Advertisment

தமிழகத்தில் அதிகபட்சமாக 22 ஹாட்ஸ்பாட் மாவட்டங்கள்: மத்திய அரசு புள்ளிவிவரம்

கடந்த 28 நாட்களில், கொரோனா தொற்று கண்டறியப்படாத பகுதிகள் கிரீன் ஜோன்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus india cases, coronavirus covid-19 india hotspots,india coronavirus news, covid 19 tracker, covid 19 india tracker, coronavirus latest news, covid 19 india, coronavirus latest news, coronavirus india, coronavirus india news, coronavirus india live news, coronavirus in india, coronavirus in india latest news, coronavirus latest news in india, coronavirus cases, coronavirus cases in india, coronavirus lockdown, coronavirus india update, coronavirus india state wise

Abantika Ghosh , Karishma Mehrotra 

Advertisment

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், புதன்கிழமை (ஏப்ரல் 15) பாதிப்பை பொறுத்துல நாட்டில் உள்ள 170 மாவட்டங்களை, கொரோனா ஹாட்ஸ்பாட்களாக அறிவித்துள்ளது. இவற்றில், 123 மாவட்டங்களில் அதிகளவில் பாதிப்பு இருப்பதாகவம், 47 மாவட்டங்களில் பாதிப்பு மிக கடுமையாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 207 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இருந்தபோதிலும் அவை ஹாட்ஸ்பாட்களாக அறிவிக்கப்படவில்லை. இந்த பகுதிகளிலும் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையிலும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலங்களாக வகுத்து அங்கு தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக நடைபெற்று வருவதால், அது ஹாட்ஸ்பாட்களாக மாற வாய்ப்பு குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,118 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 1,344 பேர் குணமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,933 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிற்கு இதுவரை 392 பேர் பலியாகியுள்ள்ளனர். இவர்களில் 39 பேர் கடந்த 24 மணிநேரத்தில் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை, 2,74,599 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் 28,941 மாதிரிகள், கடந்த 24 மணிநேரத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன.

publive-image

ஏப்ரல் 12ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா அதிக பாதிப்பு கொண்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 354 ஆக இருந்த நிலையில், தற்போது அது 377 (170 ஹாட்ஸ்பாட்கள் மற்றும் 207 ஹாட்ஸ்பாட்கள் அல்லாதவை) ஆக அதிகரித்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 11 புதிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள மாநிலங்களில் 80 சதவீத கொரோனா பாதிப்பு கொண்ட பகுதிகளையும், மாநிலங்களிடயே 80 சதவீத கொரோனா பாதிப்பு கொண்ட மாவட்டங்களையுமே, மத்திய அரசு கொரோனா ஹாட்ஸ்பாட்களாக நிர்ணயித்துள்ளதாக மாநிலங்களுக்கு மத்தி சுகாதாரத்துறை செயலாளர் பிரீதி சுதன் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹாட்ஸ்பாட் பகுதிகளில், பாதிப்பு எண்ணிக்கை, 4 நாட்களுக்குள்ளாகவே, இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

publive-image

5 மற்றும் அதற்கு மேற்பட்ட ஹாட்ஸ்பாட் பகுதிகளை கொண்டதாக 16 மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திரா (11), அசாம் (5), டெல்லி (10), குஜராத் (6), ஹரியானா (6), இமாச்சலபிரதேசம் (5), ஜம்மு மற்றும் காஷ்மீர் (8), கர்நாடகா (8), கேரளா (7), மத்தியபிரதேசம் (6), மகாராஷ்டிரா (14), பஞ்சாப் (8), ராஜஸ்தான் (12), தமிழ்நாடு (22), தெலுங்கானா (9) மற்றும் உத்தரபிரதேசம் (13)

இந்த 16 மாநிலங்களில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா மற்றும் டெல்லி பகுதிகளில், கிட்டத்தட்ட 50 சதவீத ஹாட்ஸ்பாட் பகுதிகள், கட்டுப்பாட்டு மண்டலங்களிலேயே இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவின் கர்னுல், குண்டூர், ஹரியானாவின் சண்டிகர், கேரளாவின் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், ஜம்மு காஷ்மீரின் ஜம்மு, மகாராஷ்டிராவின் அவுரங்காபாத், பஞ்சாபின் ஜலந்தர்,தமிழநாட்டின் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் உள்ள ஹாட்ஸ்பாட்கள் ஆகும்.

டெல்லியை தவிர்த்து, மும்பை, அகமதாபாத், புனே, ஜெய்ப்பூர், சென்னை, ஐதராபாத் உள்ளிட்டவைகள் மற்ற மாநிலங்களில் உள்ள முக்கிய ஹாட்ஸ்பாட்கள் ஆகும்.

publive-image

மாவட்டவாரியாக பாதிப்பு எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், ஏப்ரல் 12ம் தேதி நிலவரப்படி, இந்த ஹாட்ஸ்பாட்களில், நாட்டின் 87 சதவீத பாதிப்பு கொண்டவர்கள் உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 12ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் மேற்பட்டு இருப்பின் அது பெரிய பாதிப்பு இடங்களாக வரையறுக்கப்பட்டன. கடந்த ஏப்ரல் 6 முதல் 12ம் தேதி வரையிலான காலகட்டத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே (79 சதவீதம்), புனே (67 சதவீதம்), மும்பை (65 சதவீதம்) மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 68 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 6 முதல் 12ம் தேதி வரையிலான காலகட்டத்தில், மகாராஷ்டிராவில் (7), தமிழ்நாட்டில் (5), ராஜஸ்தானில் 4, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 3 என 35 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 50 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், மாநிலங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டில் இதுவரை சமூக பரிமாற்றத்தின் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை.

கடந்த 28 நாட்களில், கொரோனா தொற்று கண்டறியப்படாத பகுதிகள் கிரீன் ஜோன்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு மண்டலப்பகுதிகளில் அந்தந்த மாநிலங்களின் தலைமைச்செயலாளர்கள், போலிஸ் டிஜிபிக்கள் உள்ளிட்டோர் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும்.

தொற்று உள்ளவர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள், அவர்கள் சார்ந்த பகுதிகள் உள்ளிட்டவைகளை சீலிட வேண்டும். தொற்று கொண்டவர்களை தனிமைப்படுத்துவதோடு மட்டுமல்லாது மேலும் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 12ம் தேதி நிலவரப்படி, 5க்கும் மேற்பட்ட கெரோனா பாதிப்பு கொண்ட மாவட்டங்களின் பட்டியல் 178 ஆக இருந்தது. இதில் தமிழகத்தில் 26, உத்தரபிரதேசத்தில் 16, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவில் தலா 14, ராஜஸ்தானில் 13, கேரளாவில் 12, டெல்லி மற்றும் கர்நாடகாவில் தலா 11, ஆந்திராவில் 10, ஜம்மு காஷ்மீரில் தலா 8, குஜராத் மற்றும் மத்தியபிரதேசத்தில் தலா 6, ஹரியானாவில் 2, உத்தர்காண்டில் 2, அசாம், பீகார், சட்டீஸ்கர்ல கோவா. ஜார்க்கண்ட், லடாக் மற்றும் ஒடிசாவில் தலா 1 என இருந்தது.

ஏப்ரல் முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 400 முதல் 500 வரை இருந்தது. இரண்டாவது வாரத்தில் இது 800 வரை சென்றது. செவ்வாய்க்கிழமை மட்டும் இதன் அளவு 1,463 வரை சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 8 முதல் 14 வரையிலான காலகட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,114 என்ற அளவிலிருந்து 10,815 ஆக அதிகரித்தது. ஏப்ரல் 3ம் தேதி நிலவரப்படி ஒவ்வொரு 50 சோதனைகளிலும் 2 கொரோனா பாசிட்டிவ் இருந்தது கண்டறியப்பட்டது.

கொரோனா தொற்று பரவலில், தென் கொரியாவிற்கு பின்னால் இருந்த தென்கொரியா எப்ரல் 12ம் தேதி ( 42வது நாளில்) தென்கொரியாவை மிஞ்சியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை படிக்க...

India Corona Virus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment