Advertisment

தமிழர்களுக்கு பினராயி அரசு உறுதி: ‘வீடுகளை காலி செய்யக் கூறினால், பஞ்சாயத்தில் புகார் செய்யுங்கள்

கேரளாவில் 1,41,211 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,40, 618 பேர் வீடுகளிலும், 593 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus Kerala fights COVID19 100th day special report in Tamil

Coronavirus Kerala fights COVID19 100th day special report in Tamil

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், கேரளாவில் வாழும் தமிழர்களுக்கு  பல்வேறு சலுகைகள் மாநில அரசு அறிவித்துள்ளது.

Advertisment

1.குடியிருக்கும் வீட்டின்/கட்டிடத்தின் உரிமையாளர் வெளியேற்ற முயற்சி செய்தால், உள்ளூர் பஞ்சாயத்தில்/முனிசிப்பாலிடியில் புகார் தெரிவிக்கலாம். கொரானா பாதிப்பு முடியும் வரையில், யாரும் வெளியேற்றப் படமாட்டார்கள்.

2. உணவு பெறுவதில் சிரமம் ஏற்பட்டால் உள்ளூர் பஞ்சாயத்தில், மக்கள் உணவகங்கள் மூலம் 20 ரூபாய்க்கு உணவு தயார் செய்து தரப்படுகிறது. இதற்கு, அந்த பகுதி வார்டு மெம்பரை தொடர்பு கொண்டால் போதுமானது.

3. அங்கே உணவு வாங்க பணம் இல்லையென்றாலும், அவர் உங்களுக்கு உணவை/உணவு பொருட்களை இலவசமாக பெற்றுத்தருவார்.

கேரளாவில் நேற்று (29ம் தேதி) மேலும் 20 பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறினார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில் நேற்று மட்டும் மேலும் 20 பேருக்கு கோவிட் 19 உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 8 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 7 பேர் காசர்கோடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த தலா ஒருவருக்கு இந்நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் உறுதி செய்யப் பட்டவர்களில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மற்ற 2 பேருக்கு அவர்கள் மூலம் நோய் பரவியுள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் நோய் கண்டுபிடிக்கப்பட்டவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு சுகாதாரத்துறை ஊழியருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தலின் போது, குடும்பத்துடன் மீண்டும் இணைந்திருக்க எளிய வழிகள்!

பத்தனம்திட்டா வில் சிகிச்சையில் இருந்த 4 பேரின் பரிசோதனை முடிவு நெகட்டிவவாகி உள்ளது. கேரளாவில் இதுவரை 202 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கேரளாவில் 1,41,211 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,40, 618 பேர் வீடுகளிலும், 593 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். நோய் அறிகுறி உள்ள 6690 பேரின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் 5518 பேரின் பரிசோதனை முடிவு நெகட்டிவ் ஆக உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தலின் போது பிறந்த நாள் வந்தால்? எப்படி சிறப்பாக கொண்டாடுவது?

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment