Advertisment

கொரொனா அச்சம் : பெங்களூருவில் இருந்த அலுவலகத்தை தேனிக்கு மாற்றிய நிறுவனம்!

ரிலொகேஷனின் போது இண்டர்நெட் சரியாக கிடைக்கும் இடம் மற்றும் அதிக வெப்பமான சூழலில் இருந்து தப்பிக்க வேண்டியது என பல்வேறு பிரச்சனைகள் இருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vumonic Data Labs startup relocates to a farm in Tamil Nadu

Vumonic Data Labs startup relocates to a farm in Tamil Nadu

 Ralph Alex Arakal 

Advertisment

Vumonic Data Labs startup relocates to a farm in Tamil Nadu :  இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொரொனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் வுமோனிக் டேட்டா லேப் (Vumonic Data Labs) என்ற நிறுவனம் தங்களின் அலுவலகத்தையே பெங்களூரின் எச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் இருந்து, தேனி மாவட்டத்தின் தேவாரத்திற்கு மாற்றியுள்ளனர். 480 கி.மீ தாண்டி இந்த பகுதியில் நிறுவனத்தை மாற்ற ஏற்பட்டதன் நிர்பந்தம் குறித்து கேட்ட போது, அவர்களின் ஊழியர்களை கொரொனா போன்ற சூழலில் இருந்து பாதுகாத்து வைக்கவே இம்முடிவை எடுத்ததாக கூறியுள்ளனர்.

சில நாட்கள் நாங்கள் ”வொர்க் ஃப்ரம் ஹோம்” ஆப்சனை அளித்தோம். ஆனால் சில நாட்களில் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வருவதை பார்த்தவுடன் அவர்கள் மிகவும் அச்சமடைந்தனர். மேலும் அவர்களின் உறவினர்கள், அவர்களை வீட்டிற்கு திரும்பிவரும்படி கூறியதும் அவர்கள் மேலும் பயந்தனர் என்று அந்நிறுவனத்தின் எச்.ஆர். ஆண்ட்ரியா ஃபெர்னாண்டஸ் கூறியுள்ளார்.

To read this article in English

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

தேவாரம் மலை அடிவாரத்தில் இருக்கும் இந்த பகுதியை அந்நிறுவனத்தின் சி.இ.ஒ-வின் பாட்டியுடையது. எனவே இந்த பகுதியில் மிக விரைவாக ஒரு அலுவலகத்தை உருவாக்கிவிட்டனர். ஆண்ட்ரியா இது பற்றி பேசுகையில் “இந்த மன அழுத்தம் தருகின்ற சூழலில் ஊழியர்களை பாசிட்டிவாக வைக்க இது டெம்ப்ரரி கேட்வேவாக இருக்கும் என்று” அவர் கூறினார். கொரொனா தீவிரம் அதிகரிக்க துவங்கிய நாளில் இருந்து ஊழியர்கள் மிகவும் பாதுகாப்பற்ற தன்மையுடன் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். அதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் வெறும் 8 பேர் மட்டும் தான் இந்த முடிவுக்கு ஒப்புக் கொண்டனர். அவர்கள் இங்கே வந்து தங்களின் அனுபவம் குறித்து மிச்சம் உள்ளவர்களிடம் கூறிய போது அனைவரும் இங்கே வந்துவிட்டோம் என்று அவர் கூறினார். இந்த நிறுவனத்தில் மொத்தம் 12 பேர் தான் வேலை செய்கின்றனர்.

மேலும் படிக்க : கொரொனா அறிகுறிகள் தெரிகின்றதா? உடனே இந்த எண்ணுக்கு அழையுங்கள்…

கடந்த ஆண்டில் இருந்தே கிராமத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் இந்த சமயம் அதனை மிகவும் வேகமாக செயல்படுத்த காரணமாக அமைந்துள்ளது என்று கூறுகிறார் இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஒ அரவிந்த் ராஜூ. நகரங்களில் பொதுமக்கள் அதிக அளவில் இருப்பதால் ட்ராஃபிக், மாசு போன்றவை மிக அதிக அளவில் உள்ளது. கிராமம் அல்லது சிறுநகரங்களில் எங்களின் ஸ்டார்ட்-அப் இருந்தால் அது எங்களின் வொர்க் லைஃபை பேலன்ஸாக வைக்க உதவும் என்று கூறியுள்ளார்.

publive-image

ரிலொகேஷனின் போது இண்டர்நெட் சரியாக கிடைக்கும் இடம் மற்றும் அதிக வெப்பமான சூழலில் இருந்து தப்பிக்க வேண்டியது என பல்வேறு பிரச்சனைகள் இருந்தது. இடத்தை தேர்வு செய்த பிறகு பாய்களை விரித்து மரத்தின் கீழே அமர்ந்து வேலை செய்கின்றோம். எங்கள் வாழ்வில் இது மிகவும் பாசிட்டிவான மாற்றங்களை உருவாக்கும் என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.

மற்ற நிறுவனங்களைப் போல் இல்லாமல், காலையில் உடற்பயிற்சியுடன் இவர்களின் வொர்க்கிங் ஹவர்ஸ் துவங்குகிறது. 5 மணி வரை வேலை செய்யும் இவர்கள், பின்பு ட்ரெக்கிங், நீச்சல் மற்றும் புதிய இடங்களை கண்டுபிடித்தல் என்று சென்றுவிடுகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு நேர்மறையான எண்ணங்கள் தோன்றுவதுடன், வேலைகளும் அதிக உற்சாகத்துடன் செய்வதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

பண்ணையில் இருந்து நேரடியாக காய்களும் பழங்களும் கிடைப்பதால் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து என்னை கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்துக் கொள்கிறேன் என்று இந்த நிறுவனத்தின் பிஸினஸ் அனலிஸ்ட் வெங்கடேஷ் வரன் தெரிவித்துள்ளார். இவர்களின் ஸ்டாடர்ட்அப் இன்ஸ்டாகிளீன் என்பதாகும். இங்கு வந்த நாட்களின் இந்த ஆப்பின் டவுன்லோடு 5000 அதிகமாகியுள்ளதாக அறிவித்துள்ளனர். இவர்கள் இப்போது வரை மீண்டும் பெங்களூருக்கு எப்போது திரும்பிச் செல்ல உள்ளனர் என்பது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”  

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment