விடை பெற்ற தாய்; உடலை தொடக்கூட தயங்கினார்கள்

சுகாதார ஊழியர்கள் உதவ முயற்சித்தாலும், வெளிப்பாடுகள் அனைத்தும் அவர்கள் மனதில் இருக்கும் பயத்தை தெளிவுபடுத்துகிறது. 

Poes Garden, Teynampet, Jothi Kannagi Nagar , man slept in parkiing area killed ,

கடந்த மார்ச் 29ம் தேதி, பஞ்சாப் லூதியானா மாவட்டத்தின் சக்கி என்ற கிராமத்தில் மரணமடைந்த ஒருவரின் உடலைத் தொட குடும்பத்தினரும், நண்பர்களும் மறுத்துவிட்டனர். காரணம், நாவல் கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சம். எதனால் இவர் உயிர் பிரிந்தது? சில நாட்களாக இவரின் இருமல் மற்றும் காய்ச்சல் பின்னணியில் உள்ள காரணம் என்ன ? மருத்துவ பரிசோதனை முடிவுகள் எங்கே?    என்ற அடுக்கடுக்கான கேள்விகளை கிராம மக்களிடமிருந்து  எழுப்பப்பட்டது. விஷயம் அறிந்த மாநில சுகாதாரத் துறை, உடனடியாக தலையிட்டு அச்சங்களைத் தீர்த்த பின்னரே உடல் தகனம் செய்யப்பட்டது.

என்ன நடந்தது?

மார்ச் 29ம் தேதி லூதியானா மாவட்டம் தனது முதல் கொரோனா வைரஸ் மரணத்தை பதிவு செய்த அடுத்த நாளே, அமர்புரா பஸ்தி பகுதியைச் சேர்ந்த 42 வயது  நிரம்பிய இந்த  பெண், பாட்டியாலா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இறந்தார். இரவோடு இரவாக, சரியாக அதிகாலை 1.30 மணிக்கு, இரு மகன்கள் மற்றும் சில போலீஸ்காரர்களின் முன்னிலையில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை கையாளுவது தொடர்பான விரிவான நெறிமுறையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட போதிலும், அது தொடர்பான விழிப்புணர்வு நமது சுகாதாரத் துறை மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் போதிய அளவில் இல்லை.

கொரோனா வைரஸ்: இறந்த நோயாளியை எப்படி கையாள்வது?

இதன் விளைவாக, கொரோனா வைரசால் இறந்தவர்களின் இறுதி சடங்குகளில்  தொற்று ஒட்டிக்கொள்ளும் என்ற அச்சம் பொதுவாக அதிகரித்து வருகிறது. இந்த ஒரு பயம், அந்த குடும்பத்தினரின் அடிப்படை உணர்ச்சியைக் கூட புரிந்து கொள்ள முடியாமல் செய்கின்றது.

அவரின் மகன் சந்தீப் சிங், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில்,”மணிக்கணக்காக , என் தாயின் உடலைத் தொட மருத்துவமனை ஊழியர்கள் யாரும் தயாராக இல்லை, உடலை பெறுவதற்கு கூட நாங்கள் அவதியடைந்தோம்” என்று தெரிவித்தார்.

மருத்துவமனையின் சுகாதார ஊழியர்கள் முதல் இளைநிலை மருத்துவர்கள் வரை எனது தாயின் உடலைத் தொடுவதற்கு பயந்தார்கள். நமக்கும் கொரோனா வைரஸ் தொற்று என்ற அவர்களின் முணுமுணுப்பு எனது  காதில் கேட்டுக் கொண்டிருந்தது. ஏன்…… அவர்களில் சிலர், “ஏன் நீங்கள் இருவருமே உடலை பேக் செய்ய வேண்டியதுதானே”    என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அங்கு பணியாற்றும் மூத்த மருத்துவர் தலையிட்டு, சரியாக சிப் (Zip) பேக்கை பயன்படுத்தி, குறைந்தபட்ச தொடுதலுடன் உடலைக் கையாண்டால் தொற்று பரவாது என்ற அறிவுரையை வழங்கினார். இருப்பினும், ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பயம் விலகியாதாக தெரியவில்லை,” என்றார் சந்தீப்.

“பல மணிநேர காத்திருப்புக்குப் பிறகுதான் பாதுகாப்பு உடைகள் அணிந்த இரண்டு சுகாதார ஊழியர்கள் உடலை கசிவு இல்லாத சிப் பேக்கினில் வைத்தனர். அதன் பின்னர்  கூட, நானும் என் சகோதரனும் உடலைத் தூக்கி தகன வாகனத்தில் வைத்தோம்.

ஆங்கிலத்தில் படிக்க: Lonely farewells amid virus fear: ‘For hours, no one at hospital touched my mother’s body out of fear’

சுகாதார ஊழியர்கள் உதவ முயற்சித்தாலும், வெளிப்பாடுகள் அனைத்தும் அவர்கள் மனதில் இருக்கும் பயத்தை தெளிவுபடுத்துகிறது.

நாங்கள் இரவு 9 மணியளவில் பாட்டியாலாவை விட்டு வெளியேறி , அதிகாலை 1.30 மணிக்கு லூதியானாவில் உடல் தகனம் செய்யப்பட்டது. உறவினர்களும்,  நண்பர்களும் தகன மைதானத்திற்கு வர வேண்டாம் என்று எங்களுக்கு கூறப்பட்டது,”என்றார்.

எவ்வாறாயினும், தகன மைதானத்தில், சமூக தூரம், குறைந்தபட்ச தொடர்பு போன்ற நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

“நான், என் சகோதரர் மற்றும் சில காவதுறையினர் மட்டும்  தகனத்தில் கலந்து கொண்டோம். உடலுக்கு தீ மூட்டிய அடுத்த நிமிடமே, அந்த இடத்திலிருந்து உடனடியாக புறப்படும்படி எங்களுக்கு கூறப்பட்டது. மருத்தவமனையில் கட்டப்பட்ட எனது தாயின் உடலுக்கு எந்த சடங்கும் முறையாக செய்யவில்லை….. ஏன் முகத்தைக் கூட  கடைசியாய் பார்க்கவில்லை” என்று கண் கலங்கினார் சந்தீப் சிங்

மேலும், “தனது தாயின் மரணத்திற்குப் பிறகு, இந்த சமூகத்தில் நாங்கள் இருவரும் பல சமூக  துஷ்பிரயோகங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்ட எங்கள் தாயை, கவனித்தது எங்களது தவறா? வேறு யாரால் கவனிக்க முடியும்? தந்தை உயிருடன் இல்லை. இந்த செயல்முறையில், கொரோனா வைரஸ் தொற்று வந்தாலும், அது எங்களை குற்றவாளிகளா மாற்றுமா ?  என்றும் வினவுகிறார்.

லூதியானா சிவில் மருத்துவமனையின் ஏற்பாடுகள் குறித்து அவர் கூறுகையில் : “மார்ச் 29ம் தேதி மாலை நேரத்தில், மருத்துவமனையில் அனுமதித்தோம். நான்கு மணி நேரமாக  முறையான எந்த சிகிச்சையும்  வழங்கவில்லை.  கொவிட்-19 நோயாளிகளை சமாளிக்க லூதியானா மருத்துவமனையில் எந்த முன்னேற்பாடுகளும் இல்லை. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு கொண்டு செல்வதிலே பொழுது கழிந்தது. உண்மையில், துன்பப்படுத்தினார்கள்.

இறுதியாக அதிகாலை 2 மணியளவில் அவர் பாட்டியாலா அரசு மருத்துவனமைக்கு  அழைத்துச் சென்றோம். லூதியானா மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் இல்லை. நாங்கள் அதை சொந்தமாக ஏற்பாடு செய்தோம்.

பாட்டியாலா மருத்துவமனையில் அடுத்த நாள் எனது அம்மா இயற்கை எய்தினார். என்னால் தாங்கிக் கொள்ள முடியாத சம்பவம் என்னென்றால், ” மருத்துவமனையில் என் அம்மா இறந்துவிட்டார் என்று தகவல் எங்களுக்கு முறையாக  தெரிவிக்க வில்லை. நாங்கள் வழக்கம் போல் பார்க்கச் சென்ற போது, எனது தாயின் முகம் வெள்ளை ஷீட்டால் முகம் மூடப்பட்டிருந்தது. நாங்கள் உடனடியாக கேள்வியை  எழுப்பினோம். அப்போதுதான் இறந்த செய்தியை  எங்களுக்கு கூறுகிறார்கள்,”என்று சந்தீப் வேதனையடைந்தார்.

லூதியானா சிவில் சர்ஜன் ராஜேஷ் பாகா கூறுகையில், “கொரோனா வைரஸ் நோயாளிகளின் இறுதி சடங்குகள் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி செய்யப்படுகின்றன.  உடலுடன் குறைந்தபட்ச தொடர்பு மற்றும் தகன மைதானத்தில் சமூக தூரம் ஆகியவை முக்கியம். தீமூட்டுதல், நல்லடக்கம் ஆகிய இரண்டும் வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்படுகின்றன. எவ்வாராயினும், அடக்கம் செய்யப்படும் போது, இயல்பை விட ஆழமாககுழி தோண்டுவது நல்லது,” என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மின்சார/எல்பிஜி பயன்ட்படுத்தி  செய்யும் தகனங்களின் பட்டியல்களைத் தயாரிக்க சுகாதார ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பஞ்சாப் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், பாட்டியாலா அரசு மருத்துவக் மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் துணை சுகாதார  ஊழியர்கள், தங்களுக்கு போதுமான பாதுக்கப்பு சாதனங்கள் கொடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். மேலும், தங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள் குறைபாடுடையவை  என்றும்  குற்றம் சாட்டினர்.  இந்த குற்றச்சாட்டு வீடியோ  சமூக ஊடக தளங்களில் வைரலாகியது.

லூதியானா மருத்துவமனையில் எந்தவொரு முறையான  சாதனங்கள் இல்லாமல், ஒரு நோயாளியைக் கையாண்டதாக செவிலியர் ஒருவர் இந்த வீடியோவில் குறிபிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்குப் பிறகு, அவரது உடல் மணிக்கணக்கில் கவனிக்கப்படாமல் கிடந்ததாகவும் கூறியுள்ளார்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coronavirus death covid 19 body disposal guidelines coronavirus social stigma

Next Story
சுழல் விளக்கு கலாச்சாரத்துக்கு முடிவு… நாட்டில் உள்ள அனைவருமே ‘விஐபி-கள்’ தான்… வெங்கையா நாயுடு விளக்கம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com