Advertisment

இந்தியாவில் 6 பேருக்கு கொரொனோ பாதிப்பு உறுதி: 4 நாடுகளின் பயணிகளுக்கு விசா ரத்து

ஜெய்பூரில் ஒரு இத்தாலிய சுற்றுலாப் பயணிக்கு செய்த மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு COVID-19 கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியாவில் 6 பேருக்கு கொரொனோ பாதிப்பு உறுதி: 4 நாடுகளின் பயணிகளுக்கு விசா ரத்து

ஜெய்பூரில் ஒரு இத்தாலிய சுற்றுலாப் பயணிக்கு செய்த மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு COVID-19 கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் என உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளன.

Advertisment

இதனால், இந்தியாவுக்கு வருவதற்கு இருந்த இத்தாலி, ஈரான், தென்கொரியா, ஜப்பான் நாட்டு மக்களுக்கு மார்ச் 3 அல்லது அதற்கு முன்னதாக வழங்கப்பட்ட அனைத்து வழக்கமான விசாக்கள் மற்றும் இ விசாக்களை நிறுத்தி வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

டெல்லி-என்.சி.ஆர் பிராந்தியத்தில் திங்கள்கிழமை ஒரு நபர் கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் பரிசோதிக்கப்பட்ட பின்னர், நொய்டாவில் இரண்டு பள்ளிகளில் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கான் மருந்து தெளிக்கப்பட்டது. அந்த பள்ளிகளில் ஒன்று ஒன்று நோயாளியின் குழந்தைகள் படிக்கும் இடம்.

இத்தாலி சுற்றுலாப் பயணியின் முதல் மாதிரி பரிசோதனை சனிக்கிழமை எடுக்கப்பட்டதில் நெகட்டிவ் என தெரியவந்தது. ஆனால் அவரது நிலை மோசமடைந்ததால் அவரது அறிக்கைகள் திங்கள்கிழமை முதல் காத்திருப்பில் இருந்தன. தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் பாஸிட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல, டெல்லியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட ஒரு நாள் கழித்து, நொய்டாவில் உள்ள ஒரு பள்ளியில் நோய்த்தொற்றுவைத் தடுக்கும் மருந்து தெளிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அங்கு COVID-2019 வைரஸ் பாதிப்புக்குள்ளான நோயாளிகளின் குழந்தைகள் படிக்கின்றனர் என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பிறந்தநாள் விழாவை நடத்திய கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளி, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அதோடு, டெல்லி நோயாளியுடன் தொடர்பு கொண்ட மேலும் 6 நபர்கள் ஆக்ராவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவின் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை ஆசியாவைத் தாண்டி மூன்று நாடுகளில் இப்போது 1,000 பேர்களுக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அமெரிக்கா கொரொனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட 6 வது உயிரிழப்பை அறிவித்துள்ளது. இத்தாலி ஈரானில் நோய் பரவுதல அதிகரித்து வருகிறது.

மேலும், நியூயார்க், மாஸ்கோ, பெர்லின் ஆகிய நகரங்களிலும், லாட்வியா, இந்தோனேசியா, மொராக்கோ, துனிசியா, செனகல், ஜோர்டான் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் முதன்முறையாக தாக்கியுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பலி எண்ணிக்கை 3,000 ஆக அதிகரித்துள்ளது. 70 நாடுகளில் 89,000 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக பதிவாகியுள்ளன.

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் நேற்று இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. ஒரு நோயாளி புதுடெல்லியைச் சேர்ந்தவர், இத்தாலியில் இருந்து பயணம் செய்தவர். மற்றவர் தெலங்கானாவைச் சேர்ந்தவர். அவர் துபாய்க்கு சென்றுவந்ததாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட பின்னர், 21 விமான நிலையங்கள், 12 துறைமுகங்கள் மற்றும் 65 சிறு துறைமுகங்களில் பயணிகளைத் திரையிடல் மேற்கொள்ளப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையங்களில் திரையிடப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 12,431 பயணிகள் சிறு மற்றும் பெரிய துறைமுகங்களில் திரையிடப்பட்டுள்ளனர். 23 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதற்கான பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. “சீனா, ஈரான், கொரியா, சிங்கப்பூர் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு நாங்கள் அறிவுறுத்துகிறோம். நிலைமை உருவாகும்போது, பயணக் கட்டுப்பாடுகள் மற்ற நாடுகளுக்கும் மேலும் நீட்டிக்கப்படலாம்” என்று அவர் மேலும் கூறினார்.

இத்தாலிய சுற்றுலாப் பயணி கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாஸிட்டிவ் என்று முடிவு தெரிந்த பிறகு, ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் டாக்டர் ரகு சர்மா, அவருடன் தொடர்பு கொண்ட அனைவரையும் திரையிட சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மூத்த பேராசிரியர்கள் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்களைக் கொண்ட குழு ஜெய்ப்பூர், உதய்பூர், ஜோத்பூர், பிகானேர், மண்டாவா (ஜுன்ஜுனு) மற்றும் ஜெய்சால்மர் ஆகிய இடங்களில் உள்ள ஹோட்டல் மற்றும் உல்லாசப் பயணங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

ஜெய்ப்பூர் தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலர் டாக்டர் நரோட்டம் சர்மா கூறுகையில், 69 வயதான சுற்றுலாப் பயணி தங்கியிருந்த அறை பூட்டப்பட்டுள்ளது. “நடைமுறைக்கு ஏற்ப அறை கிருமி நீக்கம் செய்யப்படும். ஒழுங்காக கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னரே ஹோட்டல் அதிகாரிகள் அதைப் பயன்படுத்த முடியும்” என்று சர்மா கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

India Coronavirus Delhi Italy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment