுத்துவதாகவும் உள்ளது.

    இந்திய ரயில்வே பயணிகள் ரயில் சேவையை 30 ரயில்களுடன் நாளை முதல் படிப்படியாக தொடங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.பயணிகள் ரயில்களில் பயணம் செய்வதற்கான இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்றும், ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ள்ளது.மேலும், ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் மூடப்பட்டிருக்கும், கவுண்ட்டர்களில் டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் உட்பட வழங்கப்படாது என்று ரயில்வே தெரிவித்துள்ளது

    Coronavirus Corona Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment